நச்சுத்தன்மை
Appearance
நச்சுத்தன்மை என்பது ஓருயிருக்கு ஏதேனும் ஒரு வகையில் உடலியக்கத்திற்குக் கேடுதரவல்ல பொருளின் கேடுதரும் தன்மையைக் குறிப்பதாகும். பாம்பு கடித்தால் கடிவாயின் வழியே செலுத்தும் நச்சுப்பொருள் குருதியில் (இரத்தத்தில்) கலந்து ஏற்படும் விளைவுகள் நச்சுத்தன்மையை நன்கு உணர்த்தும். இதே போல தேள் கடித்தாலும் உடலுள் நச்சூட்டு நிகழ்கின்றது. நச்சுத்தன்மையில் அதிக கேடு, குறைவான கேடு என்று வீரியம் மாறுபடலாம். மேலும், எந்த ஒரு நச்சுப்பொருளும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மீறி இருந்தால்தான் கேடு தருகின்றது. எனவே நச்சாகும் அளவும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக நச்சுப் பொருள்களில் இரண்டு வகைகள் உண்டு:
- வேதியியல் பொருட்கள்
- உயிரியல் பொருட்கள் (நுண்ணுயிரிகள், நச்சுயிரிகள் (வைரஸ்) போன்றவை).
இவை அன்றி மூன்றாவதாக கதிரியக்கம் முதலிய இயற்பியல் வகையிலும் கேடுகள் விளையலாம். நச்சுத்தன்மை பற்றிய கற்கைநெறி நச்சியல் எனப்படும்.