தாய்ப்பே 101

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாய்ப்பே 101
台北101[1]
தாய்ப்பே 101
Map
பதிவு உயரம்
Tallest in the world from 2004 to 2010[I]
முந்தியதுபெட்ரோனாஸ் கோபுரங்கள்
பிந்தையதுபுர்ஜ் கலிஃபா
பொதுவான தகவல்கள்
வகைMixed use: communication, conference, fitness center, library, observation, office, restaurant, retail
இடம்Xinyi District, தாய்ப்பே, தைவான்
கட்டுமான ஆரம்பம்1999[2]
நிறைவுற்றது2004[2]
திறப்புடிசம்பர் 31, 2004
செலவுNT$ 58 billion
(US$ 1.80 billion)[3]
உரிமையாளர்Taipei Financial Center Corporation[2]
மேலாண்மைUrban Retail Properties Co.
உயரம்
கட்டிடக்கலை509 m (1,669.9 அடி)[2]
கூரை449.2 m (1,473.8 அடி)
மேல் தளம்439 m (1,440.3 அடி)[2]
கண்காணிப்பகம்391.8 m (1,285.4 அடி)[2]
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை101 (+5 basement floors)[2]
தளப்பரப்பு193,400 m2 (2,081,700 sq ft)[2]
உயர்த்திகள்61 தோஷிபா/KONE elevators, including double-deck shuttles and 2 high speed observatory elevators)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)C.Y. Lee & partners[2]
அமைப்புப் பொறியாளர்Thornton Tomasetti[2]
முதன்மை ஒப்பந்தகாரர்KTRT Joint Venture [4]
வலைதளம்
taipei-101.com.tw
மேற்கோள்கள்
[2][5]

தாய்ப்பே 101 (臺北 101) சின்யீ (Xìnyì) மாவட்டம், தாய்ப்பே, தாய்வான் நாட்டிலமைந்துள்ள, 106 மாடிகளைக் கொண்ட ஒரு வானளாவி (skyscraper) ஆகும். ஆரம்பத்தில் இது, சீன மொழியிலுள்ள, உத்தியோகபூர்வப் பெயரான, தாய்ப்பே அனைத்துலக நிதியப் பெருங் கோபுரக் கட்டிடம் (臺北國際金融大樓 - Taipei International Financial Grand Tower-Building) என்ற பெயரை அடிப்படையாகக் கொண்ட, தாய்ப்பே நிதிய மையம் (Taipei Financial Center) என அழைக்கப்பட்டது.

அக்டோபர் 2003 இல் கட்டி முடிக்கப்பட்டதிலிருந்து, துபாய், புர்ஜ் கலிஃபா கட்டடம் 2010 இல் கட்டப்படும் வரை இது உலகின் மிக உயர்ந்த கட்டடமாக இருந்தது. இது உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் நகர வாழிடங்களுக்கான கவுன்சில் (Council on Tall Buildings and Urban Habitat (CTBUH)) நியமித்துள்ள, உலகின் உயர்ந்த கட்டிடங்களுக்கான நான்கு பட்டங்களில் இரண்டை இக் கட்டிடம் பெற்றது. இது நில மட்டத்துக்கு மேல் 101 மாடிகளையும், 5 நிலக்கீழ்த் தளங்களையும் உடையது.

உயர்ந்த கட்டிடங்களை வகைப்படுத்தும் 4 முறைகள்:

மேலே சொல்லப்பட்ட வகைகளில், தாய்ப்பே 101 , முறையே பின்வரும் உயரங்களையுடையது.

அலங்கார மற்றும் அமைப்பு உச்சிவரை - 508 மீ = 1667 அடி
கூரைவரை - 448 மீ = 1470 அடி
அதி உயர் தளம் வரை - 438 மீ = 1437 அடி

இன்றுவரை கட்டப்பட்டுள்ள வானளாவிகளுள் (skyscraper), பல அம்சங்களில் தொழில்நுட்ப ரீதியில் உயர்ந்த நிலையிலுள்ளது இதுவேயாகும். இக் கட்டிடத்தில் செக்கனுக்கு ஒரு கிகாபைட்டு வரை வேகமுள்ள பைபர் ஒப்டிக் (fiber-optic) மற்றும் செயற்கைக்கோள் வலையக இணைப்புக்கள் உண்டு. தோஷிபா(Toshiba) நிறுவனத்தினால் செய்யப்பட்ட, நிமிடத்துக்கு 1008 மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய, உலகின் அதிவேக உயர்த்திகள் இரண்டு இங்கே பொருத்தப்பட்டுள்ளன. நிலநடுக்கம், புயல் மற்றும் காற்றுத் தாக்கங்களுக்கு எதிராகக் கட்டிடத்தை நிலைப்படுத்துவதற்காக, 800 தொன் அளவுள்ள, tuned mass damper, 88 ஆவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.கோபுரத்துக்கு அருகில் 6 மாடிகளைக்கொண்ட அங்காடியொன்றும் உள்ளது.

2003 ஜூலை 1 ஆம் திகதி, 448 மீட்டர் உயரத்தில், கோபுரத்துக்குக் கூரையிடப்பட்டது. 2003, அக்டோபர் 17 ல், நகர் மேயர் மா யிங் ஜூ அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவொன்றுடன், அதன் உச்சி அமைப்புப் (pinnacle) பொருத்தப்பட்டது. இதன்மூலம், இக்கட்டிடம், பெட்ரோனாஸ் கோபுரத்திலும் 50 மீட்டர் (165 அடி) கூடுதலாக உயர்ந்து உலகின் உயர்ந்த கட்டிடமாகியது. [1]

ஆறு மாடிகளைக்கொண்ட அங்காடிக்கட்டிடம் 2003 நவம்பரிலும், மிகுதி அலுவலகக் கட்டிடம் 2004ன் மூன்றாம் காலாண்டிலும் திறந்து வைக்கப்படவுள்ளது.

சிலர் இக்கட்டிடம் தாய்வானில் சகஜமான நிலநடுக்கத்துக்கு தாக்குப்பிடியாது என்று கருதினர். 2002, மார்ச் 31ஆம் திகதி ரிக்டர் அளவையில் 6.8 ஆகப் பதிவாகிய புவியதிர்வு ஒன்றினால், அந்த நேரத்தில் அதியுயர்ந்த தளமாக இருந்த இக்கட்டிடத்தின் 56 ஆவது மாடியிலிருந்து, பாரந்தூக்கியொன்று (crane) விழுந்து, 5 பேர் இறந்தபோதிலும், கட்டிடம் பாதிப்புக்குள்ளாகவில்லை. இக்கோபுரம் ரிக்டர் அளவையில் 7 அலகு வரை புவியதிர்வைத் தாங்கக் கூடியதாகவும், நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழக்கூடிய பெருஞ் சூறவளியைத் தாங்கக் கூடியதாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Official website". Archived from the original on ஆகத்து 28, 2020. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 29, 2012.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 "Taipei 101 – The Skyscraper Center". Council on Tall Buildings and Urban Habitat. Archived from the original on சூன் 21, 2012. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 29, 2012.
  3. My E Gov, The E-government Entry Point of Taiwan – Taiwan Yearbook 2005 பரணிடப்பட்டது 2009-01-15 at the வந்தவழி இயந்திரம், Wikipedia – List of world's most expensive single objects
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2018-11-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181129214811/http://www.kumagaigumi.co.jp/english/tech/skyscrapers.html. 
  5. தாய்ப்பே 101 at Emporis

வெளி இணைப்புக்களும், உசாத்துணைகளும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்ப்பே_101&oldid=3652048" இலிருந்து மீள்விக்கப்பட்டது