வெள்ளை யானை

வெள்ளை யானை (white elephant) என்பது வெள்ளை நிறத்தில் உள்ள யானை அல்ல. இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் ஒரு வித அரிய ரக யானை இனத்தினைக் குறிக்கிறது. தாய்லாந்து நாட்டில் வெள்ளை யானைகளிடமிருந்து எந்த வேலையையும் வாங்க மாட்டார்கள். ஆயினும் அதை வைத்து வளர்ப்போருக்கு பெரும் பொருட்செலவு ஏற்படும். இதனைக் குறிக்கும் வகையில் "வெள்ளை யானை" எனும் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது - எதற்கும் பயன்படாத ஆனால் கெளரவத்திற்காகவும், பெருமைக்காகவும் பெரும்பொருட்செலவில் பராமரிக்கப்படும் திட்டங்கள், விஷயங்கள் “வெள்ளை யானை”கள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்து மதமும் பௌத்த மதமும்[தொகு]
இந்து மதத்தில் வெள்ளை யானை இந்திரனின் வாகனமாக கருதப்படுகிறது. இந்திரனின் வெள்ளை யானையை ஐராவதம் என அழைப்பர் .பௌத்த மதத்தில் கூட கௌதம புத்தர் வெள்ளை யானையின் முதுகில் ஏறி மாயாதேவியின் கருவில் சென்றதாக ஒரு நம்பிக்கை உண்டு. எனவே புத்த மதத்தினர் வெள்ளை யானையை கடவுளாக கருதுகின்றனர்.
தாய்லாந்து[தொகு]
உலகில் வெள்ளை யானைகள் அதிகம் காணப்படும் நாடு தாய்லாந்து. அதனாலே தாய்லாந்திற்கு வெள்ளை யானை பூமி என்றொரு பெயரும் உண்டு. தாய்லாந்து மக்கள் வெள்ளை யானையை புனிதமாக கருதுகின்றனர் .அங்கு தங்கத் தட்டில் தான் வெள்ளை யானைகளுக்கு உணவளிக்கப்படுகிறது. மேலும் ஊர் அரசனுக்குரிய அனைத்து வசதிகளும் அவற்றிக்கும் செய்து தரப்படுகிறது.அதுமட்டுமின்றி வெள்ளை யானையைக் கண்டுபிடிப்போருக்கு வரி சலுகையளிக்கப்பட்ட அரசு நிலங்களும் பரிசாக அளிக்கப்படுகிறது. தாய்லாந்து நாட்டின் மேம்பாட்டு தந்தை என்று அழைக்கப்படும் மொங்குட் அரசரின் தலைமையில் வடிவமைக்கப்பட்ட தாய்லாந்தின் முதல் தேசியக்கொடியில் வெள்ளை யானையின் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .
மியான்மர்(பர்மா)[தொகு]
தாய்லாந்து நாட்டிக்கு அடுத்தப்படியாக வெள்ளை யானைகள் அதிகம் தென்படுகின்ற நாடு மியான்மர் (பர்மா). வெள்ளை யானை வலிமையின் சின்னம். எந்த நாட்டில் வெள்ளை யானை உள்ளதோ, அந்த நாடு செழிப்பாக இருக்கும்; மக்கள் அமைதியாக வாழ்வர். எந்த அபாயமும் நாட்டிற்கு ஏற்படாது...' என்பது மியான்மர் மக்களின் நம்பிக்கை. 2001ல் இருந்து 2010 வரை மியான்மரில் நான்கு வெள்ளை யானைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.[1][2] [3]
காண்க[தொகு]
குறிப்பு[தொகு]
- ↑ Burma in Transition
- ↑ [https://web.archive.org/web/20020623050455/http://www.irrawaddy.org/news/2002/may25.html Second White Elephant Found]
- ↑ White Elephants Snubbed by Junta
வெளி இணைப்புகள்[தொகு]