என் பெயர் ராமசேஷன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என் பெயர் ராமசேஷன்
நூலாசிரியர்ஆதவன்
வகைபுதினம்
வெளியீட்டாளர்இமயப் பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
1980

என் பெயர் இராமசேஷன் என்பது எழுத்தாளர் ஆதவன் எழுதிய ஒரு தமிழ்ப் புதினம்.[1] இதன் முதல் பதிப்பை இமயப் பதிப்பகம் 1980ம் ஆண்டு வெளியிட்டது. இப்புதினம் வித்தாலி பூர்ணிக்காவால் உருசிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு ஒரு லட்சம் படிகள் விற்பனையானது.

உயிர்மை பதிப்பகம் 2006 ஆம் ஆண்டு இதனை மீண்டும் வெளியிட்டது. மொத்தம் 199 பக்கங்கள் கொண்ட இப்புதினம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு பகுதிகளும் தலா 90 பக்கங்களைக் கொண்டுள்ளன. மூன்றாவது பகுதி எட்டு பக்கங்களைக் கொண்டுள்ளது.

கதையின் சுருக்கம்[தொகு]

உயிர்மைப் பதிப்பின் பின்பக்கக் குறிப்பு:

ஒரு நகர்ப்புற, மத்தியதர இளைஞன், ராமசேஷன் கண்களின் வழியே நவீன வாழ்க்கையின் பாசாங்குகளும் முகமூடிகளும் வேட்கைகளும் சித்திரக்கப்படுகிறது. சுயநிரூபணத்திற்கான பரிதவிப்பும் அடையாளத் தேடலும் கொண்ட இளமையின் வண்ணமும் உங்கள் மீதும் பூசப்படுகிறது.

ராமசேஷன் நடுத்தரவர்க்க பிராமண குடும்பத்தில் பிறந்தவன். அப்பா சாது. பெண்கள்தான் குடும்பத்தில் ஆட்சி செலுத்துகிறார்கள். ராமசேஷன் பொறியியல் கல்லூரி படிக்கின்றான். அப்போது அவனுக்கு சில பெண்கள் அறிமுகம் ஆகின்றார்கள். வேறு தரமான ஆண்கள் நண்பர்களும் விரோதிகளுமாக ஆகின்றார்கள். ஒரு பேராசிரியர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் எல்லாரையும் நெருக்கமாகத் தெரிய வாய்ப்பு கிடைக்கிறது. மக்கள் அனைவருமே முகமூடிகளை அணிந்து கொண்டு தங்கள் உறவுகளையும், உணர்வுகளையும் அணுகுகிறார்கள். அந்த முகமூடிகள் எவை, ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்று ஒரு மெல்லிய நகைச்சுவை இழையோடு கதை உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_பெயர்_ராமசேஷன்&oldid=2111883" இலிருந்து மீள்விக்கப்பட்டது