1951 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 1951
முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 1951
முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 1951
நடத்திய நகரம்புதுதில்லி, இந்தியா
பங்கெடுத்த நாடுகள்11
பங்கெடுத்த வீரர்கள்489
நிகழ்வுகள்6
துவக்க விழாமார்ச் 4
நிறைவு விழாமார்ச் 11
திறந்து வைத்தவர்ராஜேந்திர பிரசாத்
முதன்மை அரங்கம்தியான் சந்த் தேசிய அரங்கம்
அதிக பதக்கங்களைப் பெற்ற நாடு சப்பான்
(அடுத்த) 1954

முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், (I Asian Games) (ஆசியன் விளையாட்டுப் போட்டிகள்)' மார்ச் 4, 1951 முதல் மார்ச் 11, 1951 வரை இந்தியாவில், புது டில்லியில் நடைபெற்றது. இதில் 11 ஆசிய நாடுகள் பங்கேற்றன. முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 6 விளையாட்டுகள் இடம்பெற்றன.

பங்குபெற்ற நாடுகள்[தொகு]

  1.  ஆப்கானித்தான்
  2.  மியான்மர்
  3.  இந்தோனேசியா
  4.  ஈரான்
  5.  சப்பான்
  6.  பிலிப்பீன்சு
  7.  சிங்கப்பூர்
  8.  தாய்லாந்து
  9.  இந்தியா
  10.  இலங்கை
  11.  நேபாளம்

மொத்தப் பதக்கங்கள்[தொகு]

  • போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 57
  • வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 57
  • வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 55
  • மொத்தப் பதக்கங்கள் - 169

விளையாட்டுக்கள்[தொகு]

அதிகாரபூர்வமாக 6 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:

  • தடகளம்
  • கூடைப் பந்து
  • காற்பந்தாட்டம்
  • நீச்சற் போட்டி
  • பாரம்தூக்குதல்
  • சைக்கிள் ஓட்டம்

நாடுகள் பெற்ற பதக்கங்கள்[தொகு]

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 ஜப்பான் 24 21 15 60
2 இந்தியா 15 16 20 51
3 ஈரான் 8 6 2 16
4 சிங்கப்பூர் 5 7 2 14
5 பிலிப்பைன்சு 5 6 8 19
6 இலங்கை 0 1 0 1
7 இந்தோனேசியா 0 0 5 5
8 பர்மா 0 0 3 3
மொத்தம் 57 57 55 169
சான்று[1]

மேற்கோள்கள்[தொகு]