முக்கோண இறக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாலற்ற முக்கோண இறக்கை கொண்ட எச்ஏஎல் தேஜாஸ்
வால் உள்ள முக்கோண இறக்கை அமைவுடைய மிக்-21 (இது வழமையான வால் பகுதியைக் கொண்டுள்ளது)
முக்கோண இறக்கையடைய அவ்ரோ வல்கன் குண்டுவீசும் வானூர்தி

வானூர்தி இறக்கையின் மேலிருந்து காண் வடிவம் முக்கோண வடிவிலிருந்தால் அது முக்கோண இறக்கை (Delta wing) என வழங்கப்பெறும். இதன் ஆங்கிலப் பெயரான டெல்டா, முக்கோணவடிவிலிருக்கும் கிரேக்க எழுத்தான டெல்டா (Δ)-விலிருந்து பெறப்பட்டதாகும்.

வரலாறு[தொகு]

முக்கோணவடிவ நிலைப்படுத்திகள்[தொகு]

1529-க்கும் 1156-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், "கொன்றாடு காசு" என்பவர் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், வாணவேடிக்கை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கொண்டு ஏவுகணை தொழில்நுட்பத்தை விவரித்துள்ளார். அப்புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி 1961-ல் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது. அதில், பல்-நிலை ஏவுகணைகள், திரவ எரிபொருள் கலவையைப் பயன்படுத்துவது, முக்கோணவடிவ நிலைப்படுத்திகளைப் பயன்பாடு ஆகியவற்றைப் பற்றி எழுதியுள்ளார்.[1]

அக்கையெழுத்துப் பிரதி 1961-ல் கண்டறியப்படும் வரை, அவ்வகை நிலைப்படுத்திகளின் வடிவமைப்பு மற்றும் பெயர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போலந்து-லித்துவேனிய ராணுவப் பொறியாளரான கசிமெர்சு சீமெனோவிச் என்பவரால் கண்டறியப்பட்டது என எண்ணப்பட்டது.[1][2][3]

முக்கோண இறக்கைகள்[தொகு]

முக்கோண இறக்கைகளின் முதல் செயல்பாட்டுப் பயன்வடிவம் "வாலற்ற முக்கோணம்", அதாவது வால்பகுதியில்லாத முக்கோண இறக்கையுடைய வானூர்தி, வடிவில் வந்தது. இவை அறிமுகமான காலகட்டத்தில் "பறக்கும் இறக்கைகள்" என்று இவை அறியப்பட்டன. 1924-ல் அறிமுகப்படுத்தப்பட்ட செரனோவ்சுகி இறக்கை வடிவமைப்புகள், பரவளைய மேலிருந்து காண் வடிவம் கொண்டவை, முக்கோண இறக்கை எனும் பகுப்பில் சேர்க்கப்படக்கூடியதே என சிலர் வாதிடக்கூடும்[4]. ஆனால், யெர்மானியரான அலெக்சாண்டர் லிப்பிச் என்பவரே முக்கோண வடிவ இறக்கை வடிவமைப்புக்கு முன்னோடியாவார். இவரே 1931-ல் முதன்முதலில் வாலற்ற முக்கோண இறக்கையுடைய வானூர்தியை ஓட்டிக்காட்டினார்[5][6]. அதன் பின் நான்கு மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புகளையும் இவர் தயாரித்தார். குறைவான வேகத்தில் பறக்கும்போது இவை கட்டுப்படுத்துவதற்கு கடினமாயிருந்தன. அக்காலத்தில் இவ்வடிவமைப்பு பெருமளவில் ஆர்வத்தையும் கிளப்பவில்லை[7][8]. இரண்டாம் உலகப் போரின்போது லிப்பிச், தாரை எந்திரங்களைப் பயன்படுத்தும் முக்கோண இறக்கையுடைய இடைமறிக்கும் வானூர்தியை வடிவமைத்துக் கொண்டிருந்தார். அவற்றில் ஒரு திட்டம் மிதவை வானூர்தி சோதனை வரை சென்றது[9].

போருக்குப்பின் லிப்பிச் அமெரிக்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கே அவர் கலிபோர்னியாவிலுள்ள கன்வொயர் நிறுவனத்தில் வேலை பார்த்தார். கன்வொயர் நிறுவனத்தில் உயர் பதவிகளிலிருந்த சில பொறியாளர்கள் லிப்பிச்சின் இடைமறி வானூர்தி வடிவமைப்பில் கவரப்பட்டனர். அவர்கள் சற்றே பெரிதான சோதனை வடிவமைப்பில், கன்வொயர் எக்சு.எஃப்-92, ஆழ்ந்தனர். இவ்வானூர்தியின் முன்மாதிரி வடிவம், இது வணிகரீதியில் உற்பத்தி செய்யப்படவில்லை, மிக அதிக அளவில் பலவித சோதனைகளுக்குட்படுத்தப்பட்டது. இதன் வடிவமைப்பு பல நாடுகளிலிருந்த பல வானூர்தி வடிவமைப்பு நிறுவனங்களில் பெருத்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதன் பின் மிகக் குறுகிய காலத்திலேயே பல வானூர்திகள், முக்கியமாக இடைமறி வானூர்திகள், முக்கோண இறக்கை வடிவமைப்புடன் செய்யப்பட்டன. அதி வேகப் பயன்பாட்டிற்கு வாலற்ற முக்கோண இறக்கை வானூர்திகளே உகந்தவை என குறுகிய காலத்திலேயே நிலைநாட்டப்பட்டது. கன்வொயர் நிறுவனத்தின் எஃப்-102 எனும் போர்வானூர்தியே உலகின் எந்தவொரு வான்படையிலும் பயன்படுத்தப்பட்ட முதல் வாலற்ற முக்கோண இறக்கையுடைய வானூர்தியாகும்.

அதே நேரத்தில், லிப்பிச்சின் தரவுகளைக் கொண்டு பிரிட்டிசாரும் முக்கோண இறக்கை வானூர்திகளை வடிவமைத்தனர். முக்கியமாக அவ்ரோ வல்கன் எனும் குண்டுவீசும் வானூர்தி மற்றும் குளோசுடர் சாவலின் போர்வானூர்தி. குறைந்த வேகத்தில் வானூர்தியின் இயக்குதிறனை அதிகரிக்கவும், அதி வேகத்தில் திசையமைவு மாறுவீதத்தை அதிகரிக்கவும், புவியீர்ப்பு மையத்தின் வீச்சினை அதிகரிக்கவும் குளோசுடர் சாவலின் வானூர்தியில் வால்பகுதி அமைக்கப்பட்டது.[10]

அதிக தாக்கு கோணம் மற்றும் அதிக வேகங்களில் பறக்கும் திறனை மேம்படுத்தும் வண்ணம், மாசுகோவின் மத்திய காற்று மற்றும் நீரியக்கவியல் நிறுவனத்தால் வாலுடை முக்கோண இறக்கை வடிவமைப்பு அதன் வானூர்தி வடிவமைப்புகளில் பயன்படுத்தப்பட்டது. இத்தகைய அமைவடிவம் மிக்-21, சுகோய் சு-9/சு-11/சு-15 போர் வானூர்திகளில் பயன்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கில் உற்பத்தி செய்யப்பட்டது.

அண்மைக் காலத்தில் சாப் ஏபி நிறுவனம் தனது விகன் போர்வானூர்தியின் முன்விமானப் பகுதியில், நெருக்கமாக இணைசேர்க்கப்பட்ட கானர்டு(Canard) பயன்படுத்தப்பட்டுள்ளது. நெருக்கமாய் இணைசேர்த்தல் மூலம் இறக்கை மேலான காற்றோட்டம் பெருமளவு மாறுபடுத்தமுடியும், முக்கியமாக அதிக தாக்கு கோணங்களில் வானூர்தி செல்லும்போது பயன்படுத்தப்படுகிறது. வழமையான வாலில் பொருத்தப்பட்ட உயர்த்திகளை ஒப்பிட்டு நோக்குகையில், கானர்டுகள் ஒட்டுமொத்த ஏற்றத்தை அதிகப்படுத்துகின்றன. மேலும், கடினமான பறப்பிப்பு விதங்களையும் செய்ய உதவுகிறது, குறைந்த வேகத்தில் வானூர்தியை எளிதாக கையாளவும் வானூர்தியின் தரையிறங்கும் வேகத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த வடிவமைப்பு பிற வானூர்திகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது, எ-கா: யூரோஃபைட்டர் டைஃபூன்(Eurofighter Typhoon).

முக்கோண-இறக்கை வகைப்பாடுகள்[தொகு]

தூய முக்கோண இறக்கைகளின் சில விரும்பப்படாத பின்விளைவுக் காரணிகளால் அவற்றின் பயன்பாடு குறைந்தது. முக்கியமாக, அதிக தாக்கு கோணங்களில் காற்றோட்டப் பிரிவு (வளைந்த இறக்கைகளிலும் இத்தகைய பிரச்னை உண்டு), குறைவான உயரங்களில் அதிகமான இழுவை ஏற்படுதல். ஆகையால், தூய முக்கோண இறக்கைகள் அதிக உயரங்களில் அதிக வேகத்தில் பறக்கும் இடைமறித்துத் தாக்கும் வானூர்திகளில் மட்டும் பயன்படுத்தப்படுகின்றன.

அண்மைக் கால போர் விமானங்களில் முக்கோண இறக்கைகளுடன் கானர்டுகளும் சேர்த்துப் பயன்படுத்தப்படுகின்றன. எ-கா: யூரோஃபைட்டர் டைஃபூன், டசால்ட் ரஃபேல்.


" "
வாலற்ற முக்கோண இறக்கை
" "
வாலுள்ள முக்கோண இறக்கை
" "
வெட்டப்பட்ட முக்கோண இறக்கை
" "
கலப்பு/கூட்டு முக்கோண இறக்கை
" "
வளைந்த முக்கோண இறக்கை
" "
அலைவரை முக்கோண இறக்கை

குறிப்புகள்[தொகு]

 1. Uranos.org.pl
 2. New Rocket Guide, NASA
 3. Bolesław Orłowski, Technology and Culture, Vol. 14, No. 3 (Jul., 1973), pp. 461-473, JSTOR
 4. Alexandre Savine. "Boris Ivanovich Cheranovskij". பார்த்த நாள் 12 February 2011.
 5. Ford, Roger (2000). Germany's secret weapons in World War II (1. publ. ). Osceola, WI: MBI Publ.. பக். 36. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0760308470. http://books.google.com/books?id=lU8xBhe9ntsC&lpg=PA36&dq=Lippisch&pg=PA36#v=onepage&q=Lippisch&f=false. 
 6. "New Triangle Plane Is Tailless", December 1931, Popular Science article and photo of Delta I at bottom of page 65
 7. Madelung, Ernst Heinrich Hirschel, Horst Prem, Gero (2004). Aeronautical research in Germany : from Lilienthal until today ([American ed.]. ). Berlin: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:354040645X. http://books.google.com/books?id=OoFcHOLpCskC&lpg=PA168&dq=Lippisch%20Horten&pg=PA168#v=onepage&q=Lippisch%20Horten&f=false. 
 8. Wohlfahrt, Karl Nickel ; Michael (1990) (in German). Schwanzlose flugzeuge : ihre auslegung und ihre eigenschaften. Basel: Birkhauser Verlag. பக். 577–578. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:376432502X. http://books.google.com/books?id=33fBLs7FhQ8C&lpg=PA577&dq=Lippisch%20Horten&pg=PA577#v=onepage&q=Lippisch%20Horten&f=false. பார்த்த நாள்: 13 February 2011. "[Lippisch Delta I and Horten H I] Both these aircraft shown, how not to do it." 
 9. Lippisch Prototype Test Footage at youtube
 10. Partridge, J.; Number 179 - The Gloster Javelin 1-6, Profile Publications, 1967

குறிப்புதவிகள்[தொகு]

 • S. S. Sritharan and A. R. Seebass (1984). "A Finite Area Method for Nonlinear Supersonic Conical Flows". AIAA Journal 22: 226–233. doi:10.2514/3.8372. Bibcode: 1984AIAAJ..22..226S. 
 • S. S. Sritharan (1985). "Delta Wings with Shock-Free Cross Flow". Quarterly of Applied Mathematics XLIII: 275–286. 
 • Jingling Guan and S. S. Sritharan (2008). "A Problem of Hyperbolic-Elliptic Type Conservation Laws on Manifolds that Arises in Delta-Wing Aerodynamics". International Journal of Contemporary Mathematical Sciences 3: 721–737. 
 • Uwacadweb.uwyo.edu

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Delta wings
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்கோண_இறக்கை&oldid=1361842" இருந்து மீள்விக்கப்பட்டது