உள்ளடக்கத்துக்குச் செல்

செங்கோட்டை

ஆள்கூறுகள்: 28°39′21″N 77°14′25″E / 28.65583°N 77.24028°E / 28.65583; 77.24028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்கோட்டை
லகோரி வாயிலிலிருந்து செங்கோட்டை
அமைவிடம்தில்லி, இந்தியா
உயரம்18–33 m (59–108 அடி)
கட்டப்பட்டது12 மே 1639 – 6 April 1648; 376 ஆண்டுகள் முன்னர் (6 April 1648)
கட்டிடக்கலைஞர்உஸ்தாத் அகமது லகோரி
கட்டிட முறைஇந்தோ-இஸ்லாமியக் கட்டிடக்கலை, முகலாயக் கட்டிடக்கலை
உரிமையாளர்
அலுவல் பெயர்செங்கோட்டை வளாகம்
வகைபண்பாடு
வரன்முறைii, iii, vi
தெரியப்பட்டது2007 (31st session)
உசாவு எண்231rev
மண்டலம்இந்தோ பசிபிக்
செங்கோட்டை is located in டெல்லி
செங்கோட்டை
டெல்லி இல் செங்கோட்டை அமைவிடம்

செங்கோட்டை (இந்தி: लाल क़िला, உருது: لال قلعہ‎) என்பது இந்தியாவின் பழைய டெல்லியில் உள்ள ஒரு வரலாற்று கோட்டையாகும்.இது இந்தியாவின் தலைநகரமான தில்லியில் அமைந்துள்ளது. ஷாஜகானின் ஆட்சியின் கீழ் முகலாய கட்டிடக்கலையின் உச்சத்தை இந்தக் கோட்டை பிரதிபலிக்கிறது, மேலும் பாரசீக அரண்மனைக் கட்டிடக்கலையை இந்திய மரபுகளுடன் இணைக்கிறது. இது 2007-ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டது.[1]

1739-இல் நாதிர்ஷா முகலாயப் பேரரசின் மீது படையெடுத்தபோது கோட்டையின் கலைப்படைப்புகள் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. 1857-இல் இந்தியக் கிளர்ச்சியைத் தொடர்ந்து கோட்டையின் பெரும்பாலான பளிங்கு கட்டமைப்புகள் ஆங்கிலேயர்களால் இடிக்கப்பட்டன. கோட்டையின் தற்காப்புச் சுவர்கள் பெரிய அளவில் சேதமடையாமல் இருந்தன. பின்னர் இக்கோட்டை ஆங்கிலேயர்களின் படைத்துருப்புகளுக்கான இடமாகப் பயன்படுத்தப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த 15 ஆகஸ்ட் 1947 அன்று, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இக்கோட்டையின் லாகோரி கேட் மீது இந்தியக் கொடியை ஏற்றினார்.அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் சுதந்திர தினத்தன்று, கோட்டையின் முதன்மை வாயிலில் நாட்டின் பிரதமர் இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றி, தேசிய அளவில் ஒளிபரப்பு உரையை ஆற்றுவார்.

செங்கோட்டை என்பது இந்துஸ்தானி லால் கிலாவின் மொழிபெயர்ப்பாகும் (இந்தி: लाल क़िला, உருது: لال قلعہ).[2][3] இச்சொல் அதன் சிவந்த மணற்கல் சுவர்களால் பெறப்பட்டது. சிவப்பு எனப்பொருள்படும் 'லால்' என்பது இந்துஸ்தானி மொழியில் இருந்தும் கோட்டை எனப்பொருள்படும் 'கிலா' என்பது என்பது அரபு சொல்லிலிருந்தும் பெறப்பட்டது. ஏகாதிபத்திய குடும்பத்தின் வசிப்பிடமான இக்கோட்டை முதலில் "ஆசிர்வதிக்கப்பட்ட கோட்டை" என்று பொருள்படும் கிலா-இ-முபாரக் என்று அழைக்கப்பட்டது.[4][5] ஆக்ரா நகரில் உள்ள கோட்டையும் 'லால் கிலா' என்றே அழைக்கப்படுகிறது.

வரலாறு

[தொகு]
1895 காலகட்டங்களில் டெல்லிக்கேட்டில் உள்ள செங்கோட்டை
சிப்பாய் கலகத்திற்குப் பிறகு, ஆங்கிலேயர் முகலாய கட்டடங்களை அழித்து, அவர்களது பாதுகாப்பு இல்லங்களைக் கட்டினர்.

முகலாயப் பேரரசர் ஷாஜகான் இந்த மிகப்பெரிய கோட்டையை 1638 ஆம் ஆண்டு மே மாதம் கட்டத் தொடங்கி, 1648 ஆம் ஆண்டு கட்டி முடித்தார்.பேரரசர் அவர் தனது தலைநகரை ஆக்ராவிலிருந்து டெல்லிக்கு மாற்ற முடிவு செய்தார். சிவப்பு மற்றும் வெள்ளை, ஷாஜகானின் விருப்பமான நிறங்களாகும்.[6] எனவே வெண்பளிங்கால் கட்டப்பட்ட தாஜ்மகாலைக் கட்டிய, கட்டிடக் கலைஞர் உஸ்தாத் அஹ்மத் லஹோரிக்கு இதன் வடிவமைப்புப் பணி வழங்கப்பட்டது.[7][8] இந்த கோட்டை யமுனை நதியை ஒட்டி அமைந்துள்ளது. எனவே சுவர்களைச் சுற்றியுள்ள பெரும்பாலான அகழிகளுக்கு நீரினை வழங்குகின்றது.[9] இஸ்லாமிய புனித மாதமான முஹரம் 13 இல் ஷாஜகானின் மேற்பார்வையில் கட்டுமானம் தொடங்கியது.[10]:01 [11] 1648 ஏப்ரல் 6ஆம் தேதி நிறைவடைந்தது.[12][13] மற்ற முகலாயக் கோட்டைகளைப் போலல்லாமல், செங்கோட்டையின் எல்லைச் சுவர்கள் பழைய சலிம்கர் கோட்டையை உள்ளடக்கியதால் சமச்சீரற்றவையாக இருக்கும்.[10]:04 கோட்டையும் அதன் அரண்மனையும் இன்றைய பழைய தில்லியான ஷாஜஹானாபாத் நகரின் மையப் புள்ளியாக இருந்தது. ஷாஜகானின் வாரிசான ஔரங்கசீப், மோதி மசூதியை (முத்து மசூதி) பேரரசரின் தனிப்பட்ட குடியிருப்புகளுடன் இணைத்தார். அரண்மனையின் நுழைவாயிலை மேலும் வலிமையாக்கும் வகையில் இரண்டு முக்கிய வாயில்களுக்கு முன்பாக பாதுகாப்பு அரண்களை உருவாக்கினார்.[10]:08

Image shows Red Fort's long walls including the gates as seen from Jama Masjid's tower. The walls can be seen in the background extending a couple of thousand meters.
ஜாமா மசூதியின் கோபுரத்திலிருந்து தெரியும் வாயில்களுடன் கூடிய இரன்டாயிரம் மீட்டர்கள் நீளமுள்ள செங்கோட்டைச் சுவர்கள்.

ஔரங்கசீப்பிற்குப் பிறகு முகலாய வம்சத்தின் நிர்வாக மற்றும் நிதி அமைப்பு வீழ்ச்சியடைந்தது, மேலும் 18 ஆம் நூற்றாண்டில் அரண்மனையும் சீரழிந்தது. 1712 இல் சகாந்தர் சா முகலாயப் பேரரசரானார். அவரது ஆட்சி தொடங்கிய ஒரு வருடத்திற்குள் அவர் கொல்லப்பட்டார். அவருக்குப் பதிலாக பரூக்சியார் நியமிக்கப்பட்டார். 1739 இல் இந்தியாவின் மீது படையெடுத்த பாரசீகப் பேரரசர் நாதிர் ஷா, மயில் சிம்மாசனம் உட்பட செங்கோட்டையைக் கொள்ளையடித்து, சுமார் 200,000 வீரர்களைக் கொண்ட வலுவான முகலாயப் படையை எளிதில் தோற்கடித்தார்[14] மூன்று மாதங்களுக்குப் பிறகு நாதிர் ஷா அழிக்கப்பட்ட நகரத்தையும் வலிமையற்ற முகலாயப் பேரரசையும் முகமது ஷாவிடம் விட்டு பாரசீகத்திற்குத் திரும்பினார்.[10]:09 முகலாயப் பேரரசின் வலிமையற்ற நிலை முகலாயர்களை பெயரளவில் மட்டுமே ஆட்சியாளர்களாக ஆக்கியது. மேலும் 1752 உடன்படிக்கையானது மராட்டியர்களை டெல்லி அரியணையின் பாதுகாவலர்களாக மாற்றியது.[15][16] 1758 சீக்கியர்களின் உதவியுடன் சிர்ஹிந்தில் மராட்டியர்கள் பெற்ற வெற்றியும், பானிபட்டில் மொகலாயர்களுக்குக் கிடைத்த அடுத்தடுத்த தோல்வியும்[17] அவர்களை ஆப்கன் பேரரசர் அகமது ஷா துரானியுடன் மேலும் மோதலுக்கு உள்ளாக்கியது.[18][19]

1760 ஆம் ஆண்டில், அகமது ஷா துரானியின் படைகளிடமிருந்து டெல்லியைப் பாதுகாக்க, நிதி திரட்டுவதற்காக கோட்டையிலுள்ள திவான்-இ-காஸ் மண்டபத்தின் வெள்ளி கூரையை மராத்தியர்கள் அகற்றி உருக்கினர்.[20][21] 1761 இல், மராத்தியர்கள் மூன்றாவது பானிபட் போரில் தோல்வியடைந்த பிறகு, டெல்லி அகமது ஷா துரானியால் தாக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, மராட்டியர்கள், நாடு கடத்தப்பட்ட பேரரசர் சா ஆலாம் உத்தரவின் பேரில் செயல்பட்டு, ரோஹில்லா ஆப்கானியர்களிடமிருந்து டெல்லியை மீண்டும் கைப்பற்றினர். மராட்டியப் படையின் தளபதியான மஹாத்ஜி சிந்தியா செங்கோட்டையை முகலாயப் பேரரசர் சா ஆலாம் வசம் ஒப்படைத்தார்.[22] இதனால், சா ஆலாம் மீண்டும் அரியணை ஏறினார்.

1764 ஆம் ஆண்டில், பரத்பூரின் ஜாட் ஆட்சியாளர், மகாராஜா ஜவஹர் சிங் (மகாராஜா சூரஜ் மல் மகன்) டெல்லியைத் தாக்கி, 5 பிப்ரவரி 1765 டெல்லியின் செங்கோட்டையைக் கைப்பற்றினார்.[23] இரண்டு நாட்களுக்குப் பிறகு, முகலாயர்களிடமிருந்து காணிக்கை பெற்ற பிறகு, கோட்டையிலிருந்து தங்கள் படைகளை அகற்றினர் மற்றும் ஜாட்கள் முகலாயர்களின் பெருமை என்று அழைக்கப்படும் முகலாயர்களின் சிம்மாசனத்தையும், செங்கோட்டையின் கதவுகளையும் நினைவுச்சின்னமாக எடுத்துக் கொண்டனர், மேலும் இந்த சிம்மாசனம் இன்று தீக் அரண்மனைகளின் அழகை மேம்படுத்துகிறது. கதவுகள் பரத்பூரின் உலோகாகர் கோட்டையில் பொருத்தப்பட்டுள்ளன.[24]

1783 இல் பாகேல் சிங் தலைமையில் சீக்கிய சிற்றரசுகளின் கூட்டமைப்பின் கரோர் சிங்யா டெல்லி மற்றும் செங்கோட்டையைக் கைப்பற்றினார்.[25] பாகேல் சிங், ஜஸ்ஸா சிங் அலுவாலியா மற்றும் ஜஸ்ஸா சிங் ராம்கர்ஹியா ஆகிய மூவரும் 40,000 படைகளுடன் கூட்டுச் சேர்ந்து அவாத் முதல் ஜோத்பூர் வரையிலான பகுதியை சூறையாடினர். பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, பாகேல் சிங்கும் அவரது படைகளும் டெல்லியை விட்டு வெளியேறி முகலாய பேரரசர் இரண்டாம் சா ஆலாமை மீண்டும் பதவியில் அமர்த்த ஒப்புக்கொண்டனர். அவர்கள் பின்வாங்குவதற்கான நிபந்தனை டெல்லியில் சாந்தினி சவுக்கில் உள்ள சிஸ் கஞ்ச் சாகிப் குருத்துவார் உட்பட ஏழு சீக்கிய குருத்துவார்களைக் கட்டுவதை உள்ளடக்கியது.[26]

1788 ஆம் ஆண்டில், ஒரு மராத்திய காவல்படை முகலாய பேரரசருக்கு பாதுகாப்பு அளித்ததோடு செங்கோட்டையையும் டெல்லியையும் ஆக்கிரமித்தது. மகாத்ஜி சிந்தியா சீக்கியர்களுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதன்படி, அவர்கள் டெல்லிக்குள் நுழையவோ அல்லது ராக்கி காணிக்கை கேட்கவோ கூடாது என்று எச்சரிக்கப்பட்டனர். 1803இல் நடந்த இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரைத் தொடர்ந்து இந்தக் கோட்டை கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் வந்தது.[25]

இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் நடந்துகொன்டிருக்கும் போது கிழக்கிந்திய கம்பெனியின் படைகள் [[தில்லி போர் (1803)|தில்லி போரில் தௌலத் ராவ் சிந்தியாவின் மராட்டியப் படைகளை தோற்கடித்தன. இது தில்லி நகரத்தின் மீதான மராத்தியக் கட்டுப்பாட்டையும் செங்கோட்டையின் மீதான அவர்களின் கட்டுப்பாட்டையும் முடிவுக்குக் கொண்டு வந்தது.[27] போருக்குப் பிறகு, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் முகலாய பிரதேசங்களின் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டது. மேலும் செங்கோட்டையில் ஒரு அரசப் பிரதிநிதியையும் நிறுவியது.[10]:11 செங்கோட்டையை ஆக்கிரமித்த கடைசி முகலாய பேரரசர் இரண்டாம் பகதூர் ஷா ஆவார். இவர் 1857 ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான கிளர்ச்சியின் அடையாளமாக மாறினார். இக்கிளர்ச்சியில் ஷாஜஹானாபாத்தில் வசிப்பவர்கள் பங்கேற்றனர்.[10]:15

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் செங்கோட்டையின் உள்ளேயுள்ள ரங் மகால்.
ரங் மகால் இன்று.

முகலாய அதிகார சக்தியின் இடமாக அதன் நிலை மற்றும் தற்காப்பு திறன்கள் இருந்தபோதிலும், செங்கோட்டை 1857 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிரான கிளர்ச்சியின் போது ஒரு உறுதியான தளமாக இருக்கவில்லை. கிளர்ச்சி தோற்கடிக்கப்பட்ட பிறகு, இரண்டாம் பகதூர் ஷா செப்டம்பர் 17 அன்று கோட்டையை விட்டு வெளியேறி, ஹூமாயூன் கல்லறைக் கட்டிடத்தில் மறைந்திருந்தார். செப்டம்பர்20 அன்று இவரும் இவர்து இரு மகன்களும் பிரித்தானிய படைகளால் கைது செய்யப்பட்டனர். மறுநாளே அவரின் இரு மகன்களும் கொலை செய்யப்பட்டனர். இரண்டாம் பகதூர் ஷா பிரித்தானியக் கைதியாக செங்கோட்டைக்குத் திரும்பினார். 1858இல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு 7ஆம் தேதி ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார்.  கிளர்ச்சியின் முடிவிற்குப் பிறகு, அந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரித்தானியர்கள் செங்கோட்டையை அதன் முறையான இடிப்புக்கு உத்தரவிடுவதற்கு முன்பே இடித்து அகற்றினர். இதன் விளைவாக கோட்டையின் ஆற்றை எதிர்கொள்ளும் முகப்பில் உள்ள மண்டபங்களை இணைக்கும் கல் திரை உட்பட 80% கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.கோட்டையிலிருந்த அனைத்து தளவாடங்களும் அகற்றப்பட்டன சில அழிக்கப்பட்டன. ஹரேம்கள் எனப்படும் அரண்மனைப் பெண்டிருக்கான அடுக்குமாடி குடியிருப்புகள், வேலையாட்கள் குடியிருப்புகள் மற்றும் தோட்டங்கள் யாவும் இடிக்கப்பட்டன, மேலும் அவற்றின் இடத்தில் கற்களாலான படைமுகாம்கள் கட்டப்பட்டன. முகலாய ஏகாதிபத்திய கோட்டையின் கிழக்குப் பகுதியில் உள்ள பளிங்குக் கட்டிடங்கள் மட்டுமே முழு அழிவிலிருந்து தப்பின. ஆனாலும் அவை இடிப்பு முயற்சிகளால் சேதமடைந்தன.

1899 முதல் 1905 வரை இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபு, கோட்டையின் சுவர்களை புனரமைத்தல், தோட்டங்களை அதன் நீர்ப்பாசன முறையுடன் முழுமையாக மீட்டமைத்தல் உள்ளிட்ட பழுதுபார்ப்பு பணிகளுக்கு ஆணையிட்டார்.[28]

ஓவ்வொரு ஆண்டும் இந்தியப் பிரதமர் செங்கோட்டையில் மூவர்ணக்கொடியேற்றி உரையாற்றுவார். படத்தில் ஜவகர்லால் நேரு 1947 ஆம் ஆன்டு சுதந்திர தினத்தில் கொடியேற்றி உரையாற்றுகிறார்.

செங்கோட்டையில் அமைந்துள்ள பெரும்பாலான கலைப்படைப்புகளும் அணிகலன்களும் 1747 ஆம் ஆண்டு நாதிர்ஷாவின் படையெடுப்பின் போதும், 1857 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிரான இந்தியக் கிளர்ச்சிக்குப் பிறகும் கொள்ளையடிக்கப்பட்டன. அவை இறுதியில் தனியார் சேகரிப்பாளர்கள் அல்லது பிரித்தானியஅருங்காட்சியகம், பிரித்தானிய நூலகம் மற்றும் விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகம் ஆகியவற்றிற்கு விற்கப்பட்டன. உதாரணமாக, ஷாஜகானின் ஜேட் ஒயின் கோப்பை மற்றும் இரண்டாம் பகதூர் ஷாவின் கிரீடம் அனைத்தும் தற்போது லண்டனில் உள்ளன. திரும்பப் பெறுவதற்கான பல்வேறு கோரிக்கைகள் இதுவரை பிரித்தானிய அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன.[29] 1911 ஆம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் மற்றும் ராணி மேரி ஆகியோர் டெல்லி தர்பாருக்கு வருகை தந்தனர். அவர்களின் வருகைக்கு ஏற்ப, சில கோட்டையின் சிலகட்டிடங்கள் மீட்டெடுக்கப்பட்டன. செங்கோட்டை தொல்பொருள் அருங்காட்சியகம் டிரம் ஹவுஸில் இருந்து மும்தாஜ் மஹாலுக்கு மாற்றப்பட்டது.

1945 நவம்பர் - 1946பிப்ரவரி வரையான காலகட்டத்தில் இந்திய தேசிய இராணுவத்தின் (ஐஎன்ஏ) உறுப்பினர்கள் சிலர் மீது பிரித்தானிய அரசு வழக்குகளைத் தொடர்ந்தது. இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசிய இராணுவத்தின் உறுப்பினர்களாக இருந்து கைது செய்யப்பட்டவர்களை கோட்டையிலுள்ல இராணுவ நீதி மன்றம் மூலம் தண்டிக்க காலனிய அரசு முடிவு செய்தது. இவற்றுள் பத்துக்கும் மேலான வழக்குகள் தில்லி செங்கோட்டையில் நடைபெற்றன. இவை ஐஎன்ஏ வழக்குகள் அல்லது செங்கோட்டை வழக்குகள் எனப்பட்டன. 15 ஆகஸ்ட் 1947 அன்று, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு லாகூர் கேட் மேலே இந்திய தேசியக் கொடியை உயர்த்தினார்.[34]

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, செங்கோட்டை சில மாற்றங்களைச் சந்தித்தது. அது ஒரு இராணுவ முகாமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது. கோட்டையின் குறிப்பிடத்தக்க பகுதி 2003, டிசம்பர் 22 வரை இந்திய இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. பின்னர் அது இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு மறுசீரமைப்புக்காக வழங்கப்பட்டது.[30][31] 2009 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் கீழ் கோட்டை மீண்டும் புத்துயிர் பெற இந்திய தொல்லியல் துறையால் தயாரிக்கப்பட்ட விரிவான பாதுகாப்பு மற்றும் மேலாண்மை திட்டம் (CCMP) அறிவிக்கப்பட்டது.[32][33][34]

தொல்லியல் கண்டுபிடிப்புகள்

[தொகு]

செங்கோட்டையில் நடைபெற்ற தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் கிமு 2600 முதல் கிமு 1200 வரையிலான பல காவி வண்ண மட்பாண்ட பண்பாட்டைச் சேர்ந்த கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[35]

நவீன யுகம்

[தொகு]
பிரதமர் நரேந்திர மோடி 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் இருந்து 2022 ஆகஸ்ட் 15 அன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

தில்லியின் மிகப்பெரிய நினைவுச் சின்னமான செங்கோட்டை, அதன் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்[36] மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னம்[37] ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15), இந்தியப் பிரதமர் செங்கோட்டையில் நாட்டின் கொடியை ஏற்றி, அதன் அரண்களில் இருந்து தேசிய அளவில் ஒளிபரப்பு உரையை நிகழ்த்துகிறார்.[38] இந்திய ரூபாயின் மகாத்மா காந்தி புதிய வரிசையின் ₹ 500 நோட்டின் பின்புறத்திலும் கோட்டை அச்சடிக்கப்பட்டுள்ளது.[39]

கோட்டையின் முக்கிய கட்டிடக்கலை அம்சங்கள் கலவையான நிலையில் உள்ளன; பரந்த நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. சில கட்டிடங்கள் நல்ல நிலையில் உள்ளன, அவற்றின் அலங்கார கூறுகள் பழுது இல்லாமல் உள்ளன; மற்றவற்றில், பளிங்குக் கற்களில் பதிக்கப்பட்ட பூக்கள் கொள்ளையர்களால் அகற்றப்பட்டன. தேநீர் இல்லம், அதன் வரலாற்று நிலையில் இல்லாவிட்டாலும், தற்போது உணவகமாக செயல்படுகிறது. மசூதி மற்றும் ஹம்மாம் எனப்படும் பொது குளியல் அறைகள் ஆகியவை பொதுமக்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் பார்வையாளர்கள் கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் பளிங்கு பூ வேலைப்பாடுகளை வேலைகளை உற்றுப் பார்க்க முடியும். ப நடைபாதைகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. நுழைவாயிலிலும் பூங்காவிற்குள்ளும் பொது கழிப்பறைகள் உள்ளன. லாஹோரி கேட் நுழைவாயில் நகை மற்றும் கைவினைக் கடைகளுடன் கூடிய ஒரு வணிக வளாகத்திற்கு இட்டுச் செல்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் இளம் இந்திய தியாகிகள் மற்றும் அவர்களின் கதைகளை சித்தரிக்கும் "இரத்த ஓவியங்களின்" அருங்காட்சியகம், தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் இந்திய போர் நினைவு அருங்காட்சியகம் ஆகியவை இங்குள்ளன. 

முக்கிய நிகழ்வுகள்

[தொகு]

செங்கோட்டையில் கடந்த 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் ஆறு லஷ்கர்-இ-தொய்பா உறுப்பினர்களால் நடத்தப்பட்டது. இரண்டு ராணுவ வீரர்களும் ஒரு குடிமகனும் கொல்லப்பட்டனர். இந்தியா-பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையை சிதைக்கும் முயற்சி என்று செய்தி ஊடகங்கள் இதனைக் விவரித்தன.[40][41]

ஏப்ரல் 2018 இல், டால்மியா பாரத் குழுவானது செங்கோட்டையை பராமரிப்பு, மேம்பாடு மற்றும் செயல்பாடுகளுக்காக, அரசாங்கத்தின் "அடாப்ட் எ ஹெரிடேஜ்" திட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளுக்கு ₹ 25 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது.[42] சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகங்கள் மற்றும் இந்திய தொல்லியல் துறை (ASI) ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.[43] ஒரு தனியார் குழுவால் கோட்டையை தத்தெடுப்பது மக்களிடம் சர்ர்ச்சை ஏற்படுத்தியது. மேலும் பொதுமக்கள், எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள், வரலாற்றாசிரியர்களிடமிருந்து விமர்சனங்களை பெற்றது. இது ட்விட்டரில் #IndiaOnSale என்ற ஹேஷ்டேக்கிற்கும் வழிவகுத்தது.[44] மே 2018 இல், இந்திய வரலாற்று காங்கிரஸ், "மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியம் அல்லது வேறு அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவால்" இந்த ஒப்பந்தத்தின் "பாரபட்சமற்ற மறுஆய்வு" ஆகும் வரை ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்குமாறு அழைப்பு விடுத்தது.[45]

பாதுகாப்பு

[தொகு]

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பகிறது. தீவிரவாத தாக்குதல்களை தடுக்க, டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கண்காணித்து வருகின்றனர், மேலும் கோட்டைக்கு அருகிலுள்ள உயரமான தளங்களில் குறிதவறாது சுடக்கூடிய தேசிய பாதுகாப்புக் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.[46][47] வான்வழித் தாக்குதல்களைத் தடுப்பதற்காகக் கொண்டாட்டத்தின் போது கோட்டையைச் சுற்றியுள்ள வான்வெளியானது பறக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதியாகும்.[48] தாக்குதல் நடந்தால் பிரதமரும் மற்ற இந்தியத் தலைவர்களும் பாதுகாப்புடன் இருக்க அருகிலுள்ள பகுதிகளில் பாதுகாப்பான வீடுகள் உள்ளன.[46]

கட்டடக்கலை வடிவமைப்பு

[தொகு]

உலகப் பாரம்பரியக் களமானது செங்கோட்டையை "முகலாய படைப்பாற்றலின் உச்சம்" என்று வகைப்படுத்துகிறது. செங்கோட்டையானது இஸ்லாமிய அரண்மனைக் கட்டமைப்பை உள்ளூர் மரபுகளுடன் ஒருங்கிணைக்கிறது, இதன் விளைவாக " பாரசீக, தைமூரிய மற்றும் இந்தியக் கட்டிடக்கலைகள் சங்கமமாகின்றன. இந்திய துணைக்கண்டம் முழுவதும் கட்டப்பட்ட, பிற்கால கட்டிடங்கள் மற்றும் தோட்டங்களுக்கு இந்த கோட்டை ஒரு மாதிரியாக அமைந்தது.[49] செங்கோட்டை 254.67 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது.2.41 கிலோமீட்டர் நீளமுள்ள தற்காப்புச் சுவர்களால் சூழப்பட்டுள்ளது.[50] ஆற்றின் ஓரத்தில் 18 மீட்டர்கள் (108 ft) வரை உயரமும் நகரத்தின் பக்கத்தில் 33 மீட்டர்கள் (59 ft) ) உயரம் வரை மாறுபடும் கோபுரங்கள் மற்றும் தூண்களால் இக்கோட்டை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கோட்டை எண்கோண வடிவிலானது, கிழக்கு-மேற்கு அச்சை விட வடக்கு-தெற்கு அச்சு நீளமானது. இதன் பளிங்கு, மலர் அலங்காரங்கள் மற்றும் கோட்டையின் இரட்டைக் குவிமாடங்கள் பிற்கால முகலாய கட்டிடக்கலையை எடுத்துக்காட்டுகின்றன.[51]

ஆறு அரண்மனை வளாகக் கட்டிடங்கள்
நாக்கர் கானா

செங்கோட்டை மிக உயர்தரமான கலை ஒவியங்களையும் மற்றும் அலங்கார வேலைப்பாடுகளையும் காட்சிப் பொருட்களாகக் கொண்டுள்ளது. செங்கோட்டையில் உள்ள கலை வேலைப்பாடு பாரசீகர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் இந்தியர்களின் கலைத் தொகுப்பாகும், இது மிகவும் உயர்தர வடிவத்தையும், வெளிப்பாடு மற்றும் நிறங்களையும் கொண்ட தனித்துவம் வாய்ந்த ஷாஜகானி பாணியில் முன்னேற்றத்தின் விளைவாகும். டெல்லியில் உள்ள செங்கோட்டையானது, இந்தியாவின் நீண்டகால வரலாற்றையும் அதன் கலைகளையும் உள்ளடக்கிய முக்கிய கட்டட வளாகங்களில் ஒன்றாகும். இதன் தனிச்சிறப்பானது காலத்திற்கும் அதன் பரப்பிற்கும் அப்பாற்பட்டதாகும். இது கட்டடக்கலை நுணுக்கத்திற்கும் வலிமைக்கும் சிறந்த சான்றாக விளங்குகிறது. 1913 இல் இது முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்படும் முன்பே, செங்கோட்டையை அடுத்தத் தலைமுறைக்காக பேணிபாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தக்கோட்டையின் சுவர்கள் வழுவழுப்பாகவும், இதன் மதிற்சுவர்கள் உறுதியான கம்பி வரிசைகளால் இழைத்தும் கட்டப்பட்டிருந்தது. செங்கோட்டையின் முக்கிய வாயிற்கதவுகள் லாகோரி வாயில், தில்லிவாயில் என்ற இரண்டு வாயில்களாகும். இரு வாயில்களும் பொதுமக்களுக்காக பயன்படுத்தப்பட்டன. இவையன்றி கிஸ்ராபாத் வாயில் என்பது பேரரசருக்காக பயன்பட்டது.[10] இதில் லாகூர் வாயிற்கதவே முக்கிய நுழைவாயிலாக இருக்கின்றது. இதனருகே சட்டா சவுக் எனப்படும் நீண்ட கடைவீதி அமைந்துள்ளது.

கோட்டையின் முக்கிய கட்டமைப்புகள்

[தொகு]
முக்கிய கட்டமைப்புகளைக் காட்டும் செங்கோட்டையின் வரைபடம்

செங்கோட்டையின் எஞ்சியிருக்கும் கட்டமைப்புகளில் சுவர்கள் மற்றும் அரண்கள், முதன்மை வாயில்கள், பார்வையாளர் அரங்குகள் மற்றும் கிழக்கு ஆற்றங்கரையில் உள்ள அரண்மனைக் குடியிருப்புகள் ஆகியன மிக முக்கியமானவையாகும்.[52]

லாகோரி வாயில்ட்

[தொகு]
அரண்களுடன் கூடிய லாகோரி வாயில்

லாகோரி வாயில் என்பது செங்கோட்டையின் முக்கிய வாயில் ஆகும், இது லாகூர் நகரை நோக்கி இருப்பதால் அவ்வாறு பெயரிடப்பட்டது. ஷாஜஹான் "ஒரு அழகான பெண்ணின் முகத்தில் வரையப்பட்ட முக்காடு" என்று வர்ணித்த இந்த வாயிலானது ஔரங்கசீப்பின் ஆட்சியின் போது, பாதுகாப்பு அரணைச் சேர்த்ததன் மூலம் வாயிலின் அழகு மாற்றப்பட்டது.[53][54][55] இந்த வாயிலில் தான் 1947 முதல் ஒவ்வொரு இந்திய சுதந்திர தினத்தின் போதும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு அதன் அரண்களில் இருந்து பிரதமர் உரை நிகழ்த்துகிறார்.

தில்லி வாயில்

[தொகு]
தில்லி வாயில்
தில்லி வாயிலில் உள்ள யானைச் சிற்பங்கள்

கோட்டையின் தெற்கில் அமைந்த பொது நுழைவாயில்களில் ஒன்று தில்லி வாயில் ஆகும். அமைப்பிலும் தோற்றத்திலும் லாகோரி வாயில் போன்றே இருக்கும் இந்த வாயிலின் இருபுறமும் இரண்டு பெரிய கல் யானைகள் ஒன்றையொன்று எதிர்கொண்டுள்ளன.[56]

சட்டா சௌக்

[தொகு]
லாகோரி வாயிலருகே உள்ள மூடப்பட்ட கூரைகளைக் கொண்ட சட்டா சௌக்
சட்டா சௌக் இன்று

லாகோரி வாயில் அருகே மீனா பஜார் என்றழைக்கப்படும் சட்டா சௌக் உள்ளது. அங்கு முகலாயர் காலத்தில் பேரரசர் குடும்பத்திற்கான பட்டு, நகைகள் மற்றும் பிற பொருட்கள் விற்கப்பட்டன.[57] இந்த சந்தை முன்பு கூரையிடப்பட்ட சந்தை எனப்பொருள்படும் பஜார்-இ-முசக்காஃப் அல்லது சட்டா-பஜார் என்று அழைக்கப்பட்டது.[57] இது மூடப்பட்ட கூரை கொண்ட நீண்ட கடைவீதி ஆகும். அதன் சுவர் நீளத்திற்கு இங்கு வரிசையாகக் கடைகளைக் கொண்டுள்ளன. சட்டா சவுக், வடக்கு-தெற்குத் தெருக்கள் சந்திக்கும் ஒரு பெரிய திறந்தவெளிக்கு கொண்டுவிடுகிறது, உண்மையில் இந்தச் சந்திப்பானது மேற்கில் கோட்டையின் இராணுவ விழாக்கள் நடக்கும் இடத்தையும், கிழக்கில் உள்ள அரண்மனைகளையும் பிரிக்கின்றது. இந்தத் தெருவின் தெற்கு மூலையில் தில்லி வாயில் அமைந்துள்ளது.

நௌபத் கானா

[தொகு]
நௌபத் கானா இன்று
1857 இல் ஆங்கிலேயர்களால் இடிக்கப்படும் முன் நௌபத் கானா

நீதிமன்றத்தின் கிழக்குச் சுவரில் இப்போது தனிமைப்படுத்தப்பட்ட நௌபத் கானா அல்லது நக்கர் கானா என்றழைக்கப்படும் இசைக்கூடம் உள்ளது. பாரசீகம்ப்ழியில் இதற்கு "காத்திருப்போர் கூடம்" என்பது பொருளாகும். நக்கர் கானா இன்று டிரம் ஹவுஸ் என்றும் அழைக்கப்படுகிறது.இங்கு பேரரசர் காலத்தில் தினமும், திட்டமிடப்பட்ட நேரத்தில் இசை இசைக்கப்பட்டது. பிற்கால முகலாய மன்னர்களான ஜஹந்தர் ஷா (1712-13) மற்றும் ஃபரூக்சியார் (1713-19) ஆகியோர் இங்கு கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்திய போர் நினைவு அருங்காட்சியகம் இக்கூடத்தின் இரண்டாவது தளத்தில் அமைந்துள்ளது.[58] சட்டா சௌக்கின் வளைவான கவிகை மாடங்கள் இக்கூடத்தின் வெளிப்புற நீதிமன்றத்தின் மையத்தில் முடிவடைந்தன. இது 540 by 360 அடிகள் (160 m × 110 m)கொன்டது என அளவிடப்பட்டது.[59] அளவிடப்பட்டது. 1857 கிளர்ச்சிக்குப் பிறகு பக்க கவிகை மாடங்கள் உள்ளிட்ட பல பகுதிகள் இடிக்கப்பட்டன..

திவான்-இ-ஆம்

[தொகு]

திவான்-இ-ஆம் என்பது கோட்டையின் முதன்மை நீதிமன்றமாகும். இது 540 க்கு 420 அடிகள் என நீள அகலங்களைக் கொன்டது(160மீ *130மீ). நௌபத் கானா மண்டபத்திலிருந்து இதை அடையலாம்.வாயிற்கதவிற்கு அப்பால் மற்றொரு பெரிய திறந்தவெளி உள்ளது, இது உண்மையில் திவான்-இ-ஆமிற்கு முற்றமாக பயன்படுத்தப்பட்டது, திவான்-இ-ஆம் பாதுகாக்கப்பட்ட காட்சியகங்களால் சூழப்பட்டது.[59] இது பொது மக்களுக்கான அறமன்றமாகும். இங்கு மக்களின் வரிச்சிக்கல்கள், வாரிசு மற்றும் பரம்பரைச் சிக்கல்கள், வக்ஃபு எனப்படும் அறக்கொடை பற்றிய வழக்குகள் இங்கு நடைபெற்றன. இங்கு பேரரசருக்காக நன்கு அலங்கரிக்கப்பட்ட மேல்மாடத்துடன் கூடிய ஜரோகா எனப்படும் அரியாசனம் அமைக்கப்பட்டுள்ளது. இது தங்கமுலாம் பூசப்பட்டு அழகிய வேலைப்பாடுகளைக் கொன்டிருந்தது. மேலும் பொதுமக்களிடமிருந்து சிம்மாசனத்தைப் பிரிக்க தங்கம் மற்றும் வெள்ளியினால் ஆன வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மண்டபத்தின் தூன்கள் மற்றும் பொறிக்கப்பட்ட வேலைப்பாடுகளுடன் கூடிய வளைவுகள் சிறந்த கைவினைத்திறனை வெளிப்படுத்துகின்றன. மேலும் மண்டபம் முதலில் வெள்ளை குழைக்காரையால் அலங்கரிக்கப்பட்டது.[59] இம்மாளிகை அரசு விழாக்களுக்கும் பயன்படுத்தப்பட்டது.[51] அதன் பின்னால் உள்ள மர்தானா எனப்படும் முற்றம் அரண்மனைக் குடியிருப்புகளுக்கு இட்டுச்செல்கிறது.

திவான்-இ-காஸ்

[தொகு]

திவான்-இ-காஸ் என்பது பேரரசர் தனது அரசவை உறுப்பினர் மற்றும் முக்கிய விருந்தினர்களை வரவேற்கும் மண்டபமாலும். இது விலைமதிப்பற்ற கற்களால் பதிக்கப்பட்ட வெள்ளை பளிங்குகளால் கட்டப்பட்டுள்ளது.இங்குள்ள தூண்களில் பூக்களைப் போன்று செதுக்கப்பட்டும் மற்றும் மதிப்புமிக்க கற்களால் அழகு வேலைப்பாடுகள் செய்யப்பட்டும் இருந்தன. 1648 ஆம் ஆண்டு டெல்லி செங்கோட்டையில் உள்ள ஒரு அறையாகக் கட்டப்பட்டது. பேரரசுக்குரிய தனியறை இங்குள்ள சிம்மாசனத்திற்கு அருகில் அமைந்திருந்தது. இந்த தனியறையில் வரிசையாக அமர காட்சி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது, இங்கு அமர்ந்து பார்த்தால் கோட்டையின் கிழக்கு முனையில் உள்ள யமுனா நதி தெரியும்படி அதன் தளம் உயர்த்தப்பட்டிருந்தது. இந்த காட்சி அரங்கு, நஹர்-ஏ-பெகிஷ்த் அல்லது "பேரின்பம் தரும் ஓடை" எனப்படும் கால்வாயை இணைக்கும் படி இருந்தது. இது ஷா மஹால் என்றும் ஜலௌ கானா என்றும் அழைக்கப்பட்டது.[60] இது அரண்மனையின் உட்புற நீதிமன்றமாகும். இதில் இரண்டு பகுதிகள் உள்ளன. முதல் பகுதியானது அரசவையில் உயர்ந்த பதவியிலிருப்போர்க்கானது; இரன்டாவது குறைந்த நிலை ஊழியர் அல்லது கடைநிலை ஊழியர்களுக்கானது. இந்த நீதிமன்றங்கள் 1857 இந்தியக் கிளர்ச்சிக்குப் பிறகு அழிக்கப்பட்டன. பிரெஞ்சு நாட்டு மருத்துவரும் நாடுகாண் பயனியுமான பிரான்கோயிஸ் பெர்னியர், 17 ஆம் நூற்றாண்டில் இங்கு நகைகளால் அலங்கரிக்கப்பட்ட மயில் சிம்மாசனத்தைப் பார்த்ததாக தனது மொகலாயப் பயணம் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.[61] மண்டபத்தின் இரு முனைகளிலும், இரண்டு வெளிப்புற வளைவுகளுக்கு மேல், பாரசீக கவிஞர் அமீர் குஸ்ரோவின் கல்வெட்டு உள்ளது.[62]

சொர்க்கத்தின் நீரோடை

[தொகு]

அரண்மனை வளாகத்தின் ஆறு வசிப்பிடங்கள் கோட்டையின் கிழக்கு விளிம்பில் யமுனை நதியை நோக்கும் வகையில் உயர்த்தப்பட்ட மேடையில் வரிசையாக அமைந்துள்ளன. இவைகள் அனைத்தும் ஒரு கால்வாயால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த கால்வாய் அமைப்பே சொர்க்கத்தின் நீரோடை என்று பொருள்தரும் நஹர்-ஏ-பெகிஷ்த்என அழைக்கப்படுகிறது, இது ஒவ்வொரு அரண்மனை மண்டப மையத்திலும் ஓடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது' கோட்டையின் வடகிழக்கு மூலையில் உள்ள ஷாஹி புர்ஜ் என்ற கோபுரம் வழியாக யமுனையிலிருந்து தண்ணீர் வரழைக்கப்படுகிறது.அரண்மனை வசிப்பிடங்கள் மற்றும் இணைக்கப்பட்ட கட்டிடங்களுக்கு கீழேயும், ஆற்றங்கரையிலிருந்து கட்டடங்களை இணைக்கும் இடங்களிலும் பின்னல் வேலைப்பாடுகளுடன் கூடிய வலையமைப்பு இருந்தது. குரானில் சொல்லப்பட்டது போன்று இந்த அரண்மனையானது சொர்க்கத்தை ஒத்திருக்கும் படி அமைக்கப்பட்டிருந்தது; இந்த அரண்மனையைச்சுற்றி, "பூமியில் ஒரு சொர்க்கம் இருந்தால், அது இங்குதான் உள்ளது! இங்குதான் உள்ளது!" என்ற வாசகம் ஈரடிச்செய்யுளாக எழுதப்பட்டுள்ளது. இந்த அரண்மனையின் வடிவம் இஸ்லாமியர்களின் மரபை ஒத்திருந்தது, இங்குள்ள முகலாய கட்டடத்தில் ஒவ்வொரு மண்டபட்திலும் இந்தியக் கட்டடக்கலையின் கூறுகளின் தாக்கங்கள் தெரிகின்றது. இந்த செங்கோட்டையில் உள்ள அரண்மனை வளாகமானது, முகாலய பாணிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.[59]

ஜெனானா

[தொகு]

ஜெனானா என்பது முகலாய மன்னரளின் அந்தப்புரப் பெண்கள் வாழும் ஆடம்பரமான இல்லங்களாகும். மேலும் இளவரசிகள் மற்றும் உயர் பதவியில் உள்ள பெண்களின் வசிப்பிடமாகும்.[63] பெண்கள் தங்குமிடங்கள் முற்றங்கள், ஓடும் நீரோட்டத்துடன் கூடிய நீர்நிலைகள், நீரூற்றுகள் மற்றும் தோட்டங்களைக் கொண்டிருந்தன.[64] அரண்மனையின் தெற்கு எல்லையில் ஜெனானாக்கள் எனப்படும் பெண்களுக்கான தங்குமிடங்கள் அமைந்துள்ளன. இதில் மும்தாஜ் மஹால், ரங் மஹால் ஆகியவையாகும். இது இதன் தங்கமுலாமினால் அழங்கரிக்கப்பட்ட உட்கூரை மற்றும் நஹர்-ஏ-பெகிஷ்த்திலிருந்து நீர் நிரப்பப்பட்ட பளிங்குக்கற்களாலான குளத்திற்கு மிகவும் பிரபலமானது.

மும்தாஜ் மஹால்

[தொகு]

கோட்டையில் யமுனை நதியைப் பார்த்தபடி அமைந்துள்ள ஆறு அரண்மனை வசிப்பிடங்களில் மும்தாஜ் மாகாலும் ஒன்று. இது அரண்மனையின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள ஜெனானா (பெண்கள் தங்குமிடம்)ஆகும். முகலாயப் பேரரசர் ஷாஜஹானின் மனைவி மும்தாசு மகால் என்றழைக்கப்பட்ட அர்ஜுமந்த் பானு பேகத்தின் வசிப்பிடம் இதுவாகும். இது தற்போது செங்கோட்டை தொல்பொருள் அருங்காட்சியகமாக உள்ளது.

ரங் மஹால்

[தொகு]

ரங் மஹாலில் பேரரசரின் மனைவிகள் மற்றும் அரச பெண்களுக்கான ஓய்வு விடுதி ஆகும். ரங் மஹால் ஏன்றால் "வண்ணங்களின் அரண்மனை" என்று பொருள்படும், பெயருக்கேற்ப இவ்விடம் பிரகாசமாக வர்ணம் பூசப்பட்டு மொசைக் கண்ணாடியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் மத்தியில் உள்ள பளிங்குக் குளத்திற்கு "சொர்க்கத்தின் நதி" எனப்பட்ட கால்வாய் மூலம் நீர் வழங்கப்பட்டது.

காஸ் மஹால்

[தொகு]

காஸ் மஹால் என்பது திவான் இ- காஸ் மண்டபத்தின் அருகிலுள்ள பேரரசரின் குடியிருப்பாக இருந்தது. இது சொர்க்கத்தின் நீரோடை மூலம் குளிர்விக்கப்பட்டது. அதனுடன் இணைக்கப்பட்ட ஒரு எண்கோண கோபுரம் முசம்மான் புர்ஜ் எனப்பட்டது. ஆற்றங்கரையில் காத்திருந்த மக்கள் முன் இக்கோபுரத்திலிருந்படி பேரரசர் காட்சி தருவார். அன்றைய பெரும்பாலான அரசர்கள் இதைத்தான் செய்தனர்.[65]

ஹம்மாம்

[தொகு]

ஹம்மாம் (அரபு: حمّام) என்பது அரண்மனைக் குளியலறை ஆகும். இது திவான்-இ-காஸ் மன்டபத்தின் வடக்கே அமைந்துள்ளது. இது வெள்ளை பளிங்கு வடிவத் தளங்களைக்கொண்ட ஒவ்வொரு அறையும் மூன்று குவிமாட அறைகளை உடையது.[66] இந்தக் குவிமாட உச்சிகளைக் கொண்ட மூன்று பகுதிகள் தாழ்வாரஙகளால் பிரிக்கப்படுகின்றன. இப்பகுதி வண்ணக் கண்ணாடிகள் பதித்து ஒளிரும் வகையில் அமைக்கப்பட்டது. தற்போதைய நுழைவாயிலின் இருபுறமும் உள்ள இரண்டு அறைகள் அரச குழந்தைகள் குளிப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. மூன்று நீரூற்றுப் படுகைகளைக் கொண்ட கிழக்குப் பகுதியானது முதன்மையாக ஆடை மாற்றும் அறையாகப் பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு அறையின் மையத்திலும் ஒரு நீரூற்று இருந்தது. ஒரு அறையில் பளிங்கினால் கட்டப்பட்ட நீர்த்தேக்கம் இருந்தது. அறிஞர்களின் கூற்றுப்படி, இதனோடு இணைக்கப்பட்ட நீர்க்குழாயிலிருந்து ரோஜாக்களால் நறுமணம் பூசப்பட்ட தண்ணீர் ஓடியது. இதன் மேற்குப் பகுதி சூடான அல்லது நீராவி குளியலுக்காகப் பயன்படுத்தப்பட்டது. இதன் சுவரில் வெப்பநிலையைச் சரிசெய்யும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.[67]

பாவோலி

[தொகு]
பாவோலி எனப்படும் படிக்கிணறு-செங்கோட்டை

1857 இந்தியக் கிளர்ச்சிக்குப் பிறகு ஆங்கிலேயர்களால் இடிக்கப்படாத சில நினைவுச்சின்னங்களில் பாவோலி அல்லது படிக் கிணறும் ஒன்றாகும். பாவோலியில் இருந்த அறைகள் சிறைச்சாலையாக மாற்றப்பட்டன. 1945-46 இல் இந்திய தேசிய இராணுவ வழக்குகளின்போது இங்கு இந்திய தேசிய இராணுவ அதிகாரிகளான ஷா நவாஸ் கான், கர்னல் பிரேம் குமார் சாகல், கர்னல் குர்பக்ஷ் சிங் தில்லான், ஆகியோரை ஆன்க்கிலேயர்கள் இங்கு சிறை வைத்திருந்தனர். பாவோலி, கிணற்றுக்கு கீழே செல்லும் இரண்டு படிக்கட்டுகளுடன் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.[68]

முத்து மசூதி

[தொகு]
முத்து மசூதி

முத்து மசூதி எனப்படும் மோதி மசூதி, ஹம்மாமின் மேற்குப்பகுதியில் உள்ளது. இந்தப் பள்ளிவாசல் ஷாஜகானின் மகனான ஔரங்கசீப்பால் 1659 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது ஒரு சிறிய, வெள்ளை பளிங்குக்கற்களால் செதுக்கப்பட்ட மூன்று-வளைவுக்கூரைகளைக் கொண்ட பள்ளிவாசல் ஆகும். கீழிருக்கும் மூன்று வளைவுகள் இதன் முற்றத்தை அலங்கரிக்கின்றன.[69]

ஹிரா மகால்

[தொகு]

ஹிரா மஹால் ("வைர அரண்மனை") என்பது ஹயா பாக்‌ஷித் பாக் தோட்டத்தின் முடிவில் இரண்டாம் பகதூர் ஷாவின் ஆட்சியில் கட்டப்பட்ட, கோட்டையின் வடகிழக்கில் உள்ள ஒரு கட்டிடமாகும்.[70] இது மூன்றடுக்குகளால் ஆனது. 1857 கிளர்ச்சியின் போது (அல்லது அதற்குப் பிறகு) இது இடிக்கப்பட்டது. இது "சக்கரவர்த்தியின் கோபுரம்" எனப் பொருள்படும் ஷாஹி புர்ஜ் என்றும் அழைக்கப்பட்டது.[71] அதன் மேல் முதலில் ஒரு மாடக் கோபுரம் இருந்தது. பலத்த சேதமடைந்த நிலையில், கோபுரம் புனரமைக்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்னால் பேரரசர் ஔரங்கசீப் சேர்த்த பளிங்கு மண்டபம் உள்ளது.[72]

ஹயா பக்‌ஷ் பாக்

[தொகு]
1854க்கு முன்பிருந்த ஜாஃபர் மகால் (before 1854, by Ghulam Ali Khan)
ஹயா பக்‌ஷ் பாக் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த குளமும் கட்டிடமும்
தோட்டத்தின் ஒரு பகுதியிலிருக்கும் ஆவணி மண்டபம்

ஹயா பக்‌ஷ் பாக் (பாரசீக மொழி: حیات بخش باغ‎, lit. 'வாழ்வு தரும் தோட்டம்') என்பது செங்கோட்டை வளாகத்தில் வடகிழக்கு பகுதியில் அமைந்த தோட்டமாகும். இது 200 அடி பரப்பலவில் அமைக்கப்பட்ட்டது.[73] இதில் ஒரு நீர்த்தேக்கம், சொர்க்கத்தின் நீரோடையிலிருந்து பாயும் கால்வாய்கள் உள்ளன. இதன் ஒவ்வொரு முனையிலும் வெள்ளைப்பளிங்கில் ஆன கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்து நாட்காட்டி மாதங்களான ஆவணி, புரட்டாசியைக் குறிக்கும் சிராவன்,பாத்ரா எனப்படும் இரன்டு கூடங்களும் அடங்கும். நீர்த்தேக்கத்தின் மையத்தில் பகதூர் ஷா ஜாஃபர் மன்னரால் 1842 இல் கட்டப்பட்ட சிவப்பு-மணற்கற்களாலான மண்டபம் உள்ளது இது அவருக்குப் பின்னர் ஜாஃபர் மஹால் என்றழைக்கப்பட்டது.[74] இதன் மேற்கில் மூன்லைட் கார்டன் எனப்படும் மெஹ்தாப் பாக் போன்ற சிறிய தோட்டங்களும் இருந்தன. பிரித்தானியர்களால் இதன் பெரும்பகுதி இடிக்கப்பட்டது.[10] கர்சன் பிரபு காலத்தில் இதன் சில பகுதிகள் மீளமைக்கப்பட்டன.[73] இவற்றுக்கு அப்பால், வடக்கே செல்லும் பாதை ஒரு வளைவுப் பாலம் மற்றும் சலிம்கர் கோட்டைக்கு செல்கிறது. இந்தத் தோட்டத்தை சீரமைக்கும் திட்டமும் உள்ளது.[75]

இளவரசர்களின் குடியிருப்பு

[தொகு]
இரவில் செங்கோட்டை.
படை வீரர்களுக்கான தேநீர் விடுதியாக மாற்றப்பட்ட இளவரசர்களின் மாளிகையின் ஒரு பகுதி

ஹயா பக்‌ஷ் பாக் மற்றும் ஷாஹி புர்ஜ் ஆகியவற்றின் வடக்கே இளவரசர்களின் மாளிகைப் பகுதி உள்ளது. இது முகலாய அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் பயன்படுத்தப்பட்டது.[76] 1857 கிளர்ச்சிக்குப் பிறகு பிரித்தானியப் படைகளால் இவையும் பெருமளவில் இடிக்கப்பட்டது. இதன் அரண்மனை ஒன்று படைவீரர்களுக்கான தேநீர் விடுதியாக மாற்றப்பட்டது.[77]

மேலும் காண்க

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. செங்கோட்டை வளாகம் - UNESCO உலக பாரம்பரிய அமைப்பு
  2. "qila | Meaning of qila in English by Shabdkosh English Hindi Dictionary". Shabdkosh Dictionary. Archived from the original on 11 November 2013. பார்க்கப்பட்ட நாள் 2 June 2018.
  3. "qila | Definition of qila in English by Oxford Dictionaries". Oxford Dictionaries | English. Archived from the original on 3 April 2018. பார்க்கப்பட்ட நாள் 3 April 2018.
  4. William M. Spellman (1 April 2004). Monarchies 1000–2000. Reaktion Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86189-087-0. Archived from the original on 14 December 2011. பார்க்கப்பட்ட நாள் 5 August 2012.
  5. Mehrdad Kia; Elizabeth H. Oakes (1 November 2002). Social Science Resources in the Electronic Age. Greenwood Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57356-474-8. Archived from the original on 11 January 2014. பார்க்கப்பட்ட நாள் 5 August 2012.
  6. Nelson, Dean (20 May 2011). "Delhi's Red Fort was originally white". The Daily Telegraph (UK). 
  7. "Ustad Ahmad – oi". oxfordindex.oup.com. பார்க்கப்பட்ட நாள் 8 December 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. "Building the Taj – who designed the Taj Mahal". PBS. Archived from the original on 18 February 2014. பார்க்கப்பட்ட நாள் 13 August 2013.
  9. "Red Fort lies along the River Yamuna". Archived from the original on 14 August 2012. பார்க்கப்பட்ட நாள் 4 August 2012.
  10. 10.0 10.1 10.2 10.3 10.4 10.5 10.6 10.7 "Comprehensive Conservation Management Plan for Red Fort, Delhi" (PDF). Archaeological Survey of India. March 2009. Archived (PDF) from the original on 8 May 2012. பார்க்கப்பட்ட நாள் 14 August 2012.
  11. Elliot, H. M. (Henry Miers) (26 September 1875). "Shah Jahan". [Lahore : Sh. Mubarak Ali. பார்க்கப்பட்ட நாள் 26 September 2020 – via Internet Archive.
  12. "List of Muhammadan and Hindu monuments vol.1". 1916. பார்க்கப்பட்ட நாள் 4 March 2020.
  13. Pinto, Xavier; Myall, E. G. (2009). Glimpses of History. Frank Brothers. p. 129. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8409-617-0. Archived from the original on 11 January 2014. பார்க்கப்பட்ட நாள் 25 September 2016.
  14. "Battle of Karnal | Summary". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 May 2021.
  15. Mehta, J. L. (2005). Advanced Study in the History of Modern India: Volume One: 1707–1813. Sterling Publishers Pvt. Ltd. p. 134. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-932705-54-6. Archived from the original on 12 January 2014. பார்க்கப்பட்ட நாள் 25 September 2016.
  16. Jayapalan, N. (2001). History of India. Atlantic Publishers & Distri. p. 249. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7156-928-1. Archived from the original on 12 January 2014. பார்க்கப்பட்ட நாள் 25 September 2016.
  17. Advanced Study in the History of Modern India: 1707–1813 – Jaswant Lal Mehta – Google Books. Google Books. Retrieved 29 July 2013.
  18. Roy, Kaushik (2004). India's Historic Battles: From Alexander the Great to Kargil. Permanent Black, India. pp. 80–81. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-78241-09-8.
  19. Elphinstone, Mountstuart (1841). History of India. John Murray, London. p. 276.
  20. Kulkarni, Uday S. (2012). Solstice at Panipat, 14 January 1761. Pune: Mula Mutha Publishers. p. 345. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-921080-0-1.
  21. Kumar Maheshwari, Kamalesh; Wiggins, Kenneth W. (1989). Maratha Mints and Coinage. Indian Institute of Research in Numismatic Studies. p. 140. Archived from the original on 12 January 2014. பார்க்கப்பட்ட நாள் 25 September 2016.
  22. Dalrymple, William (2019). The Anarchy.
  23. Meena, P R. RPSC RAS Prelims: History of Rajasthan Complete Study Notes With MCQ. New Era Publication.
  24. Gupta, Devesh. Rajasthan District G.K.: English Medium. Atharv Publication. p. 134.
  25. 25.0 25.1 Murphy, Anne (2012). The Materiality of the Past: History and Representation in Sikh Tradition. Oxford University Press. p. 151. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-991629-0. Archived from the original on 27 September 2013. பார்க்கப்பட்ட நாள் 25 September 2016.
  26. Murphy, Anne (29 November 2012). The Materiality of the Past: History and Representation in Sikh Tradition (in ஆங்கிலம்). OUP USA. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-991629-0.
  27. Mayaram, Shail (2003). Against History, Against State: Counterperspectives from the Margins. Columbia University Press. p. 202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-12731-8. Archived from the original on 30 September 2013. பார்க்கப்பட்ட நாள் 25 August 2012.
  28. Eugenia W Herbert (2013). Flora's Empire: British Gardens in India. Penguin Books Limited. p. 333. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8475-871-9.
  29. Nelson, Sara C. (21 February 2013). "Koh-i-Noor Diamond Will Not Be Returned To India, David Cameron Insists". The Huffington Post இம் மூலத்தில் இருந்து 19 August 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130819011613/http://www.huffingtonpost.co.uk/2013/02/21/koh-i-noor-diamond-not-returned-india-david-cameron-insists-pictures_n_2732342.html. 
  30. India. Ministry of Defence (2005). Sainik samachar. Director of Public Relations, Ministry of Defence. Archived from the original on 30 September 2013. பார்க்கப்பட்ட நாள் 5 August 2012.
  31. Muslim India. Muslim India. 2004. Archived from the original on 30 September 2013. பார்க்கப்பட்ட நாள் 5 August 2012.
  32. "Red Fort facelift to revive Mughal glory in 10 years : Mail Today Stories, News – India Today". Indiatoday.intoday.in. 1 June 2009. Archived from the original on 13 December 2013. பார்க்கப்பட்ட நாள் 3 January 2014.
  33. "CHAPTER-10_revised_jan09.pmd" (PDF). Archived from the original (PDF) on 8 May 2012. பார்க்கப்பட்ட நாள் 13 May 2014.
  34. "CHAPTER-00_revisedfeb09.pmd" (PDF). Archived from the original (PDF) on 8 May 2012. பார்க்கப்பட்ட நாள் 13 May 2014.
  35. Singh, Upinder (2008). A History of Ancient and Early Medieval India From the Stone Age to the 12th Century. p. 218. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131711200.
  36. Devashish, Dasgupta (2011). Tourism Marketing. Pearson Education India. p. 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-3182-6. Archived from the original on 29 September 2013. பார்க்கப்பட்ட நாள் 25 August 2012.
  37. Schreitmüller, Karen; Dhamotharan, Mohan (CON); Szerelmy, Beate (CON) (14 February 2012). Baedeker India. Baedeker. p. 253. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-8297-6622-7. Archived from the original on 27 September 2013. பார்க்கப்பட்ட நாள் 25 August 2012.
  38. "Singh becomes third PM to hoist flag at Red Fort for 9th time". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 15 August 2012. http://www.business-standard.com/generalnews/news/singh-becomes-third-pm-to-hoist-flag-at-red-fort-for-9th-time/44355/. 
  39. "Issue of ₹ 500 banknotes inset letter 'E' in Mahatma Gandhi (New) series after demonitization". Reserve Bank of India. 8 November 2016. Archived from the original on 9 November 2016. பார்க்கப்பட்ட நாள் 9 November 2016.
  40. "Red Fort attack will not affect peace moves". 19 August 2012. Archived from the original on 3 October 2012. பார்க்கப்பட்ட நாள் 19 August 2012.
  41. "Red Fort terrorist attacks". 31 March 2012. Archived from the original on 13 May 2013. பார்க்கப்பட்ட நாள் 4 August 2012.
  42. Manish, Sai (29 April 2018). "Dalmia Bharat group to adopt Delhi's iconic Red Fort for five years". பிசினஸ் ஸ்டாண்டர்ட் இம் மூலத்தில் இருந்து 13 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190513020218/https://www.business-standard.com/article/companies/shah-jahan-s-iconic-red-fort-in-delhi-is-now-dalmia-group-s-red-fort-118042700414_1.html. 
  43. Krishna, Navmi (30 April 2018). "Red Fort adoption row: The long list of Monument Mitras". தி இந்து. https://www.thehindu.com/news/national/red-fort-adoption-row-the-long-list-of-monument-mitras/article23729853.ece. 
  44. Nettikkara, Samiha (30 April 2018). "Indians upset over Red Fort monument 'adoption'". பிபிசி இம் மூலத்தில் இருந்து 9 July 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190709150855/https://www.bbc.com/news/world-asia-india-43949370. 
  45. Pathak, Vikas (2 May 2018). "Historians seek review of Red Fort contract". தி இந்து. https://www.thehindu.com/news/national/historians-seek-review-of-red-fort-contract/article23752738.ece. 
  46. 46.0 46.1 "Security tightened across Delhi on I-Day eve". Daily News and Analysis. 14 August 2012 இம் மூலத்தில் இருந்து 18 August 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120818022210/http://www.dnaindia.com/india/report_security-tightened-across-delhi-on-i-day-eve_1727877. 
  47. "Tight security ensures safe I-Day celebration". The Asian Age. 16 August 2012 இம் மூலத்தில் இருந்து 17 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171117002607/http://www.asianage.com/delhi/tight-security-ensures-safe-i-day-celebration-119. 
  48. "Rain Brings Children Cheer, Gives Securitymen a Tough Time". தி இந்து. 16 August 2011 இம் மூலத்தில் இருந்து 30 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131230234043/http://www.thehindu.com/news/national/article2359798.ece?textsize=small&test=2. 
  49. "Red Fort Complex". World Heritage List. UNESCO World Heritage Centre. Archived from the original on 3 August 2009. பார்க்கப்பட்ட நாள் 15 November 2009.
  50. N. L. Batra (May 2008). Delhi's Red Fort by the Yamuna. Niyogi Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780856676543. Archived from the original on 9 October 2013. பார்க்கப்பட்ட நாள் 5 August 2012.
  51. 51.0 51.1 Langmead, Donald; Garnaut, Christine (2001). Encyclopedia of Architectural and Engineering Feats. ABC-CLIO. p. 178. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57607-112-0.
  52. "World Heritage Site – Red Fort, Delhi". Archaeological Survey of India. Archived from the original on 24 December 2014. பார்க்கப்பட்ட நாள் 15 August 2012.
  53. Fanshawe.H.C (1998). Delhi, Past and Present. Asian Educational Services. pp. 1–8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-1318-8. Archived from the original on 15 December 2019. பார்க்கப்பட்ட நாள் 10 June 2009. {{cite book}}: |work= ignored (help)
  54. Sharma p.143
  55. Mahtab Jahan (2004). "Dilli's gates and windows". MG The Milli Gazette. Archived from the original on 19 June 2017. பார்க்கப்பட்ட நாள் 17 May 2009.
  56. "World heritage site". Asi.nic.in. Archived from the original on 1 November 2015. பார்க்கப்பட்ட நாள் 3 August 2015.
  57. 57.0 57.1 "Description sign of Chhatta Chowk". Wikimedia Commons. User:Vssun. 8 December 2012. பார்க்கப்பட்ட நாள் 8 February 2014.
  58. "Lal Qila (Red Fort) – Naubat Khana". indiapicks.com. Archived from the original on 11 March 2018. பார்க்கப்பட்ட நாள் 12 April 2020.
  59. 59.0 59.1 59.2 59.3 "A handbook for travellers in India, Burma, and Ceylon". Archived from the original on 24 December 2013. பார்க்கப்பட்ட நாள் 3 January 2014.
  60. "Akbar period architecture". britannica.com. Archived from the original on 4 July 2019. பார்க்கப்பட்ட நாள் 12 April 2020.
  61. Bernier, François (1891). Travels in the Mogul Empire, A.D. 1656–1668. Archibald Constable, London. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7536-185-9.
  62. "World Heritage Site – Red Fort, Delhi; Diwan-i-Khas". Archaeological Survey of India. பார்க்கப்பட்ட நாள் 15 August 2012.
  63. Hambly, Gavin (1998). "Chapter 19: Armed Women Retainers in the Zenanas of Indo-Muslim Rulers: The case of Bibi Fatima". In Hambly, Gavin (ed.). Women in the medieval Islamic world : Power, patronage, and piety (1st ed.). New York: St. Martin's Press. pp. 429–467. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0312224516.
  64. Misra, Rekha (1967). Women in Mughal India. New Delhi: Munshiram Manoharlal. pp. 76–77. இணையக் கணினி நூலக மைய எண் 473530.
  65. "Muthamman-Burj". Archaeological Survey of India. 2011. Archived from the original on 24 November 2013. பார்க்கப்பட்ட நாள் 12 April 2020.
  66. "Hammams Red Fort Delhi". liveindia.com. Archived from the original on 30 September 2019. பார்க்கப்பட்ட நாள் 12 April 2020.
  67. John Murray (Firm) (1911). A handbook for travellers in India, Burma, and Ceylon . University of California Libraries. London : J. Murray; Calcutta : Thacker, Spink, & Co.
  68. "Red Fort Baoli". agrasenkibaoli.com. Archived from the original on 10 January 2016. பார்க்கப்பட்ட நாள் 1 August 2015.
  69. World Heritage Series – Red Fort. Published by Director General, Archaeological Survey of India, New Delhi, 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87780-97-7
  70. "Red Fort". culturalindia.net. Archived from the original on 7 April 2019. பார்க்கப்பட்ட நாள் 12 April 2020.
  71. "Shahi Burj Monument in Old Delhi (Shahjahanabad)". lonelyplanet.com. பார்க்கப்பட்ட நாள் 12 April 2020.
  72. DK Eyewitness Top 10 Delhi. 17 December 2019. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781465497246. பார்க்கப்பட்ட நாள் 12 April 2020.
  73. 73.0 73.1 Murray, John (1911). A handbook for travellers in India, Burma, and Ceylon (8th ed.). Calcutta: Thacker, Spink, & Co. p. 198. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1175486417. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25.
  74. "World Heritage Site – Red Fort, Delhi; Hayat-Bakhsh Garden and Pavilions". Archaeological Survey of India. Archived from the original on 7 February 2014. பார்க்கப்பட்ட நாள் 15 August 2012.
  75. "Restoring the lost glory of Red Fort". Times of India. பார்க்கப்பட்ட நாள் 12 April 2020.
  76. "മലയാളം: ഡെൽഹി ചെങ്കോട്ടയിലെ ഹെറിറ്റേജ് ടീ ഹൗസിനെക്കുറിച്ചുള്ള വിവരണംEnglish: Description about Heritage Tea House, Red Fort, Delhi". 8 December 2012.
  77. Sinha, Saurabh (2003-02-23). "Restoring the lost glory of Red Fort". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2013-12-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131214152747/http://articles.timesofindia.indiatimes.com/2003-02-23/delhi/27283226_1_red-fort-17th-century-fort-chandni-chowk-side. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கோட்டை&oldid=4059839" இலிருந்து மீள்விக்கப்பட்டது