உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திர விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திர விழா என்பது இந்திரனை சிறப்பிக்கும் வகையில் பழந்தமிழகத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும். பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம் அடையாது இருத்தல் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்திப் பெருவிழாவே இந்திர விழாவாகும். இவ்விழாவைத் தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் என்று சாத்தனார் கூறுகின்றார். [1]

இவ்விழா புகார் என்ற நகரோடு அதிகம் தொடர்புற்றிருந்தாலும், மதுரையிலும் கொண்டாடப்பட்டது.[2] இலக்கியங்களில் உவமை கூறும் அளவுக்கு இவ்விழா சிறப்பு பெற்றிருந்தது.[3] தொடித்தோட் செம்பியன் எடுத்த காதல் விழாவைக் காமன் விழா என்றும், இந்திர விழா என்றும் குறிப்பிடுகின்றனர். அவ்விழா, இருபத்தெட்டு நாள் 'நாளேழ் நாளினு நன்கறிந்தீர் என'க் [4] குறிப்படுவர். அவ்விழா விருந்தாட்டு விழா என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆகையால் அதனை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா என்று பொருள் கொள்ளலாம்.

தமிழ் காப்பியங்களில் இந்திரவிழா[தொகு]

தூங்கெயிலெறிந்த தொடித்தோள் செம்பியன் என்ற சோழ மன்னன் இதை தொடங்கினான். சிலப்பதிகாரம், மணிமேகலை காலங்களில் இவ்விழா அரசாங்க விழாவாகவே கொண்டாடப்பட்டது. கற்பகக் கோட்டத்தில் வெள்ளானைக்கொடி ஏற்றப்பட்டது. பல தெய்வங்களுக்கும் பூசையிடப்பட்டு, இசையும் கூத்தும் கலந்து மக்கட்கு இன்பமூட்டின. அறிஞர்கள் குழுமியிருந்து பட்டி மண்டபத்தில் வாதிட்டனர். பல்வேறு சமயத்தவரும் செற்றமும் கலகமும் செய்யாது ஒற்றுமையாய் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவ்விதத்தில் இவ்விழா சமய ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாக இருந்தது என அறியலாம். [5][6]

காண்க[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. http://www.tamilvu.org/courses/degree/p104/p1041/html/p1041333.htm இந்திர விழா
  2. சின்னமனூர் செப்பேடுகள்
  3. ஐங்குறுநூறு 62
  4. . (மணிமேகலை. 1: 65-72.)
  5. சிலப்பதிகாரம், இந்திரவிழவூரெடுத்த காதை
  6. மணிமேகலை, விழாவறை காதை

குறிப்பு:தென்னமேரிக்க இன்கா நாகரிக மக்களும் இவ்விழாவைப்போன்றே இண்டிர்யாமி என்னும் விழாவை கொண்டாடினர்[1]

  1. "the summer of rainy season come... Cuzco was now gay with arriving indians, for it was the sesaon of sun festival, the INTIRYAMI celebrating the time when, as the indians believed, the sun god came and live with them" - VictorW.Von Hagen, "HIGHWAY OF THE SUN"
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திர_விழா&oldid=3373807" இலிருந்து மீள்விக்கப்பட்டது