கைவினை வெடி குண்டு
கைவினை வெடிகுண்டு (improvised explosive device, IED) அல்லது தெருவோர குண்டு என்பது கைவினையாக வீடுகளில் செய்யப்பட்டு, வழமையான படைத்துறை சண்டைகளைப் போலன்றி மாற்றுவழிகளில் செயல்படுத்துகின்ற வெடிகுண்டுகளாகும். வழமையான படைத்துறை ஆயுதங்களை, காட்டாக எறிகணைகளை, வெடிக்கவைக்கும் இயங்குமுறையோடு இணைத்தும் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
இத்தகைய கைவினை வெடிகுண்டுகளை தீவிரவாதிகள் செயல்படுத்தலாம்; அல்லது வழமையில்லா போர்களில் கொரில்லாப் போர்முறையில் போராளிகளும் அதிரடி படைகளும் தங்கள் சண்டைக்களங்களில் பயன்படுத்தலாம். இரண்டாவது இராக் போரின்போது கைவினை வெடிகுண்டுகள் வெகுவாகப் பயன்படுத்தப்பட்டன; 2007ஆம் ஆண்டு இறுதியில் இராக்கில் இறந்த கூட்டுப் படையினரில் 64% கைவினை வெடிகுண்டுகளுக்கே பலியாயுள்ளனர். ஆப்கானிஸ்தானிலும் கிளர்ச்சிக்காரர்கள் இவ்வகை வெடிகுண்டுகளால் 2001 முதல் இன்றுவரை 66% கூட்டுப் படையினரை அழித்ததாக மதிப்பிடப்படுகிறது.[1]
தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையின் படைத்துறை இலக்குகளை நோக்கி இத்தகைய வெடிகுண்டுகளையே பயன்படுத்தினர்.[2][3] இந்தியாவிலும் தீவிரவாத தாக்குதல்களில் கைவினை வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-03-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-08-16 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Suicide Terrorism: A Global Threat". Pbs.org. 2009-10-18 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "13 killed in blasts, arson in Sri Lanka". Hindu.com. 2006-04-13. 2006-04-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-10-18 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி)
வெளியிணைப்புகள்[தொகு]
- IED News at DefenceTalk
- CFR-TV Episode 7 பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம் – video of a blue VBIED detonated from a distance
- iFilm video of vehicle struck by IED பரணிடப்பட்டது 2008-12-03 at the வந்தவழி இயந்திரம்
- Transcript of PBS Frontline episode Private Warriors
- Defense Update பரணிடப்பட்டது 2004-08-13 at the வந்தவழி இயந்திரம் – the use of IED in Asymmetric Warfare
- Defense Update – protection against IED
- Defense Update பரணிடப்பட்டது 2011-07-09 at the வந்தவழி இயந்திரம் – protected vehicles
- Defense Update பரணிடப்பட்டது 2013-11-10 at the வந்தவழி இயந்திரம் – Israeli IED Neutralizer
- IED Definition Structure Applied to the CBRN Threats (p9-11)
- IEDs and the futility of increased armor பரணிடப்பட்டது 2011-07-01 at the வந்தவழி இயந்திரம்
- Strategy for Countering IEDs - Chris Hunter பரணிடப்பட்டது 2017-10-18 at Archive-It
- Clearing Bombs in Afghanistan பரணிடப்பட்டது 2010-07-15 at the வந்தவழி இயந்திரம் - slideshow by Life magazine