ஆராவ்
ஆராவ்
அரச நகரம் | |
---|---|
Arau Bandar Diraja | |
பெர்லிஸ் | |
ஆள்கூறுகள்: 6°26′N 100°16′E / 6.433°N 100.267°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பெர்லிஸ் |
உருவாக்கம் | 1900 |
அரசு | |
• ஊராட்சி அரசு | கங்கார் நகராட்சி மன்றம் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | mpkangar |
ஆராவ் அரச நகரம் (மலாய்: Arau Bandar Diraja; ஆங்கிலம்: Arau Royal Capital) என்பது மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள நகரம்; மற்றும் இது ஓர் அரச நகரம் ஆகும். பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகரமான கங்கார் நகரில் இருந்து தென்கிழக்காக 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
இங்கு பெர்லிஸ் ராஜாவின் (House of Jamalullail Perlis) அரண்மனையும், அரச பள்ளிவாலும் (Royal Palace) உள்ளன. கோலாலம்பூரில் இருந்து தொடர்வண்டி மூலமாக லங்காவி (Langkawi) தீவிற்குச் செல்ல விரும்பும் சுற்றுப் பயணிகள் ஆராவ் நகரில் இறங்கி, அதன் பின்னர் கோலா பெர்லிஸ் செல்கின்றனர். அங்கிருந்து லங்காவி தீவிற்குப் படகுகள் மூலமாகச் செல்ல வேண்டும்.
பொது
[தொகு]மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது. மாரா தொழில்நுட்பக் கழகம் என்று முன்பு அழைக்கப்பட்டது. 1999-ஆம் ஆண்டு பலகலைக்கழகத் தகுதியைப் பெற்றது. இப்பல்கலைக்கழகத்தில் 6747 மாணவர்கள் பயில்கின்றனர்.[1]
பெர்லிஸ் ராஜா
[தொகு]பெர்லிஸ் ராஜா (Raja of Perlis) (House of Jamalullail);என்பவர் மலேசியா; பெர்லிஸ் மாநிலத்தின் ஆட்சியாளரின் அரச பட்டத்திற்குச் சிறப்பு பெறுபவர் ஆகும். பெர்லிஸ் மாநிலத்தின் மன்னர்களை ராஜா (Raja) என்று அழைக்கிறார்கள். சுலதான் என்று அழைப்பது இல்லை.
சுல்தான் என்ற பட்டத்துடன் பரம்பரை ஆட்சியாளர்களைக் கொண்ட பிற மலேசிய மாநிலங்களைப் போல் அல்லாமல், பெர்லிஸ் பரம்பரை ஆட்சியாளர்கள் ராஜா என்ற பட்டத்துடன் அழைக்கப் படுகிறார்கள். இந்த அரச நடைமுறை 1843-ஆம் ஆண்டில் இருந்து பின்பற்றப்படுகிறது. [2]
சமாலுலாயில் அரச வம்சாவளி
[தொகு]1843-ஆம் ஆண்டில், கெடா மாநிலத்தில் இருந்து பெர்லிஸ் பிரிந்து செல்வதற்கு அப்போதைய கெடா அரசர், சுல்தான் அகமத் தாஜுடின் II (Sultan Ahmad Tajuddin II) என்பவர் ஒப்புதலை வழங்கினார். அந்த ஒப்புதலுக்குப் பின்னர் பெர்லிஸ் ராஜா எனும் பட்டப் பெயருடன் சமாலுலாயில் அரச வம்சாவளி (House of Jamalullail) தோற்றுவிக்கப்பட்டது.[3][4]
பெர்லிஸ் ராஜா வரலாறு
[தொகு]பெர்லிஸ் ராஜா, மலேசியாவின் மாமன்னர் யாங் டி பெர்துவான் அகோங் பதவிக்கு தகுதி பெறும் ஒன்பது மலாய் ஆட்சியாளர்களில் ஒருவர் ஆவார். அத்துடன் அந்த ஒன்பது மலாய் ஆட்சியாளர்களில் ஒருவர்தான் யாங் டி பெர்துவான் அகோங் (Yang di-Pertuan Agong) பதவிக்கு தேர்வும் செய்யப் படுகிறார்.
சயாமியர்களின் ஆளுமை
[தொகு]பல்வேறு காலக் கட்டங்களில் சயாமியர்களின் ஆளுமையின் கீழ் பெர்லிஸ் மாநிலம் இயங்கி வந்துள்ளது. ஆனால், வரலாற்றின்படி பெர்லிஸ் மாநிலம் கெடா மாநிலத்திற்குச் சொந்தமான ஒரு நிலப்பகுதி ஆகும். கெடா சுல்தான்கள் பெர்லிஸ் மாநிலத்தைத் தங்களின் ஒரு பகுதியாகவே ஆட்சி செய்து வந்துள்ளனர். இருப்பினும் 1821-ஆம் ஆண்டு, கெடா மாநிலத்தை சயாமியர்கள் கைப்பற்றினர்.
கெடா, பெர்லிஸ் மாநிலங்கள், சில ஆண்டுகள் சயாமியர்களின் ஆட்சியின் கீழ், தனித்தனி மாநிலங்களாக இயங்கி வந்தன. 1842-ஆம் ஆண்டு, கெடா மாநிலம் மீண்டும் கெடா மாநில சுல்தானிடமே கொடுக்கப் பட்டது. 1842-ஆம் ஆண்டுக்குப் பின்னர், பெர்லிஸ் மாநிலம் கெடா மாநிலத்தின் ஒரு நிர்வாக மாநிலமாக மாறியது.
பிரித்தானியர்களின் நிர்வாகம்
[தொகு]1909-ஆம் ஆண்டு ஆங்கிலோ-சயாமிய உடன்படிக்கை கையெழுத்தானது. அதன்படி பெர்லிஸ் பிரித்தானியர்களிடம் ஒப்படைக்கப் பட்டது.
1942-இல் ஜப்பானியர்கள் படையெடுத்த போது பெர்லிஸ் மநிலம் மறுபடியும் சயாமியர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. ஜப்பானியர்கள் சரண் அடைந்ததும் பெர்லிஸ் திரும்பவும் பிரித்தானியர்களின் கைவசம் வந்தது. 1957ஆம் ஆண்டு சுதந்திரம் அடையும் வரையில் பிரித்தானியர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது.
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Arau பரணிடப்பட்டது 2012-02-05 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [Universiti Teknologi MARA, Cawangan Perlis, Kampus Arau, 02600 Arau, Perlis.]
- ↑ J. M. Gullick, Rulers and Residents: Influence and Power in the Malay States, 1870-1920, pg 358
- ↑ "Tempat Bersemayam". Archived from the original on 2021-12-29. பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
- ↑ "Dato' Yazid Mat, Page 3". Archived from the original on 2018-04-14. பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.