கண்ணாடி பிம்ப எழுத்துமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கிப்பீடியா என்பதன் கண்ணடி பிம்பம்

கண்ணாடி பிம்ப எழுத்துமுறை (mirror writing) என்பது ஒரு மொழியின் இயல்பான எழுதும் முறையை அப்படியே நேர் எதிராக எழுதும் முறை ஆகும். எனவே இந்த எழுத்துக்களை பிரதிபலிக்கும் கண்ணாடி உதவியின் மூலம் எளிதாகப் படிக்க முடியும். இது மிக முந்திய காலத்தில் பயன்படுத்தப்பட்ட இரகசியக் குறியீட்டு முறைகளில் ஒன்று.

தற்காலத்தில் அவசர உதவி வாகனங்களில் AMBULANCE என்ற ஆங்கிலச் சொல் கண்ணாடி பிம்ப எழுத்து முறையில் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். பின்னே அபாய ஒலி கேட்கும் போது முன்னே செல்லும் வண்டியின் ஓட்டுநர் பின்புறப் பார்வைக் கண்ணாடியில் (rear view mirror) பார்க்கும் போது ஆம்புலன்ஸ் எனும் சொல் நேராகத் தெரிந்து அவர் வழிவிடுவதற்கு ஏதுவாக இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

கண்ணாடி பிம்ப முறையில் எழுதும் திறமையானது மூளையின் மொழிக்கான பகுதியில் இயல்புக்கு மாறான மாற்றங்கள் உண்டாவதால் கிடைக்கப் பெறுகிறது..[1] இத்திறமை உடைய பலர் இடக்கைப் பழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர்.

லியொனார்டோ டா வின்சி[தொகு]

கண்ணாடி எழுத்து முறையில் எழுதியவர்களுள் குறிக்கத் தக்கவர் லியொனார்டோ டா வின்சி ஆவார். அவர் தனது பெரும்பாலான குறிப்புகளை கண்ணாடி எழுத்து முறையிலேயே எழுதி வைத்து உள்ளார். ஏன் இவர் எவ்வாறு செய்தார் என்பது தெரியவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. Mathewson I. (2004). "Mirror writing ability is genetic and probably transmitted as a sex-linked dominant trait: it is hypothesised that mirror writers have bilateral language centres with a callosal interconnection". Med Hypotheses. 62 (5): 733–9. doi:10.1016/j.mehy.2003.12.039. பப்மெட்:15082098.