அறவழி தன்முனைப்பாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறவழி தன்முனைப்பாக்கம் என்பது ஒருவர் தனது நலத்துக்காக, நன்மைக்காக செயற்படுவதே அறமாகும் எனும் ஒரு மெய்யியல் நிலைப்பாடு ஆகும். ஒருவர் தனது இலாபத்துக்காகச் செயற்பட்டால், அவர் நல்வழியில் செயற்படுகிறார் என்றும், அந்த நடவடிக்கை சரியானது என்றும் இந்த கொள்கை கூறுகிறது[1].

தன்னலம் என்றால் என்ன[தொகு]

இன்பம் தருவதே நலம் என்றும், நல் வாழ்க்கை நலம், அதிகாரம் அறிவு அல்லது ஆத்மீக நலம் என்றும் தன்னலம் என்பது தொடர்பாக வெவ்வேறு கருத்துக்கள் உண்டு.

விருப்பப்படி செய்யலாமா[தொகு]

அறவழி தன்முனைப்பாக்கம் ஒருவர் தாம் விரும்பவதையே எப்போதும் செய்ய வேண்டும் என்று கூறவில்லை. ஒருவருக்கு சொட்டுத் தேன் விருப்பமாக இருக்கலாம், ஆனால் அது அவர் உடல் நலனுக்கு கேடாக இருக்கும். ஒருவருக்கு காலை நித்திரை கொள்வது விருப்பமாக இருக்கலாம், அதனால் அவர் வேலை கெடலாம். பிறருக்கு ஒருபோது ஒத்துழைக்காமல் விட்டால், தேவைப்படும் போது அவர்கள் உங்களுக்கு உதவ மாட்டார்கள். எனவே குறுகிய காலத்தில் இன்பத்தை தேடி செயற்படுவது, ஒருவருடைய நெடுங்கால நலத்துக்கு தீங்காக அமையலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Theodore Schick, Jr. & Lewis Vaughn. 2002. Doing Philosophy: An Introducton to Thought Experiments. Toronto: Mc Graw Hill. பக்கங்கள்: 324-325
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறவழி_தன்முனைப்பாக்கம்&oldid=1776244" இலிருந்து மீள்விக்கப்பட்டது