உள்ளடக்கத்துக்குச் செல்

சாலஞ்சர் விண்ணோடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாலஞ்சர்
சாலஞ்சர் விண்ணோடம்
சாலஞ்சர் STS-51-L விண்கலத்தைக் கொண்டு செல்கிறது
OV DesignationOV-099
நாடுஐக்கிய அமெரிக்கா
Contract awardஜூலை 26, 1972
Named afterHMS சாலஞ்சர் (1858)
முதல் பயணம்STS-6
ஏப்ரல் 4, 1983ஏப்ரல் 9 1983
கடைசிப் பயணம்STS-51-L
ஜனவரி 28, 1986
திட்டங்களின் எண்ணிக்கை10
பயணிகள்60
விண்ணில் செலவழித்த நேரம்62.41 நாட்கள்
சுற்றுகளின் எண்ணிக்கை995
பயணித்த தூரம்25,803,939 மைல்கள்
அனுப்பிய செய்மதிகள்10
Statusவிபத்தில் அழிக்கப்பட்டது ஜனவரி 28, 1986

சாலஞ்சர் விண்ணோடம் (Space Shuttle Challenger) (மீள்விண்கலம்) என்பது நாசாவின் கொலம்பியா விண்ணோடத்துக்கு அடுத்ததாக தயாரிக்கப்பட்ட இரண்டாவது விண்ணோடம் ஆகும். இதன் முதலாவது பயணம் ஏப்ரல் 4, 1983 இல் இடம்பெற்றதில் இருந்து மொத்தம் ஒன்பது தடவைகள் இது விண்ணுக்கு ஏவப்பட்டது. இதன் பத்தாவது கடைசி ஏவலில் ஜனவரி 28, 1986 இல் விண்ணுக்கு ஏவப்பட்டு 73 வினாடிகளில் ஏழு விண்வெளி வீரர்களுடன் வானில் வெடித்துச் சிதறியது. சாலஞ்சருக்குப் பின்னர் என்டெவர் விண்ணோடம் தயாரிக்கப்பட்டு 1992இல் முதற்தடவையாக ஏவப்பட்டது.

சாலஞ்சர் பயணங்கள்[தொகு]

# நாள் விண்கலம் குறிப்புகள் பயண நாட்கள்
1 1983 ஏப்ரல் 4 STS-6 மீள்விண்கலம் ஒன்றில் இருந்து முதன்முறையாக விண்வெளியில் நடந்தமை 5 நாட்கள் 23 நிமி, 42 வினாடி
2 1983 ஜூன் 18 STS-7 சலி ரைட் முதலாவது அமெரிக்கப் பெண் விண்வெளியில். 6 நாட்கள், 02 மணி, 23 நிமி, 59 வினாடி
3 1983 ஆகஸ்ட் 30 STS-8 விண்வெளியில் முதலாவது ஆபிரிக்க-அமெரிக்கர் 6 நாட்கள், 01 மணி, 08 நிமி, 43 செக்
4 1984 பெப்ரவரி 3 STS-41-B முதலாவது சுயாதீனமான முறையில் விண்வெளியில் நடந்ததமை. 7 நாட்கள், 23 மணி, 15 நிமி, 55 செக்
5 1984 ஏப்ரல் 6 STS-41-C Solar Maximum Mission service mission. 6 நாட்கள், 23 மணி, 40 நிமி, 07 செக்
6 1984 அக்டோபர் 5 STS-41-G இரண்டு பெண்களைக் கொண்டு சென்றது.

மார்க் கானியூ முதலாவது கனேடியன் விண்வெளியில்.
விண்வெளியில் நடந்த முதலாவது அமெரிக்கப் பெண் கத்ரீன் சலிவன்

8 நாட்கள், 05 மணி, 23 நிமி, 33 செக்
7 1985 ஏப்ரல் 29 STS-51-B விண்வெளி ஆய்வுகூடத்தைக் கொண்டு சென்றது. 7 நாட்கள், 00 மணி, 08 நிமி, 46 செக்
8 1985 ஜூலை 29 STS-51-F விண்வெளி ஆய்வுகூடத்தைக் கொண்டு சென்றது. 7 நாட்கள், 22 மணி, 45 நிமி, 26 செக்
9 1985 அக்டோபர் 30 STS-61-A ஜேர்மன் விண்வெளி ஆய்வுகூடத்தைக் கொண்டு சென்றது. 7 நாட்கள், 00 மணி, 44 நிமி, 51 செக்
10 1986 ஜனவரி 28 STS-51-L 7 விண்வெளிவீரர்களுடன் புறப்பட்ட 2வது நிமிடத்தில் வெடித்துச் சிதறியது. 0 நாட்கள், 00 மணி, 01 நிமி, 13 செக்

சாலஞ்சரின் அழிவு[தொகு]

சாலஞ்சரின் கடைசிப் பயணத்தில் சென்ற ஏழு விண்வெளி வீரர்கள்

சாலஞ்சர் ஜனவரி 28, 1986 இல் தனது பத்தாவது பயணத்தில் STS-51-L என்ற விண்கலத்தை சுமந்து புளோரிடா, கனாவரல் முனை (Cape Canaveral, Florida) ஏவுதளத்திலிருந்து செங்குத்தாக எழுந்து, ஒரு நிமிடம் இயங்கி 50,000 அடி உயரத்தில் செல்லும் போது, திடீரெனப் பழுது ஏற்பட்டு வானில் வெடித்தது. அதில் பயணஞ்செய்து கொல்லப்பட்டவர்களில் இரு பெண்களும் அடங்குவர்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. NASA (1986). "Challenger Accident Investigation Report: Chapter 4: The Cause of the Accident". NASA. Archived from the original on 2007-11-21. பார்க்கப்பட்ட நாள் 2008-01-26. {{cite web}}: Unknown parameter |accessmonthday= ignored (help); Unknown parameter |accessyear= ignored (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலஞ்சர்_விண்ணோடம்&oldid=3403242" இலிருந்து மீள்விக்கப்பட்டது