தில்லி பாசறை மன்றம்
தில்லி பாசறை மன்றக் குழு | |
---|---|
உள்ளாட்சி அமைப்பு | |
தில்லியில் பாசறை மன்றத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 28°35′53″N 77°07′24″E / 28.598091°N 77.1234069°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தில்லி |
மாவட்டம் | புது தில்லி |
பரப்பளவு | |
• மொத்தம் | 42.3 km2 (16.3 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 1,10,351 |
• அடர்த்தி | 2,600/km2 (6,800/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 110010 |
தொலைபேசி குறியீடு | 91-011 |
இணையதளம் | Official website |
தில்லி பாசறை மன்றக் குழு (Delhi Cantonment board ) தில்லியில் உள்ள இராணுவப் பாசறையில் குடியிருப்பாளர்களுக்கான உள்ளாட்சி மன்றம் ஆகும். இது 1914-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 1,10,351 ஆகும்.[2] [1]தில்லி பாசறை தொடருந்து நிலையம் இப்பகுதியில் செயல்படுகிறது. 2006-ஆம் ஆண்டின் இந்தியப் பாசறைச் சட்டத்தின் கீழ பாசறை மன்றக் குழுக்கள் நிர்வகிக்கப்படுகிறது.[3]இப்பாசறை மன்றத் தேர்தல் மற்றும் நிர்வாகம் உள்ளாட்சி அமைப்பின் படி இயங்கினாலும், பாசறை நில உரிமைகள் பொறுத்த வரையில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இராணுவ நிலங்களை பராமரிக்கும் தலைமை இயக்குநரால் நிர்வகிப்படுகிறது.[4] தேசிய தலைநகர் வலயத்தின் பிற நான்கு உள்ளாட்சி அமைப்புகள் புதுதில்லி மாநகராட்சி, தெற்கு தில்லி மாநகராட்சி, வடக்கு தில்லி மாநகராட்சி மற்றும் கிழக்கு தில்லி மாநகராட்சி ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "About Us – DELHI CANTONMENT BOARD". delhi.cantt.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
- ↑ "Delhi Cantonment City Census 2011 data". census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 7 July 2018.
- ↑ Document, http://www.cbdelhi.in/Documents/ca2006.pdf பரணிடப்பட்டது 31 மே 2014 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Delhi Cantonment Board, Ministry of Defence". Archived from the original on 31 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 30 மே 2014.