உள்ளடக்கத்துக்குச் செல்

அகநச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகநச்சு (Endotoxin) என்னும் நஞ்சானது நம் உடலின் எதிர்ப்பு அமைப்பானது நுண்ணுயிரியின் தாக்கத்தை கண்டறிய பயன்படுத்தும், சில கிராம்-எதிர் பாக்டீரியாக்களின் செல்-சுவரிலுள்ள, கட்டமைப்பு மூலக்கூறாகும்.

கிராம்-எதிர் பாக்டீரியா

[தொகு]
அகநச்சின் கட்டமைப்பு

அகநச்சிற்கு முக்கிய உதாரணம் லைபோபாலிசாகரைட் எனப்படும் கொழுப்புப்பலசர்க்கரையாகும் (குறுக்கம்: LPS). பல்வேறு கிராம்-எதிர் பாக்டீரியாக்களின் செல்-சுவரில் காணப்படும் LPS மூலக்கூறானது, நுண்ணுயிரியிகள் நோயினை உண்டாக்கத் தேவைப்படும் காரணிகளுள் முக்கியமான ஒன்றாகும்.[1]

கொழுப்புப்பலசர்க்கரை Kdo2-கொழுப்பு-A வடிவம். குளுகோசமைன் படிவுகள் நீலத்தில், கீடோ -டிஆக்சி ஆக்டுலோசோனேட் (Kdo) படிவுகள் சிவப்பில், அசைல் தொடரிகள் கருப்பில் மற்றும் பாஸ்பேட் தொகுதிகள் பச்சை வண்ணங்களில் குறிக்கப்பட்டுள்ளது.

LPS, கொழுப்பு-A (lipid-A) மற்றும் சர்க்கரை தொடரியைக் கொண்டது. கொழுப்பு-A பகுதியானது இம்மூலக்கூற்றின் நச்சு விளைவுகளுக்குக் காரணமாகும். சர்க்கரை தொடரியானது வெவ்வேறு பாக்டீரியாகளுக்கிடையில் அதிகமாக வேறுபட்டுக் காணப்படும். தோராயமாக, அகநச்சுகளின் அளவு 10 கிலோ டால்டன்கள் என்றாலும், அகநச்சுகள் 1000 கிலோ டால்டன்களுக்குச் சமமான திரட்டுகளை உருவாக்கும் தன்மை உள்ளதாகும்.

கிராம்-நேர் பாக்டீரியா

[தொகு]

1979- ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கிராம்-நேர் பாக்டீரியாவான லிஸ்டீரியா அகநச்சு-போன்ற பொருளை உருவாக்கலாம் என்று குறிப்பிட்டாலும்[2] பின்னர் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் இதை உறுதி செய்யவில்லை.[3]

ஆனால், பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் என்னும் ஒரு மண்வாழ் கிராம்-நேர் நுண்ணுயிர் டெல்டா அகநச்சினை உருவாக்கும் தன்மை கொண்டது.

பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் உருவாக்கும் பூச்சிகளைக் கொல்லும் டெல்டா அகநச்சின் படிக கட்டமைப்பு[4]

இரத்த நச்சுப் பரவல்

[தொகு]

இரத்தத்தில் அகநச்சு காணப்படுவது இரத்த நச்சுப் பரவல் (endotoxemia) எனப்படும். இதற்கான எதிர் விளைவுகள் மிகைபடும்போது நச்சூட்டு அதிர்ச்சி (septic shock) ஏற்படுகின்றது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tzeng YL, Datta A, Kolli VK, Carlson RW, Stephens DS (May 2002). "Endotoxin of Neisseria meningitidis composed only of intact lipid A: inactivation of the meningococcal 3-deoxy-D-manno-octulosonic acid transferase". J. Bacteriol. 184 (9): 2379–88. doi:10.1128/JB.184.9.2379-2388.2002. பப்மெட்:11948150. பப்மெட் சென்ட்ரல்:134985. http://jb.asm.org/cgi/pmidlookup?view=long&pmid=11948150. 
  2. Wexler H, Oppenheim JD (March 1979). "Isolation, characterization, and biological properties of an endotoxin-like material from the gram-positive organism Listeria monocytogenes". Infect. Immun. 23 (3): 845–57. பப்மெட்:110684. பப்மெட் சென்ட்ரல்:414241. http://iai.asm.org/cgi/pmidlookup?view=long&pmid=110684. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Establishment of beta-hydroxy fatty acids as chemical marker molecules for bacterial endotoxin by gas chromatography-mass spectrometry". பார்க்கப்பட்ட நாள் 2008-11-06.
  4. Li JD, Carroll J, Ellar DJ (October 1991). "Crystal structure of insecticidal delta-endotoxin from Bacillus thuringiensis at 2.5 A resolution". Nature 353 (6347): 815–21. doi:10.1038/353815a0. பப்மெட்:1658659. 
  5. Hurley JC (April 1995). "Endotoxemia: methods of detection and clinical correlates". Clinical microbiology reviews 8 (2): 268–92. பப்மெட்:7621402. பப்மெட் சென்ட்ரல்:172859. http://cmr.asm.org/cgi/pmidlookup?view=long&pmid=7621402. பார்த்த நாள்: 2011-08-28. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகநச்சு&oldid=3440436" இலிருந்து மீள்விக்கப்பட்டது