கிமாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கிமாஸ் (金马士) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒரு சிறு நகரம். இந்த நகரம் ஜொகூர் மாநிலத்திற்கு மிக அருகாமையில் உள்ளது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 165 கி.மீ தொலைவில் தெற்கே உள்ளது.

கிமாஸ் நகரின் பழைய பெயர் ஆயர் தெராப் (Ayer Terap). கிமாஸிற்கு அருகில் ஓர் ஆறு ஓடுகிறது. அதன் பெயர் ஆயர் தெராப். அந்தப் பெயரையே இந்த நகரத்திற்கும் வைத்து இருந்தார்கள். பிரித்தானியர்கள் ஆட்சி செய்த போது தங்கம், ஓமே உலோகங்கள் தோண்டி எடுக்கப் பட்டன. அதனால, அந்த நகரை கோமே என்று அழைத்தனர். அதுவே, காலப் போக்கில் கிமாஸ் (Gemas) என்று மாற்றம் கண்டது.

பொதுக் குறிப்புகள்[தொகு]

தீபகற்ப மலேசியாவில் கிமாஸின் அமைவிடம்
கிமாஸ் தொடர்வண்டி நிலையம்.

தீபகற்ப மலேசியாவின் தொடர்வண்டிப் போக்குவரத்தில் கிழக்கு கரையையும், மேற்கு கரையையும் இணைக்கும் நகரமாக கிமாஸ் விளங்குகிறது. அதன் காரணமாக, இந்த நகரம் ஒரு சிறிய நகரமாக இருந்தாலும் இங்கு ஒரு சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைக் காண முடிகின்றது.

கிமாஸ் தொடர்வண்டி நிலையம் 1922ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இன்றும் அந்த நிலையம் செயல்பட்டு வருகிறது. அண்மைய காலத்தில் கிமாஸ் நகரத்திற்குத் தெற்கே கிமாஸ் பாரு எனும் புது நகரம் உருவாகி வருகிறது. இந்தக் கிமாஸ் பாரு நகரம் ஜொகூர் மாநிலப் பகுதியில் உருவாக்கம் பெற்று வருகிறது. கிமாஸ் நகரத்திற்கு தென் மேற்கில், மலேசியாவில் மிகவும் புகழ்பெற்ற லேடாங் மலை கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. இந்த மலை 1276 மீட்டர் உயரம் கொண்டது.

கிமாஸ் வாழ் மக்களுக்கு வாழ்வதாரமாக கிமாஸ் ஆறு, மூவார் ஆறு, கெமிஞ்சே ஆறுகள் அமைகின்றன. ரப்பர், செம்பனை, விவசாயத் தொழில்களுக்கு இந்த ஆறுகள் பெரும் நன்மைகளை வழங்கி வருகின்றன. புக்கிட் பெரோட் என்பது கிமாஸ் பகுதியில் உள்ள உயர்ந்த குன்றாகும்.

ஜப்பானிய ஆஸ்திரேலியப் படைகளின் மோதல்[தொகு]

இரண்டாவது உலகப் போரின் போது இந்த இடத்தில் ஒரு கடுமையான சண்டை நடந்துள்ளது. ஜப்பானியப் போர் வீரர்களுக்கும், ஆஸ்திரேலியப் போர்ப் படையினருக்கும் இடையே நடைபெற்ற அந்தக் கடுமையான மோதலில் பல உயிர்ச் சேதங்கள் நிகழ்ந்துள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Pejabat Daerah Kecil & Tanah Gemas

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிமாஸ்&oldid=1753286" இருந்து மீள்விக்கப்பட்டது