உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிசம்பர் 28, 2011
டிசம்பர் 21, 2011
 • முகலாயப் பேரரசர்கள் அமர்ந்து ஆட்சி செய்த மயிலாசனம் (படம்) பாரசீகப் பேரரசர் நாதிர் ஷாவால் கவர்ந்து செல்லப்பட்டது.
 • இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் பொது வாக்கெடுப்பு 1982 இல் நடைபெற்றது.
 • மரபணு இருக்கை என்பது ஒரு நிறப்புரியில் இருக்கும் ஒரு மரபணுவின் அல்லது டி.என்.ஏ வரிசையின் வரையறுக்கப்பட்ட இருப்பிடம் ஆகும்.
 • இறைவனையோ சிறப்புப் பெற்ற மனிதர்களையோ குழந்தையாக உருவகித்துப் பாடப்படும் தமிழ் சிற்றிலக்கியங்கள் பிள்ளைத்தமிழ் வகையைச் சேர்ந்தவை.
 • கர்வா சௌத் என்னும் இந்து சமய விழா நாளில், சூரிய உதயம் முதல் நிலவு உதயம் வரை திருமணமான பெண்கள் உண்ணாதிருந்து தங்கள் கணவரின் உடல்நிலைக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் நோன்பு மேற்கொள்வர்.
டிசம்பர் 14, 2011
டிசம்பர் 7, 2011
நவம்பர் 30, 2011
நவம்பர் 23, 2011
நவம்பர் 16, 2011
நவம்பர் 9, 2011

.

 • செப்புக்கு (படம்) என்பது ஜப்பானிய அரசவம்சத்தினரும் உயர்குடியினரும் தமது வயிற்றைக் கிழித்துக் கொண்டு தற்கொலை செய்கின்ற பாரம்பரியமான ஒரு வழக்கமாகும்.
 • சிறுபாணாற்றுப்படை நூலில் குறிப்பிடப்பட்டுள்ள எயிற்பட்டினம் என்னும் சங்ககாலத் துறைமுகம் கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் என்பவரால் சோபட்டினம் எனக் குறிக்கப்பட்டுள்ளது.
 • உடலின் எதிர்ப்பு அமைப்பானது நுண்ணுயிரியின் தாக்கத்தை கண்டறிய பயன்படுத்தும், சில கிராம்-எதிர் பாக்டீரியாக்களின் செல்-சுவரிலுள்ள கட்டமைப்பு மூலக்கூறுகள் அகநச்சுகள் எனப்படுகின்றன.
 • சூதாடப் பயன்படும் மங்காத்தா சீட்டாட்டத்தில் ஆட்டக்காரர்கள் இருவரும் சமமான தொகையைப் பந்தயமாக வைக்கவேண்டும்.
 • விடுதலை அடைந்த இலங்கையில் அவசரகாலச் சட்டம் முதன்முறையாக 1953ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
நவம்பர் 2, 2011
அக்டோபர் 26, 2011
அக்டோபர் 19, 2011


அக்டோபர் 12, 2011


அக்டோபர் 5, 2011


செப்டம்பர் 28, 2011


செப்டம்பர் 21, 2011
 • நாச்சோ (படம்) என்பது சோளத்தினால் செய்யப்படும் விரைவாக சமைக்கக்கூடிய ஓர் புகழ்பெற்ற சிறுதீனி.
 • 1969 இல் எழுதப்பட்ட கந்தன் கருணை நாடகம் ஈழத்தில் சாதிய எதிர்ப்பு இயக்கத்திற்கு உந்து கருவியாகப் பயன்பட்டது.
 • வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலத்தை ஷபாத் (ஓய்வு நாள்) ஆக கடைப்பிடிக்கும் யூதர்கள் அப்போது இறைவனை ஆராதிப்பதைத் தவிர எந்த வேலையும் செய்வதில்லை.
 • இன்சாஸ் ரக துப்பாக்கி இந்திய சிறு படைக்கல அமைப்பால் இந்திய இராணுவத்தினர் பயன்பாட்டிற்காக 1997ல் உருவாக்கப்பட்டது.
 • இந்தியத் துணைக்கண்டத்தில் நிகழும் பாம்புக்கடி மரணங்களில் மிகப் பெரும்பாலானாவை பெரும் நான்கு பாம்புகள் எனப்படும் இந்திய நாகம், கட்டு விரியன், சுருட்டைப் பாம்பு மற்றும் கண்ணாடி விரியன் ஆகியவற்றால் ஏற்படுகின்றன.


செப்டம்பர் 14, 2011
 • உலகிலேயே மிக அதிக அளவில் விற்பனையாகியுள்ள புதிர் விளையாட்டு மற்றும் பொம்மைப் பொருள் ரூபிக்கின் கனசதுரம் (படம்).
 • ஒரு புகைப்படம் எடுக்கும் போது புகைப்பட ஊடகத்தின் மீது விழும் மொத்தஒளி அடர்த்தி வெளிப்பாடு எனப்படுகிறது.
 • 1889 முதலில் தொடங்கப்பட்ட இந்து சாதனம் என்ற பத்திரிகை யாழ்ப்பாணத்தில் இன்றும் (2011) தொடர்ந்து வெளிவருகிறது.
 • உயிரொலிகளை ஒலிக்கும்போது, உள்ள உதடுகளின் அமைப்பு நிலை இதழமைவுநிலை எனப்படுகிறது.
 • மனிதக் கொல்லிப் புலி வேட்டையாளரான ஜிம் கார்பெட் தனது 63 வயதில் ஆண் புலி போலக் குரல் தந்து ஈர்த்து ஒரு பெண் புலியைக் கொன்றார்.


செப்டம்பர் 7, 2011


ஆகஸ்டு 31, 2011
ஆகஸ்டு 24, 2011
ஆகஸ்டு 17, 2011
 • திப்பு சுல்தான் ஆணைப்படி செய்யப்பட்ட திப்புவின் புலி (படம்) புலி ஒன்று ஆங்கிலேய வீரனை அடித்துக் கொல்வதை சித்தரிக்கும் ஓர் இசைக்கருவி பொம்மை.
 • அடுத்தடுத்து வரும் எந்த இரு எண்களுக்கு இடையே ஒரே ஓர் எண் வேறுபாடாக இருக்குமாறு அமைந்த, வரிசையாக வரும் எண் தொடர் கூட்டுத் தொடர் எனப்படுகிறது.
 • மகடூஉ முன்னிலை என்பது ஒரு பெண்ணை அழைத்து முன்னிலைப் படுத்தி அவளுக்கு செய்தி சொல்வது போல நூல் இயற்றும் முறை.
 • அனைத்துலக முறைமையில் மேலோங்கிய நிலையில் உள்ளதும், தனது சொந்த நலன்கள் மீதும் உலக நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்த வல்லதும் படை ஆற்றலை உலகளவில் பயன்படுத்த வல்லதுமான நாடு வல்லரசு எனப்படும்.
 • கொள்வனவு ஆற்றல் சமநிலை என்பது இரு நாடுகளின் வாங்கும் திறனைக் கொண்டு நாணயமாற்று வீதத்தில் ஏற்படுத்த வேண்டிய திருத்தத்தை அளவிடும் ஓர் பொருளியல் கோட்பாடு.
ஆகஸ்டு 10, 2011
ஆகஸ்டு 3. 2011
ஜூலை 27. 2011
ஜூலை 20. 2011
ஜூலை 13. 2011
ஜூலை 6. 2011
சூன் 29. 2011
சூன் 22. 2011
சூன் 15. 2011
சூன் 8. 2011
சூன் 1. 2011
மே 25. 2011
மே 18. 2011
மே 11. 2011
மே 04. 2011
ஏப்ரல் 27. 2011
ஏப்ரல் 20. 2011
ஏப்ரல் 13. 2011
 • மரு. சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் (படம்) "மருத்துவத் தமிழ் முன்னோடி" என அறியப்படுகிறார்.
 • தமிழ்நாடு சட்டமன்ற கீழவையின் 235 உறுப்பினர்களுள் 234 பேர் மட்டுமே தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எஞ்சிய ஒருவர் ஆங்கிலோ இந்திய சமூகத்தின் பிரதிநிதியாக தேர்தலின்றி நியமிக்கப்படுகிறார்.
 • ஜுனூன் தமிழ் என்பது பிற மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தமிழில் வசனங்கள் சேர்க்கும் போது, அம்மொழிகளுக்கு உரித்தான வாக்கிய அமைப்பு மாறாமல், வார்த்தைகளை மட்டும் தமிழில் மாற்றுவதால் உண்டாகும் சிதைந்த தமிழ் வழக்கு.
 • அழ. வள்ளியப்பா இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.
 • நல்ல பாம்பு முட்டையிடும்; விரியன் பாம்போ குட்டிகளை ஈனும்.
ஏப்ரல் 06. 2011
 • நமக்கு கிடைத்துள்ள தமிழில் எழுதப்பட்ட முதல் நாட்குறிப்பு ஆனந்த ரங்கம் பிள்ளையினுடையது (படம்). அதுவும் அவர் இறந்து 55 ஆண்டுகள் கழித்தே கிடைத்தது.
 • மதுரைத் திட்டம் மற்றும் நூலகத் திட்டம் ஆகியவை தமிழ் நூல்களை எண்ணிமப்படுத்தி இணையத்தில் அளிக்கும் இரு திட்டங்கள்.
 • நாம் காணும் மிகப் பிரகாசமான விண்மீனான சூரியனின் வாழ்நாளில் பாதி முடிந்து விட்டது.
 • தீபகற்ப இந்திய ஆறுகள் பெரும்பாலும் மேற்கிலிருந்து கிழக்காகவே ஓடுகின்றன. ஆனால் நர்மதை, தபதி, மாகி ஆகிய மூன்று ஆறுகளோ கிழக்கிலிருந்து மேற்காக ஓடுகின்றன.
 • இலங்கைச் சிங்கம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் வாழ்ந்த சிங்கங்களின் துணையினமாகும். கிமு 37,000 ஆம் ஆண்டுவாக்கில் முற்றாக அழிந்து விட்டதாகத் தெரிகிறது.
மார்ச்சு 30. 2011
மார்ச்சு 23. 2011
மார்ச்சு 16. 2011
மார்ச்சு 9. 2011
ருக்மிணி தேவி அருண்டேல்
ருக்மிணி தேவி அருண்டேல்
மார்ச்சு 2. 2011
 • இசை அறிஞர் வீரமணி ஐயர் (படம்) பாபநாசம் சிவனின் மாணவர் ஆவார்.
 • இசைவல்லுநர் பீத்தோவன் கேட்கும் திறனை முழுமையாக இழந்த பின்னரும் மிகச்சிறந்த இசை ஆக்கங்களைச் செய்தார்.
 • இயான் ஸ்டீவன்சன் என்ற மறுபிறவி ஆராய்ச்சியாளர் தான் இறந்த பின்னர் ஏதேனும் ஒருவகையில் தொடர்பு கொண்டு திறக்கும் பொருட்டு ஒரு பூட்டை அமைத்தார்.
 • கடற் பாம்பு ஒன்றைப் பிடித்து நிலத்தில் விட்டால் அதனால் அசையக் கூட முடியாது.
 • பித்தாகரஸ் தேற்றத்தை க்கும் அதிகமான வழிகளில் நிறுவ முடியும்.
பெப்ரவரி 23, 2011
பெப்ரவரி 15, 2011
பெப்ரவரி 8, 2011
பெப்ரவரி 1, 2011
ஜனவரி 25, 2011
 • சி. சிவஞானசுந்தரம் அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நகைச்சுவை இதழான சிரித்திரன் (படம்) அவரது மறைவு வரை 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது.
 • கணித தீபிகை நூலை எழுதிய பந்துலு ராமசாமி நாயக்கர் என்பவர் தமிழ் எண்களில் சுழிக் குறியீட்டை முதலில் பயன்படுத்தியவர்களில் ஒருவர். அதாவது முன்னர் ய என்று தமிழ் எண்களில் 10 குறிப்பிடப்பட்டு வந்தது, இவர் அதை க0 என்று மாற்றினார்.
 • தமிழீழத்திற்கு எதிரான நிலை கொண்ட த இந்து இதழாசிரியர் என். ராம் இலங்கை அரசின் உயர்குடிமை விருதான லங்காரத்னா பெற்றவர்.
 • சீனத் தலைநகர் பெய்சிங்கின் நடுவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய அரண்மனை வளாகமான பேரரண் நகரம் மொத்தம் 9999 அறைகள் கொண்டதாகும்.
 • ஸ்டாக்ஹோம் கூட்டறிகுறியின் அடிப்படை தன்னைக் கடத்தியவர் மீது கடத்தப்பட்டவருக்கு ஏற்படும் பற்றுதல் ஆகும்.
ஜனவரி 18, 2011
ஜனவரி 11, 2011
ஜனவரி 4, 2011
 • சில வகை நோய்கள் கொண்ட குழந்தை ஒன்றினைக் காப்பதற்காகப் பிறக்கும் வேறொரு உடன்பிறப்புக் குழந்தை உயிர்காப்பு உடன்பிறப்பு எனப்படுகிறது.
 • ஆங்கிலம் பேசும் உலகெங்கும் அரசமைப்பு சட்டங்களின்படி ஆட்சி நடக்க வழி வகுத்த முன்னோடி ஆவணம் மாக்னா கார்ட்டா.
 • பண்டையத் தமிழகத்தில் வட பாண்டி நாடல்லாத தமிழகம் கொடுந்தமிழ் நாடு என வழங்கப்பட்டு, பன்னிரெண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது.
 • 1920களில் அமெரிக்காவின் பிரபல குற்றக் குழுத் தலைவராக விளங்கிய அல் கபோன் கொலை, கொள்ளை என பல வகைக் குற்றங்களைச் செய்திருந்தாலும், வரி ஏய்ப்புக்காக சிறை தண்டனை பெற்றார்.