மலேசிய தலைநகரங்களின் பட்டியல்
மலேசிய தலைநகரங்களின் பட்டியல் ஆங்கிலம்: List of capitals in Malaysia; மலாய்: Senarai ibu kota di Malaysia) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது மலேசியாவின் தேசிய, மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களின் பட்டியல் ஆகும்.
மலேசியாவில் உள்ள மாநிலங்களில் மலாக்கா, பினாங்கு, சபா, சரவாக் மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் அரசமைப்புக்கு உட்பட்ட முடியரசு மாநிலங்கள் ஆகும். மலாக்கா, பினாங்கு, சபா, சரவாக் மாநிலங்கள் அரசமைப்புக்கு உட்பட்ட முடியரசு அல்லாத மாநிலங்கள்.
அந்த மாநிலங்களில் கவர்னர் எனும் ஆளுநர் தலைவராக இருக்கிறார் அல்லது யாங் டி பெர்துவா என்பவர் தலைவராக உள்ளார்.[1]
அரசமைப்புக்கு உட்பட்ட முடியரசு மாநிலங்களில், அரச நகரங்கள் அல்லது அரசத் தலைநகரங்கள் போன்றவை அடங்கும். அந்த நகரங்களில் அரசர்களின் அரண்மனைகள் அல்லது அதிகாரப்பூர்வ அலுவல்முறை உறைவிடங்களும் இருக்கும்.
இந்த அரசத் தலைநகரங்கள், மாநில நிர்வாகத் தலைநகரங்களில் இருந்து அப்பாற்பட்டவை. மாநில நிர்வாகத்தை மாநில அரசாங்கங்கள் செயல்படுத்துகின்றன.[2][3]
மலேசிய மாநிலங்களின் தலைநகரங்கள்
[தொகு]மாநிலங்கள் | நிர்வாகத் தலைநகரம் | அரசத் தலைநகரம் | வரலாற்றுத் தலைநகரம் |
---|---|---|---|
ஜொகூர் | ஜொகூர் பாரு | மூவார் | ஜொகூர் லாமா, கோத்தா திங்கி |
கெடா | அலோர் ஸ்டார் | அலோர் ஸ்டார் (அனாக் புக்கிட்) | லெம்பா பூஜாங் |
கிளாந்தான் | கோத்தா பாரு | கோத்தா பாரு | கோத்தா லாமா |
மலாக்கா | மலாக்கா மாநகரம் | - | |
நெகிரி செம்பிலான் | சிரம்பான் | செரி மெனாந்தி | |
பகாங் | குவாந்தான் | பெக்கான் | கோலா லிப்பிஸ் (1898–1953) |
பினாங்கு | ஜார்ஜ் டவுன் | - | |
பேராக் | ஈப்போ | கோலாகங்சார் | தெலுக் இந்தான் (1528 - 1877), தைப்பிங் (1875 - 1937) |
பெர்லிஸ் | கங்கார் | ஆராவ் | |
சபா | கோத்தா கினபாலு | - | கூடாட் (1882–1883), சண்டாக்கான் (1883–1946) |
சரவாக் | கூச்சிங் | - | |
சிலாங்கூர் | ஷா ஆலாம் | கிள்ளான் | கோலா சிலாங்கூர், ஜுக்ரா, கோலாலம்பூர் (1880–1978) |
திரங்கானு | கோலா திரங்கானு | கோலா திரங்கானு |
மலேசிய மாவட்டங்களின் தலைநகரங்கள்
[தொகு]மலேசியாவின் தேசியத் தலைநகரமாக கோலாலம்பூர் விளங்குகிறது. பண்பாடு, வணிக, நிதித் துறைகளின் தலையாய மையமாகவும் விளங்குகிறது. மலேசிய நாடாளுமன்றமும், மாமன்னரின் அதிகாரப்பூர்வமான அரச மனையும் கோலாலம்பூரில் தான் அமைந்துள்ளன.
2001-ஆம் ஆண்டில், நடுவண் அரசின் நிர்வாகத் துறைகள் கோலாலம்பூரில் இருந்து புத்ராஜெயாவிற்கு இடப்பெயர்வு செய்யப்பட்டன. புத்ராஜெயாவை ஒரு நிர்வாகத் தலைநகரம் என்றும் அழைக்கிறார்கள்.
புத்ராஜெயா, லபுவான் ஆகிய இரண்டும், மலேசியாவின் கூட்டரசுப் பிரதேசங்கள் என சிறப்புச் சலுகைகளைப் பெறுகின்றன.
மலேசிய அரசாங்கம் 2013-ஆம் ஆண்டில் 2010 ஆண்டுக்கான மக்கள் தொகை புள்ளிவிவரங்களை வெளியிட்டது. மலேசிய மாவட்டங்களின் மக்கள் தொகை அடிப்படையில், மாநகரங்கள் அல்லது நகரங்களின் தரப் பட்டியல் இங்கே தரப்படுகிறது. இந்தப் புள்ளி விவரங்கள் மலேசியாவின் 2010 பொது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இருந்து பெறப்பட்டவை.
ஜொகூர்
[தொகு]மாவட்டங்கள் | தலைநகரம் | மற்ற முக்கிய நகரங்கள் | |
---|---|---|---|
ஜொகூர் | |||
பத்து பகாட் மாவட்டம் | பத்து பகாட் நகரம் | யோங் பெங் | |
ஜொகூர் பாரு மாவட்டம் | ஜொகூர் பாரு | கேலாங் பாத்தா, பாசிர் கூடாங், தெப்ராவ், நூசாஜெயா | |
குளுவாங் மாவட்டம் | குளுவாங் | சிம்பாங் ரெங்கம் | |
கோத்தா திங்கி மாவட்டம் | கோத்தா திங்கி | பெங்கேராங் | |
கூலாய் மாவட்டம் | கூலாய் | செனாய் | |
மெர்சிங் மாவட்டம் | மெர்சிங் | ||
மூவார் மாவட்டம் | மூவார் | பாகோ | |
தங்காக் மாவட்டம் | தங்காக் | புக்கிட் கம்பிர் | |
பொந்தியான் மாவட்டம் | பொந்தியான் கிச்சில் | பெக்கான் நானாஸ் | |
சிகாமட் மாவட்டம் | சிகாமட் | லாபிஸ் |
கெடா
[தொகு]கிளாந்தான்
[தொகு]மலாக்கா
[தொகு]மாவட்டங்கள் | தலைநகரம் | மற்ற முக்கிய நகரங்கள் | |
---|---|---|---|
மலாக்கா | |||
அலோர் காஜா மாவட்டம் | அலோர் காஜா | மஸ்ஜித் தானா, புலாவ் செபாங் | |
மத்திய மலாக்கா மாவட்டம் | மலாக்கா மாநகரம் | பத்து பிரண்டாம், ஆயர் குரோ, சுங்கை ஊடாங், பாயா ரும்புட் | |
ஜாசின் மாவட்டம் | ஜாசின் | அசகான், மெர்லிமாவ் |
நெகிரி செம்பிலான்
[தொகு]பகாங்
[தொகு]பினாங்கு
[தொகு]பேராக்
[தொகு]பெர்லிஸ்
[தொகு]மாவட்டங்கள் | தலைநகரம் | மற்ற முக்கிய நகரங்கள் | |
---|---|---|---|
பெர்லிஸ் | |||
பெர்லிஸ் | கங்கார் | ஆராவ், பாடாங் பெசார், கோலா பெர்லிஸ் |
சபா
[தொகு]சரவாக்
[தொகு]சிலாங்கூர்
[தொகு]திராங்கானு
[தொகு]மாவட்டங்கள் | தலைநகரம் | மற்ற முக்கிய நகரங்கள் | |
---|---|---|---|
திரங்கானு | |||
பெசுட் மாவட்டம் | கம்போங் ராஜா | ஜெர்த்தே, கோலா பெசுட் | |
டுங்குன் மாவட்டம் | கோலா டுங்குன் | பண்டார் அல்-முக்தாபி பில்லா சா | |
உலு திராங்கானு மாவட்டம் | கோலா பேராங் | அஜீல் | |
கெமாமான் மாவட்டம் | சுக்காய் | கெர்த்தே, கிஜால் | |
கோலா திராங்கானு மாவட்டம் | கோலா திராங்கானு | பத்து ராக்கிட் | |
மாராங் மாவட்டம் | மாராங் | ||
செத்தியூ மாவட்டம் | பண்டார் பரமேசுவரி |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Malaysia has two geographical regions divided by the South China Sea , the Peninsular Malaysia or West Malaysia and Malaysian Borneo or East Malaysia. All the cities of Malaysia fall under these two regions stretching from 2?30° N and 112?30° E.
- ↑ Major cities - population: KUALA LUMPUR (capital) 1.556 million; Klang 1.19 million; Johor Bahru 1.045 million (2011).
- ↑ Top 20 biggest cities in Malaysia.