பெருமுழுநிலவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பார்வைக்குப் பெரிதாகத் தெரியும் வெண்ணிலா. வலது: மார்ச்சு 19, 2011இல் நிகழ்ந்த "பெருமுழுநிலவு"; இடது: திசம்பர் 20, 2010இல் தோன்றிய "சாதாரண" முழுநிலவு.

பெருமுழுநிலவு (சூப்பர்மூன், Supermoon) என்பது ‘நிலவிற்கும் பூமிக்கும் இடையேயான தொலைவு சராசரியாக உள்ளதைவிட சற்று குறைவாகவும் முழுநிலவு கூடிய தினமாகவும் இருக்கும் நிகழ்வாகும்’ என்று நாசாவின் மூத்த அறிவியலாளர் ஜேம்சு கார்வின் வரையறுக்கிறார் [1] மார்ச் 19, 2011 அன்று பூமிக்கு 356,577 கிலோமீட்டர்கள் (2 இலட்சத்து 21 ஆயிரத்து 556 மைல்கள்) தொலைவில் நிலவு இருக்கும். சராசரியாக நிலவிற்கும் பூமிக்குமான அண்மைநிலைத் தொலைவு (lunar perigee) 364,397 கிலோமீட்டர்கள் ( 2 இலட்சத்து 26 ஆயிரத்து 425 மைல்கள்) ஆகும். கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலவு பூமிக்கு அருகில் வருகிறது. இச்சிறு மாற்றத்தைக் கண்டிட லேசர் தொலைவுகாட்டிகளால் (laser rangefinder) மட்டுமே இயலும். இருப்பினும், இயல்பாக இருப்பதைவிட முழுநிலவு சற்று பெரியதாகவும் பொலிவு அதிகரித்தும் காணப்படும். இதற்கு முன் 1955, 1974, 1992 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் இந்த சூப்பர்மூன் நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

பெருநிலவுஎன்பது நிலாவின் உரு-ஒளிப் பெருக்கத்தைக் குறிக்கும் புதிய குறியீட்டுச்சொல். கோளியலாளர் ரிச்சார்ட் நோலே 1979 ஆம் ஆண்டு [2] இந்தக் குறியீட்டுச் சொல்லை உருவாக்கினார். இது வானியல் [3] தோற்றம் அன்று. கண்ணுக்குத் தெரியும் தோற்றம். இது நிலவு-பூமி-சூரியன் சுற்றுகையில் ஒரு நேர்கோட்டில் வரும்போது நிறைமதி நாளில் [4] பூமியில் உள்ளவர்களுக்கு நிலா தெரியும் உருவொளிப்பெருக்கம். இது ஆண்டுக்கு ஒருமுறை நிகழும். 2013 சூலை 23 அன்று நிகழ்ந்த இது 2014 ஆகட்டு 10 அன்று மீண்டும் நிகழும்.

விண்ணில் கோள்கள் சூரியனையும், சூரியன் பால்வழிப் பாதையில் ஒரு மையத்தையும் நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகின்றன. அதே போல நிலாவும் பூமியைச் சுற்றிவருகிறது. நிலா பூமியைச் சுற்ற 29.32 நாள் ஆகும். பூமி சூரியனைச் சுற்ற 365.2563666 சராசரி-நாள் [5] ஆகும். இந்தக் கணக்கீட்டு முறையில் பூமியின் ஒருபக்கம் சூரியனும் மறுபக்கம் நிலாவும் ஒரே நேர்கோட்டில் வரும்போது ‘பெருநிலவு’ தோற்றம் நிகழும்.

பூமி சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவருவதால் இரண்டுக்கும் இடையில் உள்ள தொலைவும் வேறுபடும். அண்மையில் இருக்கும்போது 147,098,290 கிலோமீட்டர். தொலைவில் இருக்கும்போது 152,098,232 கிலோமீட்டர்.

அருகில் உள்ள பொருள் பெரிதாகவும் தெளிவாகவும் கண்ணுக்குத் தெரியும். தொலைவில் உள்ள பொருள் அருகில் உள்ளதை ஒப்புநோக்கும்போது சற்றே சிறிதாகவும், மங்கலாகவும் புலப்படும். இந்த வகையில் சூரியன், பூமி, நிலா மூன்றும் குறைந்த தொலைவில் இருக்கும்போது ஒளியும் பருமையும் பெருகும். இப்படிப் பெருகித் தோன்றுவதே இந்தப் பெருநிலவு.

பொருநிலவுக் காட்சியின்போது நிலாவானது தொலைவில் தெரிவதைக் காட்டிலும் 14% கூடுதல் பருமனும், 30% கூடுதல் ஒளியும் கொண்டிருக்கும் என ‘நாசா’ [6] கணித்துள்ளது.

சங்கப்பாடல்[தொகு]

நெடுவெண் நிலவினார் என்னும் சங்ககாலப் புலவர் இதனை நெடுவெண் நிலவு எனக் குறிப்பிடுகிறார்.[7]

வானியல் நிகழ்வு[தொகு]

இது 2011 மார்ச் 19 அன்று 356,577 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தபோது பெருநிலவின் ஒளிப்பெருக்கம். (1993ல் தோன்றிய பெருநிலவு 20% கூடுதல் ஒளியும், 15% கூடுதல் பருமனும் கொண்டிருந்ததுதான் பொருநிலவின் மிகப் பெரிய தோற்றம்)

பெருமுழுநிலவு என்பது ஒரு வானியல் நிகழ்வு மட்டுமே; இதனால் புவியில் நிலநடுக்கங்களோ, சுனாமிக்களோ தூண்டப்படுவது கிடையாது என்று நிலநடுக்கவியலாரும் எரிமலையியலாரும் கூறுகின்றனர் [8]. நிலவு புவிக்கு அண்மைநிலையில் இருத்தலும் கூடுதலாக முழுநிலவுப் பிறையில் நிலவு இருத்தலும் புவியின் அக ஆற்றலில் எவ்வித பெருமாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. பெருமுழுநிலவன்று ஏற்படக்கூடிய மதிப்பெருக்கும் (lunar tide) கூட வழமையாக ஒவ்வொரு முழுநிலவின் (பெளர்ணமி) பொழுதும் ஏற்படுவதை விட சற்றே அதிகமாக இருக்கும். நிலவின் (மற்றும் சூரியனின்) பரலை விசைகள் (tidal forces) எப்போதுமே புவிமேலோட்டுப் பேரியக்க விசைகளை (tectonic forces) விட மிகமிகக் குறைவாகவே உள்ளதால், நிலநடுக்கங்களோ அதனால் விளையக்கூடிய ஆழிப்பேரலைகளோ சாத்தியமில்லை.

அளவில் காணப்படும் மாற்றங்கள்[தொகு]

அண்மைநிலை, சேய்மைநிலையில் இருக்கும்போது முழுநிலவின் தோற்றங்கள்

சராசரியாகவுள்ள புவி-நிலவு அண்மைநிலைத் தொலைவுடன் (364,397 கிலோமீட்டர்கள்) பெரியமுழுநிலவன்று இருக்கும் அண்மைநிலைத் தொலைவை (356,577 கி.மீ) ஒப்பிட்டால் நிலவின் தோற்றம் ஏறத்தாழ 2.15 % பெரிதாகத் தோன்றும். படத்தில் காட்டப்பட்டுள்ள அண்மைநிலைத் தொலைவுடன் (356700 கி.மீ) முழுநிலவின் சேய்மைநிலைத் தொலைவை (406300 கி.மீ) ஒப்பிட்டால் ஏறத்தாழ 12 % சிறியதாகக் காட்சியளிப்பது கண்கூடு.

2012இல் பெருமுழுநிலவு[தொகு]

2012ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் நாள் இரவு 11:34 மணிக்கு (அமெரிக்காவின் கிழக்குப் பிரதேச நேரம் - EST; பொது நேரம் - UT: மே 6, காலை 4:34) பெரு முழுநிலவு நியூயார்க் வானில் தோன்றி எழிலுடன் ஒளிர்ந்தது.

மேற்கோள்கள்[தொகு]

 1. நாசா [1] காண்க. முதல் கேள்வியின் பதில்
 2. astrologer Richard Nolle in 1979
 3. astronomical
 4. பௌர்ணமி
 5. mean solar days
 6. NASA
 7.  
  கருங் கால் வேங்கை வீ உகு துறுகல்
  இரும் புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை
  எல்லி வருநர் களவிற்கு
  நல்லை அல்லை நெடு வெண்ணிலவே!

 8. நாசா [2] காண்க. இரண்டாவது கேள்வியின் பதில்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமுழுநிலவு&oldid=2442592" இருந்து மீள்விக்கப்பட்டது