கோலா திரங்கானு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோலா திரங்கானு
كوالا ترڠڬانو
瓜拉登嘉楼
திரங்கானு மாநிலத் தலைநகரம்
வலது மேற்புறம் இருந்து மணிக்கூட்டுத் திசையில்: திரங்கானு மாநில அருங்காட்சியகம், நகரத்தை நோக்கிச் செல்லும் தெங்கு மிசான் சாலை, சைனாடவுன், அபிடின் மசூதி, பளிங்கு மசூதி.
வலது மேற்புறம் இருந்து மணிக்கூட்டுத் திசையில்: திரங்கானு மாநில அருங்காட்சியகம், நகரத்தை நோக்கிச் செல்லும் தெங்கு மிசான் சாலை, சைனாடவுன், அபிடின் மசூதி, பளிங்கு மசூதி.
கோலா திரங்கானு كوالا ترڠڬانو 瓜拉登嘉楼-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் கோலா திரங்கானு كوالا ترڠڬانو 瓜拉登嘉楼
சின்னம்
திரங்கானுவில் கோலா திரங்கானுவின் அமைவிடம்
திரங்கானுவில் கோலா திரங்கானுவின் அமைவிடம்
நாடு மலேசியா
மாநிலம் திராங்கானு
Municipality18 சனவரி 1979
மாநகரத் தகுதி வழங்கப்பட்டது1 சனவரி 2008
அரசு
 • மாவட்ட அதிகாரிமுகமத் சுல்கிப்லி பின் அபு பக்கர்
பரப்பளவு
 • மொத்தம்605[1] km2 (233.59 sq mi)
ஏற்றம்[2]15 m (49 ft)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்406,317[1]
 • அடர்த்தி557.94/km2 (1,445.07/sq mi)
 • DemonymKuala Terengganuan
நேர வலயம்MST (ஒசநே+8)
 • கோடை (பசேநே)Not observed (ஒசநே)
அஞ்சல் குறி எண்20xxx
பகுதிக் குறி எண்(கள்)09-6xxxxxxx
வாகனப் பதிவுT
இணையதளம்mbkt.terengganu.gov.my


கோலா திரங்கானு (Kuala Terengganu) என்பது மலேசியாவின் திரங்கானு மாநிலத்தின் நிர்வாகத் தலைநகரம்; அரசத் தலைநகரம்; மாவட்டம்; முதன்மைப் பொருளாதார மையம் ஆகும். கோலா திரங்கானு நகரம் அதே பெயர் கொண்ட மாவட்டத்தின் நிர்வாக மையமாகவும் உள்ளது. இந்த நகரம் கோலாலம்பூரில் இருந்து வடகிழக்கில் 440 கிலோமீட்டர் தொலைவில் தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரையோரம் அமைந்து உள்ளது. இந்த நகரம் திரங்கானு ஆற்றின் கழிமுகப் பகுதியில் தென் சீனக் கடலை நோக்கியபடி உள்ளது.

கோலா திரங்கானு மாவட்டம் பரப்பளவில் மிகச் சிறியது. ஆனால், நகரப் பகுதியை உள்ளடக்கிய கோலா நேருசு மாவட்டத்தையும் சேர்த்து ஆகக் கூடிய மக்கள் தொகையைக் கொண்டது. 2010-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 406,317.[1][3] 2008 சனவரி 1-ஆம் தேதி கரையோர மரபுரிமை நகரம் எனும் பெயருடன் மாநகரத் தகுதி வழங்கப்பட்டது.

மாநிலத்தின் முக்கியமான அரசியல், பொருளாதார மையமாக இருப்பதுடன், இந்த நகரம், மாநிலத்தில் பல சுற்றுலா மையங்களுக்கான நுழைவாயிலாகவும் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள காம்புங் சினா, பாசர் பேசர் கெடாய் பயாங், திரங்கானு மாநில அருங்காட்சியகம், பாட்டு புருக் கடற்கரை என்பன சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்கள். நனீனத்துவமும், வளர்ச்சியும் இந்த நகரத்தையும் விட்டுவைக்கவில்லை எனினும், கோலா திரங்கானு துறைமுகமாக அதன் நீண்ட வரலாற்றினூடாக ஏற்பட்ட பிற பண்பாட்டுக் கலப்புடன் கூடிய வலுவான மலே செல்வாக்கை இன்னும் தக்கவைத்துள்ளது.[4]

வரலாறு[தொகு]

திரங்கானு பற்றிய குறிப்புக்கள் காணப்படும் மிகப்பழைய மூலங்களுள் சீன வரலாற்று மூலங்கள் அடங்கும். சுயி அரசமரபுக் காலத்தைச் சேர்ந்த சீன எழுத்தாளர் ஒருவரின் குறிப்பு தான்-தான் என்னும் அரசு ஒன்று சீனாவுக்குத் திறை செலுத்தியதாகக் கூறுகிறது.[5][6] இந்த அரசு திரங்கானுவுக்கு உட்பட்ட ஓரிடத்திலேலே அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.[7] சுயி அரசமரபு வீழ்ச்சியடைந்த பின்னர், தான்-தான் சீனாவின் தாங் அரசமரபுக்குத் திறை செலுத்தியது.[5] 7ம் நூற்றாண்டில் இது சிறீவிசயப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்ட பின்னர் சீனாவுக்குத் திறை செலுத்துவதை நிறுத்தியது. கிபி 1178ல் சூ குபெய் (周去非) என்பவர் எழுதிய லிங்-வாய்-டாய்-டா (嶺外代答), 1226ல் சாவோ ருகுவா எழுதிய சூ ஃபான் சி ஆகிய நூல்கள் டெங்-யா-நு அல்லது டெங்-யா-நுங் (திரங்கானு), சான் ஃபோ சி (சிறீவிசயம்) யின் சிற்றரசு எனக் குறிப்பிடுகின்றன.[8] 13ம் நூற்றாண்டில் சிறீவிசயத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தெரெங்கானு மசாபாகித்தின் செல்வாக்குக்கு உட்பட்டது.[9] 15ம் நூற்றாண்டில் மசாபாகித், மலாய் தீவக்குறையைக் கட்டுப்பாட்டின் வைத்திருப்பதற்காக ஆயுத்தயா இராச்சியத்துடனும், மலாக்கா சுல்தானகத்துடனும் போட்டியிட்டது. இப்போட்டியில் மலாக்கா வெற்றி பெறவே திரங்கானு, மலாக்கா சுல்தானகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.[10] 1511ல் மலாக்கா போர்த்துக்கேயரால் தோற்கடிக்கப்பட, புதிதாக உருவான சோகோர் சுல்தானகம், திரங்கானு உள்ளிட்ட முன்னைய மலாக்கா சுல்தானகத்தின் பல ஆட்சிப்பகுதிகளைத் தனது செல்வாக்குக்குள் கொண்டுவந்தது. 17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிலகாலம் தெரெங்கானு ஆக்கே சுல்தானகத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஆனால், அந்நூற்றாண்டின் பிற்பகுதியில் சோகோர் மீண்டும் திரங்கானு மீது தனது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டது.

தற்போதைய திரங்கானு சுல்தானகம் 1708ல் நிறுவப்பட்டது.[11] இதன் முதலாவது சுல்தானான, முதலாவது செய்னல் ஆப்தீன் தனது ஆட்சிபீடத்தை கோலா பெராங்கில் நிறுவினார். பின்னர் சில தடவைகள் தனது ஆட்சிபீடத்தை மாற்றிய பின்னர் இறுதியாக கோலா கோலா திரங்கானுவில் உள்ள புக்குத் கெலெடாங்குக்கு அண்மையில் நிறுவினார். 18ம் நூற்றாண்டில் கோலா திரங்கானு சிறிய நகரமாகவே இருந்தது. இது நகரைச் சுற்றி ஆயிரம் வீடுகள் பரவிக் காணப்பட்ட ஒரு பகுதி எனச் சொல்லப்பட்டது. அக்காலத்தில் ஏற்கெனெவே சீனர்கள் கோலா திரங்கானுவில் காணப்பட்டனர். நகரின் அரைப்பங்கினர் சீனர்கள். அவர்கள் வேளாண்மையிலும், வணிகத்திலும் ஈடுபட்டிருந்தனர்.[12][13]

1831ல் சுல்தான் தாவூத் இறந்த பின்னர் தெங்கு மன்சூர், தெங்கு ஓமார் ஆகியோரிடையே வாரிசுரிமைப் போட்டி ஏற்பட்டு உள்நாட்டுப் போராக வெடித்தது. தெங்கு ஓமார் புக்கித் புத்தேரியிலும், தெங்கு மன்சூர் பாலிக் புக்கித்திலும் இருந்தனர். இறுதியில் தெங்கு ஓமார் தோல்வியுற்று கோலா திரங்கானுவை விட்டுத் தப்பியோடினார். தெங்கு மன்சூர், சுல்தான் இரண்டாவது மன்சூர் என்னும் பெயரில் அடுத்த சுல்தானானார். 1837ல் சுல்தான் மன்சூர் இறக்கவே அவரது மகன் சுல்தான் முகமத் என்னும் பெயரில் ஆட்சிப்பொறுப்பு ஏற்றார். 1839ல் படையுடன் திரங்கானுவுக்குத் திரும்பிய தெங்கு ஓமார், சுல்தான் முகமத்தைத் தோற்கடித்து சுல்தான் ஓமார் என்னும் பெயரில் முடி சூடிக்கொண்டார்.[11]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 The total population and total area also includes the population and area for the district of Kuala Nerus, which was a part of the district of Kuala Terengganu, but Kuala Nerus is still under the jurisdiction of Kuala Terengganu City Council.
 2. "Malaysia Elevation Map (Elevation of Kuala Terengganu)". Flood Map : Water Level Elevation Map. மூல முகவரியிலிருந்து 22 August 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 22 August 2015.
 3. "Total Population by Ethnic Group, Sub-district and State, Malaysia, 2010". Kuala Terengganu City Council. மூல முகவரியிலிருந்து 8 April 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 22 March 2015.
 4. David Bowden (9 April 2013). "The East Coast of Malaysia, an Enchanting Encounter". Expat Go Malaysia. பார்த்த நாள் 25 March 2015.
 5. 5.0 5.1 "Hubungan Ufti Tan-Tan dan P'an-P'an dengan China pada Zaman Dinasti Sui dan Tang: Satu Analisis Ekonomi" (PDF) (Malay). Beijing Foreign Studies University, University of Malaya (2009). பார்த்த நாள் 7 April 2015.
 6. Paul Wheatley (1980). The Golden Khersonese: Studies in the Historical Geography of the Malay Peninsula Before A.D. 1500. University Malaya. https://books.google.com/books?id=2T0NngEACAAJ. 
 7. George Cœdès (1968). The Indianized States of South-East Asia. University of Hawaii Press. பக். 52–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8248-0368-1. https://books.google.com/books?id=iDyJBFTdiwoC&pg=PA52. 
 8. "Chau Ju-kua: On The Chinese and Arab Trade in the twelfth and thirteenth Centuries, entitled Chu-fan-chi". University of Hong Kong Libraries (1911). பார்த்த நாள் 19 October 2014.
 9. Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society. Malaysian Branch of the Royal Asiatic Society. 1992. https://books.google.com/books?id=nlcaAQAAIAAJ. 
 10. Encyclopaedia Britannica, Inc. (1 March 2009). Britannica Guide to the Islamic World. Encyclopaedia Britannica, Inc.. பக். 380–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59339-849-1. https://books.google.com/books?id=tbicAAAAQBAJ&pg=PA380. 
 11. 11.0 11.1 "Sejarah Ringkas Negeri Terengganu (Kesultanan Terengganu)" (Malay). Sultan of Terengganu. மூல முகவரியிலிருந்து 7 April 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 7 April 2015.
 12. Maznah Mohamad (1996). The Malay Handloom Weavers: A Study of the Rise and Decline of Traditional Manufacture. Institute of Southeast Asian Studies. பக். 89–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-981-3016-99-6. https://books.google.com/books?id=5Te9LWyzQvYC&pg=PA89. 
 13. Yow Cheun Hoe (26 June 2013). Guangdong and Chinese Diaspora: The Changing Landscape of Qiaoxiang. Routledge. பக். 44–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-136-17119-2. https://books.google.com/books?id=OyM5wjE1Ak0C&pg=PA44. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலா_திரங்கானு&oldid=3144215" இருந்து மீள்விக்கப்பட்டது