இலாவாசு

ஆள்கூறுகள்: 4°50′0″N 115°24′0″E / 4.83333°N 115.40000°E / 4.83333; 115.40000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலாவாசு நகரம்
Lawas Town
சரவாக்
இலாவாசு நகரம் is located in மலேசியா
இலாவாசு நகரம்
இலாவாசு நகரம்
ஆள்கூறுகள்: 4°50′0″N 115°24′0″E / 4.83333°N 115.40000°E / 4.83333; 115.40000
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுஇலிம்பாங் பிரிவு
மாவட்டம்இலாவாசு மாவட்டம்
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்38,385
இனக் குழுக்கள்லுன் பாவாங், புரூணை மலாய்க்காரர்கள், கெடாயான், இபான், சீனர்கள்

இலாவாசு அல்லது லாவாசு (மலாய் மொழி: Lawas; ஆங்கிலம்: Lawas; சீனம்: 老越 ) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் இலிம்பாங் பிரிவு, இலாவாசு மாவட்டத்தில் உள்ள நகரமாகும்.[1]

சரவாக் மாநிலத் தலைநகரான கூச்சிங்கில் இருந்து 120 கி.மீ. தொலைவிலும்; சபா மாநிலத் தலைநகரான கோத்தா கினபாலுவில் இருந்து 200 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்த நகரம் சரவாக், சபா மற்றும் புரூணை நிலப் பகுதிகளுக்கு இடையே அமைந்து இருப்பதால் ஒரு பரபரப்பான போக்குவரத்து இடமாக அமைகின்றது..

பொது[தொகு]

காட்டு மரங்களும் விவசாயமும் தான், இந்த நகரின் முக்கியமான பொருளாதார ஆதாரங்கள். பாகெலாலான் (Ba'Kelalan) எனப்படும், இலாவாசு மேட்டு நிலப் பகுதிகளில் ஆப்பிள் சாகுபடி பரிசோதனை செய்யப்படுகிறது. சில இடங்களில் ஆப்பிள் அறுவடை செய்கிறார்கள்.

பாகெலாலான் பகுதியில் சுற்றுலாத் தொழில் மேம்பாடு செய்யப்படுகிறது. இலாவாசு நகரத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் மாநில அரசாங்கத்திடம் முன்மொழியப்பட்டுள்ளன.

இலாவாசு சாகுபடி நிலத்தின் பெரும்பகுதிகள்; நெல் வயல்களில் இருந்து செம்பனை தோட்டங்களாக மாற்றப்பட்டு உள்ளன.

குடிவரவுச் சோதனைகள்[தொகு]

இலாவாசு, அதன் புவியியல் அமைப்பின் காரணமாக, சரவாக்கின் மற்ற சாலைத் தொடர்புகளில் இருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சபா மற்றும் புரூணைக்குச் செல்லும் பிரதான சாலையால் இணைக்கப்பட்டுள்ளது.[2]

சாலை வழியாக இலாவாசுக்குச் செல்லவும் அல்லது அங்கிருந்து திரும்பி வரவும் குடிவரவுச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அதே போல அங்கு இருந்து சரவாக்கின் மற்ற பகுதிகளுக்குப் பயணிக்கவும் கடப்பிதழ் தேவை. லாவாசு மாவட்டத்தில் இரண்டு சாலை எல்லைக் கடப்புகள் உள்ளன.[2]

இலாவாசு வானூர்தி நிலையம்[தொகு]

இலாவாசு நகரில் லாவாசு வானூர்தி நிலையம் உள்ளது. இலாவாசு வாழ் மக்களுக்கு வானூர்திச் சேவை வழங்கப்படுகிறது (IATA: LWY). மிரி, பாகெலாலான் மற்றும் கோத்தா கினபாலு, சபா ஆகிய இடங்களுக்குச் செல்ல விமானங்கள் உள்ளன.

லாவாசு வானூர்தி நிலையத்தின் உட்பகுதி

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலாவாசு&oldid=3650782" இருந்து மீள்விக்கப்பட்டது