உள்ளடக்கத்துக்குச் செல்

கொருக்குப்பேட்டை

ஆள்கூறுகள்: 13°07′07″N 80°16′41″E / 13.1186°N 80.2780°E / 13.1186; 80.2780
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொருக்குப்பேட்டை
Korukkupet
கொருக்குப்பேட்டை தொடருந்து நிலையம்
கொருக்குப்பேட்டை தொடருந்து நிலையம்
கொருக்குப்பேட்டை Korukkupet is located in சென்னை
கொருக்குப்பேட்டை Korukkupet
கொருக்குப்பேட்டை
Korukkupet
கொருக்குப்பேட்டை Korukkupet (சென்னை)
கொருக்குப்பேட்டை Korukkupet is located in தமிழ் நாடு
கொருக்குப்பேட்டை Korukkupet
கொருக்குப்பேட்டை
Korukkupet
கொருக்குப்பேட்டை
Korukkupet (தமிழ் நாடு)
கொருக்குப்பேட்டை Korukkupet is located in இந்தியா
கொருக்குப்பேட்டை Korukkupet
கொருக்குப்பேட்டை
Korukkupet
கொருக்குப்பேட்டை
Korukkupet (இந்தியா)
ஆள்கூறுகள்: 13°07′07″N 80°16′41″E / 13.1186°N 80.2780°E / 13.1186; 80.2780[1]
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
வட்டம்தண்டையார்பேட்டை
மெட்ரோசென்னை
மண்டலம்சென்னை
ஏற்றம்
52 m (171 ft)
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
600021
வாகனப் பதிவுTN-03

கொருக்குப்பேட்டை[1] (ஆங்கில மொழி: Korukkupet) என்பது சென்னையின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு பகுதி. இப்பகுதி கொருக்குப்பேட்டை தொடருந்து நிலையம் மூலம் தொடருந்து சேவை பெறுகிறது.[2][3]

அமைவிடம்

[தொகு]

கொருக்குப்பேட்டை தெற்கில் வள்ளலார் நகர் மற்றும் பேசின் பாலமும், வடக்கே தண்டையார்பேட்டையும், கிழக்கில் வண்ணாரப்பேட்டையும் மற்றும் மேற்கில் பக்கிங்காம் கால்வாயும் வியாசர்பாடியும் எல்லைகளாக அமைந்துள்ளன.

உள்கட்டமைப்பு

[தொகு]

2010ஆம் ஆண்டில், கொக்ரைன் பேசின் சாலை சமமட்டக் கடவு மேம்பாலம் கட்டப்பட்டது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது. இருப்பினும் இப்பாலம் தாமதமாகவே கட்டப்பட்டது.[4] கொருக்குப்பேட்டையில், கொருக்குப்பேட்டை தொடருந்து நிலையம் அருகே இரயில்வே மேம்பாலம் கட்டப்பட உள்ளதால், மணலி சாலையில், கனரக வாகனங்கள், பேருந்துகள், நான்கு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஆகியவை இரயில்வே கிராஸிங் நோக்கிச் செல்ல, 2023ஆம் ஆண்டு சனவரி மாதம் இறுதி வாரம் முதல் 2025ஆம் ஆண்டு வரை சுமார் இரண்டு வருடங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.[5]

போக்குவரத்து

[தொகு]
பாதை எண் ஆரம்ப இடம் முடியும் இடம் வழி
பி18 கொருக்குப்பேட்டை தாம்பரம் பல்லாவரம், கிண்டி, சைதாப்பேட்டை, எஸ்ஐஇடி, டிஎம்எஸ், டிவிஎஸ், சென்ட்ரல், கடற்கரை நிலையம், இசுடான்லி மருத்துவக் கல்லூரி, வள்ளலார் நகர்
32பி கொருக்குப்பேட்டை விவேகானந்தர் இல்லம் வள்ளலார் நகர், பிராட்வே, சென்ட்ரல், சிம்ம்சன், திருவல்லிக்கேணி

தொடருந்து

[தொகு]

கொருக்குப்பேட்டை தொடருந்து நிலையம் சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி/சூலூர்பேட்டை வழித்தடத்தில் உள்ளது.

மெட்ரோ ரயில்

[தொகு]

இப்பகுதி வண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையத்திலிருந்து 2 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது. தற்போது திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் கொருக்குப்பேட்டை மெட்ரோ இரயில் நிலையம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rina Kamath (2000). Chennai (in ஆங்கிலம்). Orient Blackswan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-1378-5.
  2. "Korukkupet Railway Station Map/Atlas SR/Southern Zone - Railway Enquiry". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2023-09-05.
  3. T S Atul Swaminathan (2020-01-11). "Residents seek vehicular subway near Korukkupet railway station". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-09-05.
  4. Mariappan, Julie (25 June 2010). "Korukkupet flyover remains on paper". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 3 January 2013. பார்க்கப்பட்ட நாள் 3 December 2012.
  5. "கொருக்குப்பேட்டையில் ரயில்வே மேம்பாலம்: 2 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம்". tamil.indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2023-09-05.
  6. "Work on North Chennai underground metro to get over soon". The Times of India. 2018-05-22. பார்க்கப்பட்ட நாள் 2023-09-05.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொருக்குப்பேட்டை&oldid=3786780" இலிருந்து மீள்விக்கப்பட்டது