இந்திரா காந்தி மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திரா காந்தி மையம்(Indira Gandhi Arena) புது தில்லியின் கிழக்குப் பகுதியில் உள்ள இந்திரபிரஸ்தா வளாகத்தில் அமைந்துள்ள இந்தியாவிலேயே மிகப்பெரும் உள்விளையாட்டு அரங்கமாகும். ஆசியா மற்றும் உலகளவில் இரண்டாவது மிகப்பெரும் விளையாட்டு வசதியாகவும் விளங்குகிறது. 1982ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுகளில் உள்ளரங்க விளையாட்டுகளுக்காக இந்திய அரசால் கட்டமைக்கப்பட்டது. இது 102 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆசிய விளையாட்டுகளுக்குப் பிறகு பல்வேறு போட்டிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.25000 நபர்கள் அமரக்கூடிய இவ்வரங்கம் முன்னாள் பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி அம்மையார் பெயரைத் தாங்கியுள்ளது.

பலமுறை சீரமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கம் 2010 பொதுநலவாயம் விளையாட்டுக்கள் காரணமாக மீண்டும் சீரமைக்கப்படுகிறது. ஒலி சிதறா செயற்கை சுவர்கள்,நவீன ஒளி/ஒலி அமைப்புகள் நிறுவப்படுகின்றன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரா_காந்தி_மையம்&oldid=1683302" இருந்து மீள்விக்கப்பட்டது