தமிழ்நாடு போக்குவரத்துப் பதிவெண்கள்
Appearance
தமிழ்நாட்டில் வாகனங்களுக்கு மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்து பிரிவுகள் அடிப்படையில் பதிவெண்கள் வழங்கப்படுகிறது[1]. தமிழ்நாட்டில் பதிவு செய்யப்படும் அனைத்து வாகனங்களின் பதிவெண்களும் "TN-NN X NNNN" என்ற வடிவில் உள்ளன. TN என்ற எழுத்து முன்னொட்டு அனைத்து தமிழ்நாட்டு வாகனங்களுக்கும் பொதுவானது. இதையடுத்து வரும் இரு எண்கள் வாகனம் பதிவு செய்யப்படும் மாவட்டம் மற்றும் சாலைப் போக்குவரத்து அலுவலகத்தைப் பொறுத்து மாறும். தமிழகத்திலேயே அதிக பதிவெண் கொண்ட மாநகரம் சென்னை ஆகும்.கிட்டத்தட்ட பத்து பதிவெண்களை கொண்டுள்ளது. அதற்கு அடுத்தாக கோவை மாநகரம் உள்ளது. இது கிட்டத்தட்ட நான்கு வாகன பதிவெண்களை கொண்டது. அப்பதிவெண்களின் பட்டியல் பின்வருமாறு;
பதிவெண் முன்னொட்டுக் குறியீடு
[தொகு]தமிழ் பயன்பாடு
[தொகு]- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான TN-/N எனக் குறிப்பிட்டுள்ள வாகனங்கள் தமிழில் குறிப்பிடப்படும் போது த.நா-/நா எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது தமிழ்நாடு/ நாட்டுடமையாக்கப்பட்டது என்பதன் சுருக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.
- இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலகப் பயன்பாட்டு வாகனங்களில் TN-/G எனக் குறிப்பிட்டுள்ள வாகனங்கள் தமிழில் குறிப்பிடப்படும் போது த.நா-/அ எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது தமிழ்நாடு/அரசு என்பதன் சுருக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-15. பார்க்கப்பட்ட நாள் 2014-05-11.