தீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தீக்
நகரம்
தீக் அரண்மனை அல்லது தீக் ஜல் மகால்
தீக் அரண்மனை அல்லது தீக் ஜல் மகால்
தீக் is located in Rajasthan
தீக்
தீக்
ராஜஸ்தானில் தீக்கின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°28′N 77°20′E / 27.47°N 77.33°E / 27.47; 77.33ஆள்கூறுகள்: 27°28′N 77°20′E / 27.47°N 77.33°E / 27.47; 77.33
நாடு இந்தியா
மாநிலம்ராஜஸ்தான்
மாவட்டம்பரத்பூர்
அரசு
 • வகைகாங்கிரசு
ஏற்றம்174 m (571 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்44,999
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் தீக் கோட்டை

தீக் (Deeg) என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமும், நகராட்சியுமாகும். இது பரத்பூருக்கு வடக்கே 32 கிலோமீட்டர் (20 மைல்) மற்றும் ஆக்ராவுக்கு வடக்கே 70 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

இந்து புராணங்களில், தீக் கிருட்டிணனின் பரிகிராமா பாதையில் அமைந்திருந்தது. இது தீக்கிலிருந்து 14 கிலோமீட்டர் (8.7 மைல்) தொலைவில் உள்ள கோவர்தனத்தில் தொடங்கியது. சிலர் இதை கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டைய நகரமான "திர்கா" அல்லது "திர்காபூர்" என்று அடையாளம் காணவும் செய்கின்றனர். 1722 ஆம் ஆண்டில் மகாராஜா பதான் சிங் இதன் ஆட்சியாளராக அறிவிக்கப்பட்டபோது, சின்சின்வர் இந்து ஜாட் மாநிலமான பரத்பூரின் முதல் தலைநகரமாகா தீக் இருந்தது. 1730 ஆம் ஆண்டில், மகாராஜா சூரஜ் மல் நகரில் வலுவான கோட்டையை அமைத்தார். சூரஜ் மல் தலைநகரை பரத்பூருக்கு மாற்றிய பின்னர், தீக் பரத்பூர் சுதேச அரசு ஆட்சியாளர்களின் இரண்டாவது தலைநகரானது. இது கோட்டைகள், அரண்மனைகள், தோட்டங்கள் மற்றும் நீரூற்றுகளின் எண்ணிக்கையால் அறியப்படுகிறது.

நிலவியல்[தொகு]

தீக் 27.47 ° N 77.33 ° E இல் அமைந்துள்ளது. [1] இது சராசரியாக 174 மீ (571 அடி) உயரத்தில் உள்ளது..

வரலாறு[தொகு]

ஒரு பழங்கால நகரமான இது கந்த புராணத்தில் "திர்கா" அல்லது "திர்கபுரா" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1722 ஆம் ஆண்டில் பதான் சிங் அதன் ஆட்சியாளராக அறிவிக்கப்பட்டபோது, ஜாட் மாநிலமான பரத்பூரின் முதல் தலைநகரம் தீக் ஆகும். 1730 ஆம் ஆண்டில், மகாராஜா சூரஜ் மால் இங்கு வலுவான கோட்டையை அமைத்தார். சூரஜ் மால் தலைநகரை பரத்பூருக்கு மாற்றிய பின்னர், நகரம் பரத்பூர் சுதேச அரசின் ஆட்சியாளர்களின் இரண்டாவது தலைநகரானது. இது கோட்டைகள், அரண்மனைகள், தோட்டங்கள் மற்றும் நீரூற்றுகளின் எண்ணிக்கையால் அறியப்படுகிறது.

பதான் சிங் (கி.பி 1722-1756) அரியணையில் ஏறியவுடன் பழங்குடியினரின் தலைமைத்துவத்தை பலப்படுத்தினார். இதன் மூலம் பரத்பூரில் உள்ள ஜாட் இனத்தின் நிறுவனர் ஆனார். தீக்கின் நகரமயமாக்கலைத் தொடங்கிய பெருமையும் அவருக்குச் செல்கிறது. அவர்தான் புதிதாக நிறுவப்பட்ட ஜாட் இராச்சியத்தின் தலைமையகமாக இந்த இடத்தை தேர்ந்தெடுத்தார்.

வட இந்தியாவின் கட்டுப்பாட்டிற்காக அகமத் ஷா துரானி தலைமையிலான மராட்டியர்களுக்கும் பான்-இசுலாமிய கூட்டணிக்கும் இடையிலான நடந்த மூன்றாம் பானிபட் போரில், சம்ஷேர் பகதூர் தனது 20 வயதில் இங்குதான் இறந்தார்.

1804 ஆம் ஆண்டில், தீக் போர் , தீக் முற்றுகை ஆகிய இரண்டும் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தை பரத்பூரின் ஜாட் ஆட்சியாளர்களுடனும் அவர்களது மராத்தா கூட்டாளிகளுடனும் இப்பகுதியைக் கட்டுப்படுத்துவதற்காக மோதலுக்கு கொண்டு வந்தன.

திரைப்படங்களில் நகரம்[தொகு]

ஹெர்மன் ஹெஸ்ஸின் புதினத்தை அடிப்படையாகக் கொண்ட சித்தார்த்தா, கான்ராட் ரூக்ஸ் எழுதிய 1972 திரைப்படம் இங்கு படமாக்கப்பட்டது. படத்தின் கூடுதல் காட்சிகள் பரத்பூரின் கேவலாதேவ் தேசியப் பூங்காவில் படமாக்கப்பட்டன.

புள்ளிவிவரங்கள்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி,[2] தீக்கின் மக்கள் தொகை 40,999 ஆகும். இதில் ஆண்கள் 54%; பெண்கள் 46% ஆகவும் உள்ளனர். இதன் சராசரி கல்வியறிவு விகிதம் 61% ஆகும். இது தேசிய சராசரியான 59.5%ஐ விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 71%, பெண் கல்வியறிவு 49%. நகரில், மக்கள் தொகையில் 17% பேர் 6 வயதுக்குட்பட்டவர்கள்.

அணுகல்[தொகு]

ஆக்ரா, மதுரா, அல்வார், பரத்பூரிலிருந்து நகரை அடையலாம். ஜெய்ப்பூர், பரத்பூர், அல்வார், மதுரா மற்றும் புதுதில்லியில் இருந்து வழக்கமான பேருந்துகள் கிடைக்கின்றன. அல்வார் மற்றும் மதுராவிலிருந்து தொடவண்டியும் கிடைக்கின்றன. தீக் தொடர்வண்டி நிலையம் மதுரா-அல்வார் இருப்புப்பாதையில் அமைந்துள்ளது. இது முக்கியமாக சரக்கு வண்டிகளையும் ஜெய்ப்பூரிலிருந்து மெதுவான தொடர்வண்டி சேவையையும் வழங்குகிறது.

தில்லியில் இருந்து நான்கு மணிநேரத்திலும், ஆக்ராவிலிருந்து இரண்டு மணிநேரத்திலும், மதுராவிலிருந்து ஒரு மணி நேரத்திலும் சாலை வழியாகச் செல்லலாம்.[3] அருகிலுள்ள விமான நிலையங்கள் ஆக்ரா (70 கி.மீ) மற்றும் தில்லி (200 கி.மீ) உள்ளன.

ஈர்ப்புகள்[தொகு]

  • தீக் அரண்மனை பரத்பூர் மாநில ஆட்சியாளர்களுக்கு ஒரு ஆடம்பரமான கோடைக்கால தங்குமிடமாக 1772இல் கட்டப்பட்டது. இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள பரத்பூரிலிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ள இந்த அரண்மனை 1970 களின் முற்பகுதி வரை செயல்பாட்டில் இருந்தது.

மிகவும் பழமையான இலட்சுமண கோயில், தீக்கில் பிரதான இடமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Falling Rain Genomics, Inc - Deeg
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. 2004-06-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-11-01 அன்று பார்க்கப்பட்டது.
  3. PODDER, TANUSHREE. "Summer symphony". TIME OUT. The Hindu. 20 மார்ச் 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 October 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீக்&oldid=3247844" இருந்து மீள்விக்கப்பட்டது