கோலா பெர்லிஸ்

ஆள்கூறுகள்: 6°24′N 100°8′E / 6.400°N 100.133°E / 6.400; 100.133
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலா பெர்லிஸ்
Kuala Perlis

பெர்லிஸ் நுழைவாயில் நகரம்
கோலா பெர்லிஸ் நகரம்
கோலா பெர்லிஸ் நகரம்
நாடு மலேசியா
மாநிலம்Flag of Perlis.svg பெர்லிஸ்
உருவாக்கம்1910
நேர வலயம்MST (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)

கோலா பெர்லிஸ் (Kuala Perlis) மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள ஒரு துறைமுகக் குறுநகரம். தீபகற்ப மலேசியாவில் மிக வடமேற்கில் அமைந்துள்ள நகரம். பெர்லிஸ் மாநிலத்தின் நுழைவாயில் நகரம் என்றும் அழைப்பதும் உண்டு. கங்கார் நகரத்தில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இருப்பினும் இது ஒரு மீன்பிடி நகரம்.[1]

பெர்லிஸ் ஆற்றின் கரையோரத்தில் அமைந்து உள்ளது. தாய்லாந்து நாட்டில் இருக்கும் புக்கெட் நகரத்திற்கும்; லங்காவி தீவிற்கும் இங்கு இருந்துதான் படகுப் பயணச் சேவைகள் தொடங்குகின்றன. இங்கு கிடைக்கும் உள்ளூர் கடல் உணவு வகைகள் புகழ் பெற்றவை.[2]

அமைவிடம்[தொகு]

கோலா பெர்லிஸ் பஸ் நிலையம்
கோலா பெர்லிஸ் படகுத் துறை

இந்த நகரம் சதுப்பு நிலத்தின் மீது அமைந்து உள்ள நகரம். இங்கு மரக் கட்டைகளில் கட்டப்பட்ட சில பழைய மரக் கட்டிடங்கள்; பள்ளிவாசல்கள் உள்ளன. இவை இந்த நகரத்தின் சுற்றுலா ஈர்ப்புகளில் முக்கியமானவை ஆகும்.

இயற்கையின் அழகை ரசிக்க விரும்புகிறவர்கள், இங்குள்ள பெர்லிஸ் மாநில பூங்காவிற்குச் செல்லலாம். அங்கு பல வகையான பறவைகளைப் பார்க்கலாம்.

இந்த நகரத்தை மலிவான பொருட்களின் சொர்க்கம் என்றும் சொல்வார்கள். ஏன் என்றால் இந்த நகரம் பெர்லிஸ் தாய்லாந்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.

பல உள்ளூர் மற்றும் தாய்லாந்து தயாரிப்புகளைப் பேரம் பேசி வாங்கிக் கொள்ளலாம். மலேசியா; தாய்லாந்து நாடுகளின் பார்வையாளர்களுக்குப் பிடித்த கடைவலம் இடமாகவும் திகழ்கிறது. இங்குதான் பெர்லிஸ் மாநில அருங்காட்சியகம் உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kuala Perlis
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலா_பெர்லிஸ்&oldid=3098707" இருந்து மீள்விக்கப்பட்டது