நாச்சோ

நாச்சோ (ஆங்கிலம்: Nachos, பிரெஞ்சு: Nachos, எசுப்பானியம்: Nachos) என்பது மெக்சிக்கோவில் தோன்றிய சோளத்தை அடிப்படையாகக் கொண்ட விரைவாக சமைக்கக்கூடிய ஓர் புகழ்பெற்ற சிறுதீனி ஆகும். இதில் நிரம்ப சேர்பொருட்களைக் கூட்டி முழுமையான உணவாகவும் கொள்ளலாம். இவற்றின் மிக எளிய தயாரிப்பில் தார்த்தியா தட்டைகளில் உருக்கிய பாலாடைக் கட்டியையும் சல்சா எனப்படும் தக்காளிச் சட்னியையும் (sauce) ஊற்றி செய்வதாகும்.1943ஆம் ஆண்டு இக்னேசியோ "நாச்சோ" அனயாவால் தயாரிக்கப்பட்ட முதல் நாச்சோக்களில் சுட்ட சோளத் தார்த்தியாவின் மேல் செத்தர் பாலாடைக்கட்டியை உருக்கி ஊற்றி சிவந்த ஜலபெனோ மிளகாய் ஊறுகாயுடன் வழங்கப்பட்டது.
பன்னாட்டு நாச்சோ தினம்
[தொகு]ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் நாள் பன்னாட்டு நாச்சோ தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1990களில் ஐக்கிய அமெரிக்கா மற்றும்மெக்சிகோவில் 1943ஆம் ஆண்டு இந்நாளில் இருநாடுகளின் எல்லைப்புறத்தில் அமைந்த பீதரஸ் நெக்ரஸ் நகரின் எல் மோடர்னோ உணவகத்தில் இக்னேசியோ அனயா தயாரித்ததை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்பட்டது. இந்த நகரத்தில் அக்டோபர் 13 மற்றும் 15க்கு இடைப்பட்ட நாட்களில் பன்னாட்டு நாச்சோ விழாவும் நடத்தப்படுகிறது.[1]
நாச்சோ சீஸ்
[தொகு]
ஒவ்வொரு முறையும் பாலாடைக்கட்டியை உருக்கி அதனுடன் காரமான சட்னிகளை கூட்டுவதற்கு பதிலாக பெரியளவில் தயாரிக்கக்கூடிய சமையற்கூடங்களில், காட்டாக பள்ளிகள், திரையரங்குகள், விளையாட்டரங்குகள், உடனடியாக பயன்படுத்தக்கூடிய வகையில் இவ்வாறு பதப்படுத்தப்பட்ட பாலாடைக்கட்டி தயாரிக்கப்படுகிறது. இது ஐக்கிய அமெரிக்காவில் நாச்சோ சீஸ் என்று அறியப்படுகிறது. துவக்கத்தில் நாச்சோக்களுக்கு மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்த சீஸ் மிகவும் புகழ்பெற்று பிற தொட்டுக்கொள்ளும் உணவுப்பண்டங்களுக்கும் பயன்படுத்தலாயிற்று. அமெரிக்காவின் பல மளிகை அங்காடிகளிலும் ரிகோஸ், ஃபிரிட்டோ லே, டோகோ பெல் வணிகப்பெயர்களிலும் அல்லாதும் விற்கப்படுகின்றன. [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mexicolesstraveled.com". Archived from the original on 2018-01-17. Retrieved 2011-08-03.
- ↑ "Our Food: The Menu: Nachos & Sides". Tacobell.com. Taco Bell Corporation. Retrieved 2008-12-30.