தில்லி-அமிர்தசரஸ்-கட்ரா விரைவுச்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தில்லி-அமிர்தசரஸ்-கட்ரா விரைவுச்சாலை
நிறுவப்பட்டதுஏப்ரல் 2024 (எதிர்பார்க்கப்படுகிறது)[1]

தில்லி-அமிர்தசரஸ்-கட்ரா விரைவுச்சாலை (Delhi–Amritsar–Katra Expressway), 670 கிலோ மீட்டர் நீளமும்; 4 வழித்தடங்களும் (8 வழித்தடங்களாக விரிவாக்கம் செய்ய இயலும்) கொண்ட இந்த விரைவுச்சாலை, இந்தியாவின் தலைநகரான தில்லி, அமிர்தசரஸ் மற்றும் கட்ரா நகரங்களை இணைக்கிறது.[2][3] நடப்பில் உள்ள இவ்விரைவுச்சாலை திட்டம் ஏப்ரல் 2024ல் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விரைவுச்சாலை பாரத்மாலா திட்டத்தின் கீழ் செயல்படுகிறது.

தில்லி-அமிர்தசரஸ்-கட்ரா விரைவுச்சாலைத் திட்டம் நிறைவடைந்த பின்னர் தில்லி-கட்ரா இடையேயான தற்போதைய பயணத் தொலைவு 727 கிலோ மீட்டரிலிருந்து 588 கிலோ மீட்டராக குறைவதுடன், பயண நேரம் 14 மணி நேரத்திலிருந்து 6 மணி நேரமாக இருக்கும். மேலும் தில்லி-அமிர்தசரஸ் 405 கிலோ மீட்டர் பயணத் தொலைவை கடக்க 8 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாக குறையும்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Will ensure Delhi-Katra Expressway gets completed before 2024 LS polls: Nitin Gadkari". 11 April 2023.
  2. Manchanda, Megha (1 November 2017). "Govt finds road construction easier for new expressways". Business Standard இம் மூலத்தில் இருந்து 1 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171101170824/http://www.business-standard.com/article/economy-policy/govt-finds-road-construction-easier-for-new-expressways-117110100561_1.html. 
  3. List of Projects under Bharatmala Pariyojna (PDF) (Report).

வெளி இணைப்புகள்[தொகு]