மச்சலி (புலி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மச்சலி
Machli (tigress).jpg
ஏரியின் பெண்மணி
இனம்புலி (Panthera tigris)
வகைவங்காளப் புலி
பால்பெண்
பிறப்பு1997[1]
Titleபுலிகளின் அரசித் தாய்
இரான்தன்பூர் பெண்புலிகளின் அரசி
ஏரியின் பெண்மணி
உரிமையாளர்ரண்தம்போர் தேசியப் பூங்கா
வாழ்நாள் சாதனையாளர் விருது

மச்சலி (T-16) (machali) இந்தியாவின் ரண்ர்தம்போர் தேசிய பூங்காவில் வாழ்ந்த "வாழ்நாள் சாதனையாளர் விருது" பெற்ற ஒரு பெண் புலி. தில்லியைச் சேர்ந்த புலிகளுக்கான பயண ஏற்பாட்டாளர் குழுமத்தினரால் (Travel Operators For Tigers) மச்சலிக்கு இவ்விருது வழங்கப்பட்டது.[2][3]

1998 ஆம் ஆண்டுவாக்கில் சிறு குட்டியாக இருந்த மச்சலி அதன்பின் வந்த நாட்களில் ரத்னம்பூர் ஏரிக்கரையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் துவங்கியது. தனது தாயான மச்சிலி‌யிடமிருந்து அது ‌தான் பெற்ற ஆட்சிப் பகுதிக்கு இராணியாகத் திகழ்ந்தது. மச்சலியின் ஆர்வலர்கள் அதைச் செல்லமாக ஏரியின் பெண்மணி என்று அழைக்கின்றனர். மச்சலி தன் வாழ்நாளில் 11 குட்டிகளை ஈன்று அவற்றை நல்ல முறையில் பராமரித்தது. தன் குட்டிகளைக் காக்கும் பொருட்டு அது அளப்பரிய செயல்களைச் செய்துள்ளது. தன் குட்டிகளைக் காக்கும் பொருட்டு ஏரியின் முதலைகளுடன் பல முறை சண்டையிட்டதில் 3 முதலைகளைக் கொன்றுள்ளது. மச்சலியின் குட்டிகளுள் இரண்டு சரிஸ்கா புலிகள் பாதுகாப்பிடத்திற்கு அனுப்பப்பட்டன. பற்களை இழந்து வலுக்குன்றிய நிலையிலும் மச்சலி குட்டிகளை ஈன்று அவன்றை நல்ல முறையில் பாதுகாத்தது. இந்தியாவில் வங்காளப் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்ததில் மச்சலி முக்கியப் பங்காற்றி உள்ளது.

மச்சலி தன் வாழ்நாளில் இந்தியாவிற்கு மிக அதிகமான வருமானத்தை ஈட்டித் தந்திருக்கிறது. அதாவது கடந்த பத்தாண்டுகளில் அது மொத்தமாக 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை சுற்றுலா மூலம் ஈட்டித்தந்திருக்கிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மச்சலி_(புலி)&oldid=3223438" இருந்து மீள்விக்கப்பட்டது