முனைவர். கர்ணிசிங் சுடுதல் வெளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனைவர். கர்ணிசிங் சுடுதல்வெளி புது தில்லியில் உள்ள ஓர் சுடுதல் வெளியாகும். 1982ஆம் ஆண்டு நடந்த 9வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போது சூரஜ்குண்ட் சாலையில் கட்டப்பட்டது.2010 பொதுநலவாய விளையாட்டுக்களுக்காக முழுவதுமாக இடிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது.உலகின் நவீன வசதிகளைக் கொண்டு மிகச்சிறந்த நிகழிடமாக விளங்குகிறது.ரூ.150 கோடி செலவில் 13 மாதங்களில் இப்பணி நிறைவேற்றப்பட்டுள்ளது.[1]

வசதிகள்[தொகு]

72 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த வளாகம் ஆறு பகுதிகளாக பிரிக்கப்படுள்ளது.

  1. 10 மீ சுடுவெளி
  2. 25 மீ சுடுவெளி
  3. 50 மீ சுடுவெளி
  4. இறுதி சுடுவெளி
  5. களிமண் புறாக்கள் சுடுவெளி
  6. கவச சுடுதல்

10 மீ சுடுவெளிக்காக குளிரூட்டப்பட்ட உள்விளையாட்டரங்கம் கட்டப்பட்டுள்ளது.500 பார்வையாளர்கள் காண வகை செய்யப்பட்டுள்ளது.இரு தனி மின்வழங்கிகளிலிருந்து தடங்கலில்லாதிருக்க மின்வசதி பெறப்பட்டுள்ளது.

25 மீ சுடுவெளி பார்வையாளர் பகுதி மட்டும் மூடப்பட்டிருக்கும் வெளி விளையாட்டரங்கமாகும். இங்கு 50 சுடுபுள்ளிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

வளாகம் முழுவதும் பசுமையான தாவரங்கள் நடப்பட்டு அழகாகத் தோற்றமளிக்கிறது.இங்கு தங்குபவர்களின் வசதிக்காக தன்னிறைவு பெற்ற விடுதி ஒன்று 200 நபர்கள் தங்குமளவிற்கு கட்ட திட்டம் உள்ளது.

முனைவர் கர்ணிசிங்[தொகு]

இவ்விளையாட்டு வசதிக்கு முன்பு தன்னாட்சி நிலவிய பிகானீர் மாநிலத்தின் மன்னர் முனைவர் கர்ணிசிங் அவர்களது சுடுதல் திறமையை நினைவு கூறும் வகையில் அவரது பெயர் இடப்பட்டது.அவரது சிறந்த சுடுதல் திறமைக்காக 1961ஆம் ஆண்டு அவருக்கு அருச்சுனா விருது வழங்கப்பட்டிருந்தது.மேலும் அவர் 1962ஆம் ஆண்டில் நடந்த 38வது உலக சுடுதல் சாதனையாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. அவுட்லுக் செய்தி

வெளியிணைப்புகள்[தொகு]