உள்ளடக்கத்துக்குச் செல்

மத்திய தில்லி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மத்திய தில்லி
மத்திய டெல்லி
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்தில்லி
அரசு
 • வகைமாவட்டம் & மாநகராட்சி
 • நிர்வாகம்மாவட்ட ஆட்சியர் & தில்லி மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல்இந்திஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்தில்லி மாநகராட்சி
இணையதளம்https://s34b0a59ddf11c58e7446c9df0da541a84.s3waas.gov.in/
தில்லியின் 11 மாவட்டங்கள்

மத்திய தில்லி மாவட்டம், தில்லியின் ஒன்பது மாவட்டங்களில் ஒன்று. இதன் நிர்வாகத் தலைமையிடம் தாரியாகஞ்ச் பகுதியில் உள்ளது. இங்கு 644,005 பேர் வாழ்கின்றனர். இது 25 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. சதுர கிலோமீட்டருக்குள் 25, 759 பேர் வாழ்கின்றனர். மக்கள் நெருக்கடி மிகுந்த மாவட்டங்களில் ஒன்று. முகலாயர் ஆட்சிக் காலத்தில் முக்கிய நகரமாக விளங்கிய பழைய தில்லி எனும் ஷாஜகானாபாத், இந்த மாவட்டத்தில் உள்ளது. இங்கு, செங்கோட்டை, ஜும்மா மசூதி, சாந்தினி சவுக், சிஸ் கஞ்ச் சாகிப் குருத்துவார், திகம்பர சமணக் கோயில் ஆகியன உள்ளன. இது சாந்தனி சவுக் மக்களவைத் தொகுதிக்குட்பட்டது.

இது மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை: தாரியாகஞ்ச், பாகர்கஞ்ச் மற்றும் கரோல் பாக் ஆகும்.

மக்கள் தொகை

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, 578,671 மக்கள் வாழ்ந்தனர்.[1] சதுர கிலோமீட்டருக்கு 25, 759 பேர் வாழ்கின்றனர்.[1] பால் விகிதக் கணக்கெடுப்பில், ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 892 பெண்கள் உள்ளனர்.[1] இங்கு வாழ்வோரில் 85.25% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[1]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "District Census 2011". Census2011.co.in. 2011. Retrieved 2011-09-30.

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்திய_தில்லி_மாவட்டம்&oldid=4243907" இலிருந்து மீள்விக்கப்பட்டது