கங்கார் (மக்களவைத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கங்கார் (மக்களவை தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கங்கார் (P002)
மக்களவைத் தொகுதி
மலேசிய மக்களவை
Kangar (P002)
Federal Constituency in Perlis
பெர்லிஸ்
கங்கார் மக்களவை தொகுதி
முக்கிய நகரங்கள்கங்கார்
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1994
கட்சிபெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்சக்ரி அசான்
(Zakri Hassan)
வாக்காளர்கள் எண்ணிக்கை74,859
தொகுதி பரப்பளவு141 ச.கி.மீ
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022




2022-இல் கங்கார் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  சீனர் (14.8%)
  மலாயர் (82.3%)
  இதர இனத்தவர் (1.1%)

கங்கார் (மலாய்: Kangar; ஆங்கிலம்: Kangar; சீனம்: 袋鼠; என்பது மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P002) ஆகும்.[1]

கங்கார் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி, கங்கார் தொகுதி 31 தேர்தல் மாவட்டங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[2]

பொது[தொகு]

கங்கார் (Kangar) மாநகரம், மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகரம் ஆகும்.[3] இதன் மக்கள் தொகை 48,898. பரப்பளவு 2,619.4 எக்டர். இந்த நகரம் தீபகற்ப மலேசியாவின் ஆக வடக்கில் பெர்லிஸ் ஆற்றின் அருகில் அமைந்து உள்ளது.[4][5] காங்கோக் (Kangkok) அல்லது (Spizaetus Limnaetu) எனும் கழுகின் பெயரில் இருந்து கங்கார் நகரத்தின் பெயர் உருவானது.

கங்கார் நகரத்தின் மையத்தில் சேனா மாவட்டாரம் (Sena Province) உள்ளது. கங்கார் நகரம் மலேசியாவிலேயே மிகச் சிறிய மாநிலத் தலைநகரம் ஆகும். இந்த நகரத்தின் மக்கள் பெரும்பாலும் விவசாயிகள்; அரசு ஊழியர்கள்.

கங்கார் நகரத்தின் முக்கியத் தொழில்கள்: பைஞ்சுதை தயாரிப்பு; மரப் பலகை தயாரிப்பு; ரப்பர் உற்பத்தி; காகிதத் தயாரிப்பு; சீனி தயாரிப்பு; இறால் மீன்களைப் பதப்படுத்துதல் ஆகியவையாகும்.[6]

கங்கார் நாடாளுமன்றத் தொகுதி[தொகு]

கங்கார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
கங்கார் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு, பெர்லிஸ் உத்தாரா என்பதில் இருந்து மறுபெயரிடப்பட்டது
4-ஆவது 1974–1978 சாரி ஜுசோ
(Shaari Jusoh)
பாரிசான் (அம்னோ)
5-ஆவது 1978–1982
6-ஆவது 1982–1986 முகமது ரட்சி சேக் அகமது
(Mohd Radzi Sheikh Ahmad)
7-ஆவது 1986–1990
8-ஆவது 1990–1995 இசாக் அர்சாத்
(Ishak Arshad)
9-ஆவது 1995–1999 முகமட் இசா சாபு
(Md Isa Sabu)
10-ஆவது 1999–2003 அப்துல் அமீத் பாவன்தே
(Abdul Hamid Pawanteh)
2003–2004 காலி
11-ஆவது 2004–2008 முகமது ரட்சி சேக் அகமது
(Mohd Radzi Sheikh Ahmad)
பாரிசான் (அம்னோ)
12-ஆவது 2008–2013
13-ஆவது 2013–2018 சகாருதீன் இசுமாயில்
(Shaharuddin Ismail)
14-ஆவது 2018–2022 நூர் அமீன் அகமது
(Noor Amin Ahmad)
பாக்காத்தான் (பிகேஆர்)
15-ஆவது 2022–தற்போது சக்ரி அசன்
(Zakri Hassan)
பெரிக்காத்தான் (பெர்சத்து)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 1. Archived from the original (PDF) on 25 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  3. "Kangar Background | Kangar Municipal Council". Majlis Perbandaran Kangar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-23.
  4. LLC, General Books (2010-11-24) (in en). Geography of Perlis: Cities, Towns and Villages in Perlis, Perlis Geography Stubs, Rivers of Perlis, Kangar, Wang Kelian, Padang Besar. General Books LLC. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-158-07754-0. https://books.google.com/books?id=AR-5SgAACAAJ&q=history+kangar+perlis. 
  5. Information, Malaya Department of (1957) (in en). Fact Sheets on the Federation of Malaya. The Department. https://books.google.com/books?id=L5nIAlHSMxgC&q=Perlis. 
  6. "Kangar | Malaysia". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-23.

மேலும் காண்க[தொகு]

வார்ப்புரு:மலேசிய தேர்தல் தொகுதிகள்