எண்டோசல்ஃபான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எண்டோசல்ஃபான்
Endosulfan Formula V.3a.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
6,7,8,9,10,10-Hexachloro-1,5,5a,6,9,9a-hexahydro-6,9-methano-2,4,3-benzodioxathiepine-3-oxide
வேறு பெயர்கள்
பென்சோபின், என்டோசெல், பாரிசல்ஃபான், ஃபேசர், தியோடன், தியோனெக்ஸ்
இனங்காட்டிகள்
115-29-7 Yes check.svgY
ChemSpider 21117730 Yes check.svgY
InChI
 • InChI=1S/C9H6Cl6O3S/c10-5-6(11)8(13)4-2-18-19(16)17-1-3(4)7(5,12)9(8,14)15/h3-4H,1-2H2/t3-,4-,7-,8+,19+/m0/s1 Yes check.svgY
  Key: RDYMFSUJUZBWLH-QDLMHMFQSA-N Yes check.svgY
 • InChI=1/C9H6Cl6O3S/c10-5-6(11)8(13)4-2-18-19(16)17-1-3(4)7(5,12)9(8,14)15/h3-4H,1-2H2
  Key: RDYMFSUJUZBWLH-UHFFFAOYAH
 • InChI=1/C9H6Cl6O3S/c10-5-6(11)8(13)4-2-18-19(16)17-1-3(4)7(5,12)9(8,14)15/h3-4H,1-2H2/t3-,4-,7-,8+,19+/m0/s1
  Key: RDYMFSUJUZBWLH-QDLMHMFQBI
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C11090 N
SMILES
 • Cl[C@@]3(Cl)[C@]1(Cl)C(/Cl)=C(/Cl)[C@@]3(Cl)[C@H]2[C@@H2]OS(=O)O[C@@H2][C@H]12
பண்புகள்
C9H6Cl6O3S
வாய்ப்பாட்டு எடை 406.90 g·mol−1
அடர்த்தி 1.745 கி/கசெமீ
0.33 மி.கி/லி
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் T, Xi, N
ஈயூ வகைப்பாடு Yes (T, Xi, N)
R-சொற்றொடர்கள் R24/25 R36 R50/53
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

எண்டோசல்ஃபான் (Endosulfan) ஓர் ஆக்கவுரிமை நீங்கிய ஆர்கனோகுளோரின் பூச்சிக்கொல்லியும் மென்னுண்ணிக் கொல்லியும் ஆகும். நச்சுத்தன்மை மற்றும் உயிரிகளில் திரட்டுக் குணங்களாலும் நாளமில்லா சுரப்பிகளை சீர்குலைப்பதாலும் நிறமற்ற திடநிலையிலுள்ள இந்த வேளாண்வேதிப் பொருள் மிகவும் சர்ச்சைக்குள்ளாகிவுள்ளது.[1] இதனால் இம்மருந்து ஐரோப்பிய ஒன்றியம், ஆத்திரேலியா, நியூசிலாந்து மற்றும் சில ஆசிய மேற்கு ஆபிரிக்க நாடுகள் உட்பட 63 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது[2] ; ஐக்கிய அமெரிக்கா,[3][4] பிரேசில்[5] மற்றும் கனடாவில்[6] படிப்படியாக விலக்கப்படுகிறது. இது சீனா, இந்தியாபோன்ற நாடுகளில்இன்னமும் பயன்படுத்தப்படுகிறது. இதனை பேயர் நிறுவனம், மக்தேசிம் ஆகா நிறுவனம் மற்றும் இந்திய அரசுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் இன்செக்டிசைட்ஸ் லிமிடெட் ஆகியனவுடன் பல நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. சூழல் மாசுபடுதலை கருத்தில்கொண்டு உலகளவில் இதன் தயாரிப்பையும் பயன்பாட்டையும் இசுடாக்ஃகோம் மரபொழுங்கின் கீழ் தடை செய்திட முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.[7]

இந்தியாவில்[தொகு]

உலகளவில் இந்தியா எண்டோசல்ஃபானின் மிகப்பெரும் பயன்பாட்டாளராகவும்[8] முக்கிய தயாரிப்பாளராகவும் விளங்குகிறது. மூன்று நிறுவனங்கள் - எக்செல் கார்ப் கேர், இந்துஸ்தான் இன்செக்டிசைட்ஸ் மற்றும் கோரமண்டல் பெர்டிலைசர்ஸ் ஆண்டுக்கு 4500 டன் மருந்தை உள்நாட்டுப் பயன்பாட்டிற்கும் 4000 டன் மருந்தை வெளிநாட்டு ஏற்றுமதிக்காகவும் தயாரிக்கின்றன.[9]

கேரளத்தில்[தொகு]

கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தின் கிராமங்களான என்மகஜே, முலியர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இதனால் ஏற்பட்ட பாதிப்பு மிக அதிகம் ஆகும். இங்கு 14 வயதுக்கு கீழ் உள்ள 613 குழந்தைகள் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.[10] இங்கு கேரளா அரசின் தோட்டத் துறைக்குச் சொந்தமான முந்தரி தோட்டம் 2000 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1977-களில் பயிரிட ஆரம்பித்த போது மேல் தெளிப்பாக நாளொன்றுக்கு மூன்று முறை எண்டோசல்ஃபான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது தெளிக்கப்படும் போதே அப்பகுதி மக்கள் உடல் ஒவ்வாமை, கண் எரிச்சல், சுவாசக் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகி உள்ளனர். மேலும் இதன் உபவிளைவாக காலப்போக்கில் இப்பகுதி மக்களுக்கு புற்று நோய், தோல் நோய், உடல் ஊனம், குன்றிய மனவளர்ச்சியுடன் ஆன குழந்தை பிறப்பு, இரத்தப் புற்றுநோய், வலிப்பு நோய், ஆண்மைக் குறைவு மற்றும் சுவாசக் கோளாறுகள் என பல்வேறுபட்ட நோய் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன. பாதிப்பின் மூல காரணத்தை உணர்ந்த மக்கள் பல்வேறு தரப்பில் எடுத்துக் கூறியும், பல போராட்டங்களை முன்னிறுத்தியும் அரசுத் தோட்டங்களில் இதன் பயன்பாடு நிறுத்தப்படவில்லை எனப்படுகிறது. பாதிப்புகள் தொடர்ந்துகொண்டிருக்க முடிவாக 2001 ம் ஆண்டு கேரளா அரசு இதன் பயன்பாட்டைத் தடை செய்தது.

எப்படி இந்த பாதிப்பிற்கு உள்ளானது என்பதை இது தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் விளக்குகின்றன. எண்டோசல்ஃபான் பொதுவாக நீரில் மிகக் குறைந்த கரைதிறன் கொண்டது. இவை முந்திரித் தோட்டங்களில் மேல் தெளிப்பாக இலைகளின் மீது தெளிக்கப்படும் போது அவை கரையாமல் மழை நேரங்களில் அடித்துச் செல்லப்படுகின்றன. மேலும் கேரளாவின் இப்பகுதி அதிக மழை பெரும் பகுதி ஆதலால் அடிக்கடி மருந்து தெளிக்கப்படுவதும் அவை முகடுகளின் வழியே அடித்துச் செல்லப்படுவதும் வழக்கமாக காணப்பட்டிருக்கிறது. இவை அதன் சுற்றுப்புற நீர்நிலைகளில் கரையாமல் அதன் மேல் பரப்பில் மெல்லிய ஏடாக மிதந்து கொண்டிருந்திருக்கிறது. ஆனால் இவை வெறும் கண்களுக்குப் புலப்படுவதில்லை. மேலும் வெயில் நேரங்களில் இவை நீரின் மேல்பரப்பிலிருந்து சாதாரண வெப்பநிலையில் ஆவியாதலுக்கும் உட்படுவதால் சுவாசிக்கும் வளிமண்டலத்திலும் மிதந்து கொண்டிருந்திருக்கிறது. இந்நீர்நிலைகளே அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் நீர் ஆதாரம் என்பதால் குடிநீர் மற்றும் உணவிலும் இவை கலந்துவிட்டன. ஆக சுவாசிக்கும் காற்று, மண், குடிநீர், குளம், குட்டை, உணவு என எல்லாவற்றிலும் என்டோசல்பான் கண்ணுக்குத் தெரியாமல் இரண்டறக் கலந்துபட்டுப் போயிருக்கிறது.

2001ஆம் ஆண்டில் கேரளாவில் எண்டோசல்ஃபான் தெளிப்பிற்கும் அப்பகுதியில் காணப்பட்ட சில சிறுவர்களின் குறைபாடான வளர்ச்சிக்கும் இடையேயுள்ள தொடர்பு ஆயப்பட்டது.[11] துவக்கத்தில் எண்டோசல்ஃபான் பயன்பாடு தடை செய்யப்பட்டாலும் பூச்சிக்கொல்லி தயாரிப்பு நிறுவனங்களின் அழுத்தத்தால் தடை தளர்த்தப்பட்டது. அங்குள்ள நிலைமை "போபால் விஷவாயு சம்பவத்திற்கு இணையானது" என பேசப்பட்டது[12] 2006ஆம் ஆண்டு கேரளாவில் எண்டோசல்ஃபான் தாக்கத்தால் இறந்ததாக அறியப்பட்ட 135 பேர்களின் உறவினர்களுக்கு ரூ.50000 ஈட்டுத்தோகையாகக் கொடுக்கப்பட்டது. முதல் அமைச்சர் வி. எஸ். அச்சுதானந்தன் நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டோருக்கு "அரசே அவர்களின் சிகிட்சை, உணவு மற்றும் மறுவாழ்விற்கான ஆதரவை ஏற்கும் " என உறுதிமொழி அளித்தார்.[13]

பல சமூக செயல்திறனாளர்களும் சமூக அமைப்புகளும் இம்மருந்தின் நச்சுத்தன்மையால் தாக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளிக்க முன்வந்துள்ளன. இந்தியாவில் இதனை தடை செய்ய அவர்கள் கோரி வருகின்றனர். ஆனால் இந்திய அரசு இதனை ராட்டர்டேம்[14] மற்றும் இசுடாக்ஃகோம் மரபொழுங்குகளில் சேர்ப்பதை எதிர்த்து வருகிறது.[7]

அகமதாபாத்தில் உள்ள தேசிய தொழில்சார் நலக் கழகம் (NIOH) கேரளாவின் வடக்கு மாவட்டமான காசர்கோட்டில் உள்ள பத்ரி சிற்றூரில் எண்டோசல்ஃபான் தொடர்பால் ஏற்பட்டதாகக் கருதப்படும் "வழக்கமிலா நோய்களின் ஆய்வு அறிக்கை"யை வெளியிட்டது. இதனை திரும்பப் பெறுமாறும் பூச்சிக்கொல்லிக்கு தடை விதிக்கக் கூடாது என்றும் இதன் தயாரிப்பில் ஈடுபடும் தொழிலகங்களின் ஏராளமான தொழிலாளர்கள் நவம்பர் 15, 2010 அன்று ஓர் பேரணியை நடத்தினர். நாடாளுமன்ற உறுப்பினரான ராசேந்திரசிங் ராணா இப்பேரணித் தொழிலாளர்களை ஆதரித்து பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தொடர்புள்ள அமைச்சருக்கும் இந்த அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி கடிதம் எழுதினார்.[15][16] எண்டோசல்ஃபான் தடையால் தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று பாவ்நகர் சட்டப்பேரவை உறுப்பினர் திருமதி. விபாரி தாவேயும் பேரணியில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் எண்டோசல்ஃபானுக்கு தடை விதிக்கக்கூடாது என்று விண்ணப்பம் கொடுத்தனர்.[17][18]

கேரள அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நவம்பர் 10, 2010 இல் கேரளாவில் எண்டோசல்ஃபான் பயன்பாட்டிற்கு தடை விதித்தது.[19] இதனைத் தொடர்ந்து பெப்ரவரி 18, 2011இல் கர்நாடக அரசும் தனது மாநிலத்தில் 60 நாட்களுக்கு தடை விதித்தது.[20] தேசிய அளவில் இவ்வாறான தடையை விதிக்க இயலாது என்று நடுவண் வேளாண் அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார்.[21]

பாவ்நகர் பேரணியில் கொடுக்கப்பட்ட மனுவினைத் தொடர்ந்து குசராத் அரசு எண்டோசல்ஃபான் தாக்கம் குறித்த புதிய ஆய்வினை மேற்கொள்ள ஓர் குழுவினை ஏற்படுத்தியது. இக்குழுவில் தேசிய தொழில்சார் நலக் கழகத்தின் முன்னாள் துணை இயக்குனரும் உறுப்பினராக உள்ளார். இக்குழு உலக சுகாதார அமைப்பு, FAO, பன்னாட்டு புற்றுநோய் ஆய்வு முகமையகம் போன்ற அமைப்புகளின் ஆய்வுகள் எண்டோசல்ஃபான் புற்றுநோய்க்காரணியோ (carcinogenic), உறுப்பு மாறுபாடுகளை விளைவிக்கக்கூடியதோ (teratogenic), மரபணு மாற்ற முகமையோ (mutagenic) அல்லது மரபணு நச்சுத்தன்மையோ (genotoxic) கொண்டவை அல்ல என்று நிலைநிறுத்தியிருப்பதாகக் கூறியுள்ளது. இக்குழு எண்டோசல்ஃபானை எதிர்கொண்ட விவசாயிகள் மீது நடத்திய இரத்த சோதனைகளில் வேதிப்பொருளின் எந்தக் கூறும் காணப்படாதது அறியப்பட்டுள்ளது.[22]

இதனிடையில் கேரளாவில் இந்தப் பூச்சிக்கொல்லி மருந்திற்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. நாடு தழுவிய தடையை நடுவண் அரசு விதிக்கக் கோரி ஏப்ரல் 25,2011 அன்று மாநில முதலமைச்சர் வி. எஸ். அச்சுதானந்தன் உண்ணாநோன்பு போராட்டம் துவங்கினார்.[23]

தடை[தொகு]

எண்டோசல்ஃபான் விவசாய தொழிலாளர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் ஏற்றுக்கொள்ளமுடியாத கெடுதல் விளைவிக்கும் பூச்சி மருந்து என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது மேலும் இதனை முற்றிலும் தடை செய்ய 2010, 10 சூன் அன்று முயற்சி மேற்கொண்டது[24], இந்தியா முழு தடைக்கு உடன்படவில்லை எனினும் ஏப்பிரல் 29, 2011 அன்று எண்டோசபான் மனிதர்களுக்கு கேடு விளைவிப்பதை ஜெனிவாவில் நடைபெறும் உலக மாநாட்டில் ஒத்துக்கொண்டு படிப்படியாக பயன்படுத்துவதை நீக்குவதாகவும் சில பயிர்களுக்கு எண்டோசல்பான் பயன்படுத்த அனுமதிக்கும்படியும் கேட்டுள்ளது.[25]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Bayer to stop selling endosulfan". Australian Broadcasting Corporation. July 17, 2009. http://www.abc.net.au/rural/news/content/200907/s2628915.htm. பார்த்த நாள்: 2009-07-17. 
 2. "Australia should ban endosulfan: Greens". Weekly Times (News Limited). January 8, 2009. Archived from the original on 2009-01-21. https://web.archive.org/web/20090121213637/http://www.weeklytimesnow.com.au/article/2009/01/08/40315_horticulture.html. பார்த்த நாள்: 2009-01-08. 
 3. Cone, Marla. EPA Bans Pesticide Found on Cucumbers, Zucchini, Green Beans and Other Vegetables. பரணிடப்பட்டது 2011-10-01 at the வந்தவழி இயந்திரம் The Daily Green. June 10, 2010.
 4. "EPA Action to Terminate Endosulfan". United States Environmental Protection Agency. 10 June 2010 அன்று பார்க்கப்பட்டது.
 5. http://www.agrow.com/markets/southamerica/Endosulfan-ban-in-Brazil-from-2013-299753?autnRef=/contentstore/agrow/codex/0bef898a-90fc-11df-870a-bbcce1c03e31.xml
 6. PMRA: Re-evaluation Note REV2011-01, Discontinuation of Endosulfan http://www.hc-sc.gc.ca/cps-spc/pubs/pest/_decisions/rev2011-01/index-eng.php
 7. 7.0 7.1 "SUMMARY OF THE FOURTH MEETING OF THE PERSISTENT ORGANIC POLLUTANTS REVIEW COMMITTEE OF THE STOCKHOLM CONVENTION". Earth Negotiations Bulletin 15 (161). October 20, 2008. http://www.iisd.ca/vol15/enb15161e.html. பார்த்த நாள்: ஏப்ரல் 26, 2011. 
 8. Government of Canada (January 10, 2009). "Endosulfan: Canada's submission of information specified in Annex E of". 2009-01-29 அன்று பார்க்கப்பட்டது.
 9. Indian Chemical Council (January 9, 2009). "Form for submission of information specified in Annex E". 2009-01-29 அன்று பார்க்கப்பட்டது.
 10. 'எண்டோசல்பான்' பூச்சிக்கொல்லி மருந்தால் மக்கள் பாதிப்பு: கேரள அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் தி இந்து தமிழ் 23 சனவரி 2016
 11. Uppinangady, Arun (July 14, 2009). "Beltangady: Endosulfan Affected Leading Hellish Life — Seek Succour". Daijiworld Media Network. Archived from the original on 2009-07-17. https://web.archive.org/web/20090717135445/http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=62583. பார்த்த நாள்: 2009-07-14. 
 12. 'Rain man' of Indian journalism makes sure wells stay full பரணிடப்பட்டது 2012-03-10 at the வந்தவழி இயந்திரம், Frederick Noronha, IndiaENews.com, July 5th, 2007, accessed July 5th, 2007.
 13. http://www.indiatogether.org/2006/sep/env-endosulf.htm
 14. "SUMMARY OF THE FOURTH MEETING OF THE CONFERENCE OF THE PARTIES TO THE ROTTERDAM CONVENTION". Earth Negotiations Bulletin 15 (168). November 3, 2008. http://www.iisd.ca/vol15/enb15168e.html. பார்த்த நாள்: ஏப்ரல் 26, 2011. 
 15. "Rana Wants Withdrawal of NIOH Study on Endosulfan". Outlook India. November 16, 2010. ஜூலை 12, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஏப்ரல் 26, 2011 அன்று பார்க்கப்பட்டது.
 16. "Rajendra Singh Rana, MP, Bhavnagar calls for withdrawal of NIOH report on Endosulfan". World News. December 17, 2010.
 17. "Local MLA speaks in support of Bhavnagar Endosulfan Workers". Daily Motion. December 18, 2010.
 18. "Workers demand withdrawal of study on Endosulfan". WebIndia 123. November 16, 2010.
 19. ", accessed Nov 19th, 2010" (PDF). 2011-07-26 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2011-04-26 அன்று பார்க்கப்பட்டது.
 20. "Karnataka bans use of endosulfan". The Hindu. February 18, 2011. பிப்ரவரி 21, 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஏப்ரல் 26, 2011 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
 21. "India will not ban Endosulfan pesticide, says Sharad Pawar". Tehelka. February 22, 2011. ஜூலை 16, 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஏப்ரல் 26, 2011 அன்று பார்க்கப்பட்டது.
 22. "REPORT OF THE COMMITTEE TO EVALUATE THE SAFETY ASPECTS OF ENDOSULFAN Department" (PDF). Health and Family Welfare Department - Government of Gujarat. March 15, 2011. அக்டோபர் 4, 2011 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. ஏப்ரல் 26, 2011 அன்று பார்க்கப்பட்டது.
 23. எங்கும் பாதிப்பு ஏற்பட்டால் தான் தடை வருமா?மத்திய அரசை கண்டித்து முதல்வர் உண்ணாவிரதம் - தினமலர் செய்தி
 24. "Endosulfan to Be Banned, Pesticide Poses "Unacceptable Risks," EPA Says". scientificamerican. 19 மார்ச் 2014 அன்று பார்க்கப்பட்டது.
 25. "India agrees to Endosulfan ban". NDTV. 19 மார்ச் 2014 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்டோசல்ஃபான்&oldid=3611973" இருந்து மீள்விக்கப்பட்டது