தொங்கு பாலம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

தொங்கு பாலம் என்பது பால வகைகளுள் ஒன்று. இதில் பாலம் (பளு-தாங்கும் பகுதி) இடைநிறுத்த கம்பிகளுக்குக் கீழே செங்குத்தாகத் தொங்க விடப்படும். இந்த வகைப் பாலத்தில் கோபுரங்களுக்கு இடையே பக்கவாட்டில் கம்பிகள் இணைக்கப்பட்டிருக்கும் இவை முதன்மை கம்பிகளாகும். மேலும் பக்கவாட்டு கம்பிகளில் இருந்து செங்குத்து இடைநிறுத்த கம்பிகள் இணைக்கப்பட்டு அவை போக்குவரத்து செல்லும் சாலை உள்ள தளத்தின் எடையை தாங்கும்படி அமைக்கப்படுகின்றது.
சாதகமான நிலைகள்[தொகு]
- மற்ற பால வகைகளைக் காட்டிலும் இதில் நீளமான தாங்கியை (span) அமைக்கலாம்.
- நிலநடுக்க அசைவுகளை இந்தப் பாலம் தாங்கும்.
- குறைவான மூலப்பொருளே இதைக் கட்டுவதற்குத் தேவைப்படும்.