முடிசூட்டுப் பூங்கா, தில்லி
முடிசூட்டுப் பூங்கா (Coronation Park) என்பது இந்தியாவின் தில்லியில் நிரங்காரி சரோவர் அருகில் புராரி சாலையில் அமைந்துள்ள பூங்காவாகும். இது சில நேரங்களில் முடிசூட்டு நினைவகம் எனக் குறிப்பிடப்படுகின்றது. 1877இல் இங்குதான் தில்லி தர்பார் நடந்தது; ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா அப்போது இந்தியாவின் பேரரசியாக பறைசாற்றப்பட்டார். பின்னர் 1903இல் ஏழாம் எட்வர்டு அரசர் வழிமுறையாக அரியணை ஏறியபோதும் தொடர்ந்து ஐந்தாம் ஜோர்ஜ் அரியணை ஏறியபோதும் தில்லி தர்பார் இங்கு நடந்தது. 1911இல் நடந்த தர்பாருக்கு அனைத்து மன்னரரசர்களும் அவைக்கு வந்திருந்தனர். தில்லியின் வரலாற்றை வலியுறுத்தும் வண்ணம் முடிசூட்டுப் பூங்காவின் திறந்தவெளியில் தர்பார் நடத்த முடிவெடுக்கப்பட்டது.[1][2][3]
இந்த நினைவுச் சின்னம் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.
1960களில் புது தில்லியின் மையத்தில் இந்தியாவின் வாயிலுக்கு எதிராக இருந்த மிகப் பெரிய, உயரமான ஐந்தாம் ஜோர்ஜ் அரசரின் சிலை இங்கு இடம்பெயர்க்கப்பட்டது. சதுரக்கூம்பகத்தூணின் எதிராக இது நிறுவப்பட்டுள்ளது.[1][2][4][5]
அருங்காட்சியகம்
[தொகு]-
முடிசூட்டுப் பூங்காவின் நுழைவில் முடிசூட்டு தர்பார் 1911இல் இங்கு நடந்ததை அறிவிக்கும் கல்வெட்டு
-
22வது இந்தியத் தலைமை ஆளுநர் வில்லிங்டன் பிரபுவின் சிலை
-
காலியான அடித்தளங்கள் சிலைகள் இடம் பெயரக் காத்திருக்கின்றன
-
1911–1916இல் இந்தியத் தலைமை ஆளுநராக இருந்த சார்லசு ஆர்டிங் பிரபுவின் சிலை
-
சர் கய் பிளீட்வுட் வில்சனின் மார்பளவுச் சிலை
-
1960களில் பூங்காவிற்கு மாற்றப்படுவதற்கு முன்பாக ஐந்தாம் ஜோர்ஜ் அரசரின் சிலை இந்தியாவின் வாயிலுக்கு முன்பாக இருந்தவிடம்
-
1903ஆம் ஆண்டு தில்லி தர்பார் பேரணியின் காட்சி
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "A monumental delight for Delhiites". தி இந்து. 19 September 2005. Archived from the original on 2008-03-09. பார்க்கப்பட்ட நாள் 2009-06-06.
- ↑ 2.0 2.1 Charlotte Corey (29 December 2002). "The Delhi Durbar 1903 Revisited". Sunday Times. Archived from the original on 13 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-06-06.
- ↑ Lucy Peck (2005). Delhi – A thousand years of Building. New Delhi: Roli Books Pvt Ltd. p. 241. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7436-354-8. பார்க்கப்பட்ட நாள் 2009-06-06.
Though Calcutta was the capital, Delhi's historical significance persuaded the British to hold three Durbars here. The first was the imperial assemblage of 1877, which brought 70,000 people into Delhi, followed by the two coronation durbars of 1902–03 and 1911–12, both attended by even more people and the second by the King and Queen themselves. Each one was held at the same spot on open ground to the north of the Cantonment area. The encampments of all those attending spread for miles. The Viceroy and Governors of the various provinces were camped where Delhi University now stands and a light railway connected them with the Civil Lines in one direction and the Parade Ground and Proclamation dias on the other.
{{cite book}}
:|work=
ignored (help) - ↑ Jeffrey N. Dupée (2008). Traveling India in the Age of Gandhi. University Press of America. p. vii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7618-3949-1. பார்க்கப்பட்ட நாள் 2009-06-06.
{{cite book}}
:|work=
ignored (help) - ↑ "Coronation park: legacy of the Raj". Indian Express. 27 November 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-06-06.