நிதி மேலாண்மை
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நிதி மேலாண்மை என்பது, ஒரு நிறுவனம் தனது நோக்கங்களை அடைவதற்கு ஏற்ற வகையில், செயற்றிறனுடனும், பயனுள்ள வகையிலும் பணத்தை மேலாண்மை செய்வதைக் குறிக்கும். இது உயர் முகாமைத்துவத்துடன் நேரடியாகத் தொடர்புடைய சிறப்புச் செயற்பாடு ஆகும். இதற்குப் பல்வேறு விதமாக வரைவிலக்கணம் கூறப்படுகிறது. ஒரு நிறுவனம் , தனக்குத் தேவையான நிதியினை எங்கிருந்து பெறுவது, குறைந்த கால கடன்கள் மற்றும் நீண்ட காலக் கடன்கள் போன்றவற்றை எந்த அளவு பெறுவது , தன்னிடம் உள்ள உபரிப் பணத்தை எங்கே , எப்படி முதலீடு செய்வது போன்ற விடயங்களை இது கையாள்கிறது.