உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவின் வாயில்

ஆள்கூறுகள்: 28°36′46.31″N 77°13′45.5″E / 28.6128639°N 77.229306°E / 28.6128639; 77.229306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவின் வாயில்
இந்தியா
முதலாம் உலகப் போர் மற்றும் மூன்றாம் ஆப்கான் போரின் போது வீழ்ந்த இந்தியப் படைகளின் இறந்தவர்கள் க்கு
நிறுவப்பட்டது10 பெப்பிரவரி 1921
திறப்பு12 பெப்பிரவரி 1931
அமைவிடம்28°36′46.31″N 77°13′45.5″E / 28.6128639°N 77.229306°E / 28.6128639; 77.229306
இந்தியாவின் வாயில் is located in டெல்லி
இந்தியாவின் வாயில்
இந்தியாவின் வாயில் (டெல்லி)
வடிவமைப்புசர் எட்வின் லூட்டியன்சு
13,313 பொறிக்கப்பட்ட பெயர்கள், 12,357 இந்தியர்கள்[1] மற்றும் பிரிக்கப்படாத இந்தியாவின் 70,000 வீழ்ந்த வீரர்களுக்கு மரியாதை[2]

இந்தியாவின் வாயில் (India Gate) என்பது புதுதில்லியில், ராஜ்பத்தில் அமைந்துள்ள ஒரு நினைவுச்சின்னம் ஆகும். இது முதலில் அனைத்திந்திய போர் நினைவுச்சின்னம் (All India War Memorial) என்றழைக்கப்பட்டது. 1914–21 வரையான காலப்பகுதியில், முதல் உலகப் போர் நடைபெற்றபோது பிரான்ஸ், மெசபடோமியா, ஈரான், கிழக்கு ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் உயிரிழந்த 82,000 பிரித்தானிய இந்தியப் படைவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டது. ஐக்கிய இராட்சியம் சேர்ந்தவர்கள் உட்பட வீரர்களினதும், அதிகாரிகளினதும் 13,300 பேர்கள் இவ்வாயிலில் பொறிக்கப்பட்டுள்ளது.[3][2]

அமர் ஜவான் ஜோதி

[தொகு]
அமர் ஜவான் ஜோதி கோவில்.

1971 ஆம் ஆண்டில், வங்காளதேச விடுதலைப் போர் நடைபெற்ற பின் ஒரு சிறிய நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. இது ஒரு கருப்பு பளிங்கு நினைவுச் சின்னமாக, துப்பாக்கியின் பின் புறத்தில் ஒரு வீரரின் தலைக்கவசம் அமைந்துள்ளது. நினைவுச் சின்னத்தின் நாற்புறத்திலும் தீபங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டமைப்பு "அமர் ஜவான் ஜோதி" (இறப்பற்ற வீரர்) என அறியப்படுகிறது. இது அறியப்படாத வீரரின் கல்லறையாகவும் விளங்குகிறது.

அன்றைய பிரதமரான இந்திரா காந்தியால் ஜனவரி 26, 1972 அன்று திறந்து வைக்கப்பட்டது. இன்று குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் வருகைபுரியும் நாட்டின் சிறப்பு விருந்தினர்கள், நாட்டின் சிறப்பு தினங்களில் அந்த இடத்தில் மரியாதை செலுத்துவது ஒரு வழக்கமாகவுள்ளது. மேலும் ஒவ்வொரு குடியரசு தினத்தன்றும் ராஜ்பாத்தின் ஆண்டு அணிவகுப்பில் இணைந்துகொள்வதற்கு முன்னர் பிரதமர் முப்படைத் தலைவர்களுடன் வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதுண்டு.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Chhina, Last Post. Indian War Memorials Around the World (2014), ப. 78.
  2. 2.0 2.1 "DELHI MEMORIAL (INDIA GATE)". CWGC. CWGC. 2014. பார்க்கப்பட்ட நாள் 3 September 2014.
  3. Metcalf, Thomas R. (31 March 2014). "WW I: India's Great War Dulce Et Decorum Est India Gate, our WW-I cenotaph, now stands for an abstracted ideal". Outlook (31 March 2014). http://www.outlookindia.com/article.aspx?289882. பார்த்த நாள்: 8 April 2014. 

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
India Gate
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியாவின்_வாயில்&oldid=3771078" இலிருந்து மீள்விக்கப்பட்டது