இந்தோனேசிய விடுதலைக்கு ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கான குழு
Jump to navigation
Jump to search
இந்தோனேசிய விடுதலைக்கு ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கான குழு (Committee for Preparatory Work for Indonesian Independence, இந்தோனேசிய மொழி: Badan Penyelidik Usaha Persiapan Kemerdekaan Indonesia (BPUPKI), பதான் பென்யெலிடிக் உசாசா பெர்சியபன் கெமெர்டெக்கான் இந்தோனேசியா) என்பது இந்தோனேசியாவிற்கு விடுதலை அளிப்பது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு சப்பானியக் குழுவாகும்.
இந்த அமைப்பு ஜாவாவின் 16 ஆவது இராணுவத்தின் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல். கெய்மக்கிசி ஹராடாவால் ஏப்ரல் 29, 1945 அன்று நிறுவப்பட்டது. இந்தோனேசியாவின் விடுதலை குறித்த பேச்சுவார்த்தைகள் இவ்வமைப்பின் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டன. இந்தோனேசியாவின் விடுதலைக்குப் பின்பு இவ்வமைப்பு ஆனது பனித்தியா பெர்சியபன் கெமெர்டெக்கான் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.