லோரம் இப்சம்
அச்சுத்துறையிலும் வரைகலைத் துறையிலும், lorem ipsum (லோரம் இப்சம்)[p][1] என்பது இடத்தை நிரப்பும் ஒரு வெற்று உரை ஆகும். பொதுவாக, ஒரு ஆவணம் அல்லது வடிவமைப்பின் எழுத்துரு, படிமங்கள், பக்க வடிவமைப்பு முதலிய தோற்றக்கூறுகளின் மேல் கவனத்தைக் குவிப்பதற்காக இவ்வுரை பயன்படுகிறது.
சீசர் எழுதிய இலத்தீன ஆக்கங்களில் இருந்து சொற்களை மாற்றியும், நீக்கியும், கூட்டியும் எழுதி இந்த லோரம் இப்சம் உரை பெறப்படுகிறது. இதனால், அது பொருள் மிக்கதாகவோ முறையான இலத்தீர உரையாகவோ இருப்பதில்லை.[1]
"லோரம் இப்சம்" என்பதனை மொழிபெயர்த்தால் "வலி அதனாலேயே" என்பது போல் பொருள் தரும் (dolorem = வலி, துயரம், அவதி ; ipsum = அதனாலேயே).
"lorem ipsum" என்பது செம்மொழி இலத்தீனத்தைப் போல் இருப்பதால் ஆர்வத்தைத் தூண்டினாலும், இது எவ்வகையிலும் பொருள் தரக்கூடாது என்ற நோக்கத்துடனேயே உருவாக்கப்பட்டது ஆகும். ஓர் உரை பொருள் தருமானால், ஒரு வடிவமைப்பின் தோற்றக்கூறுகளில் கவனம் செல்லாமல் அந்த உரையைப் படிப்பதிலேயே கவனம் செல்லும். எனவே தான், ஒரு வடிவமைப்பின் தோற்றக்கூறுகளில் கூடுதல் கவனத்தைக் குவிக்கும் பொருட்டு, பதிப்பாளர்கள் இந்த லோரம் இப்சம் உரையைப் பயன்படுத்துகிறார்கள்.
எடுத்துக்காட்டு உரை
[தொகு]ஒரு வழமையான lorem ipsum உரை பின்வருமாறு இருக்கும்:
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum. |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "What does the filler text "lorem ipsum" mean?", Cecil Adams, The Straight Dope, February 2001, webpage: SDope-lorem.
வெளி இணைப்பு
[தொகு]- சீசர் எழுதிய மூல உரை De finibus bonorum et malorum (நூல் 1), ஆங்கில விக்கி மூலத் தளத்தில் இருந்து