மிக்-21

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிக்-21
வகை சண்டை விமானம்
உற்பத்தியாளர் மிகோயன்
முதல் பயணம் 14 பிப்ரவரி 1955
நிறுத்தம் 1990 (ரஷ்யாவில்)
தற்போதைய நிலை பயன்பாட்டில் உள்ளது
பயன்பாட்டாளர்கள் சோவியத் வான்படை, இந்திய வான்படை, பல்கேரிய வான்படை
உற்பத்தி 1959 - 1985
தயாரிப்பு எண்ணிக்கை 11,496

மிக்-21 அல்லது மிகோயன் குருவிச் மிக்-21 சண்டை வானூர்தியாகும். இது மிகோயன் குருவிச் விமானம் கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் இரண்டாம் தலைமுறை விமானங்களாகவும், பிற்காலங்களில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் மூன்றாம் தலைமுறை விமானங்களாகவும் கருதப்பட்டன. சுமார் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இவ்விமானம் சேவை புரிந்துள்ளது. மேலும் சில நாடுகளில் அரை நூற்றாண்டுகளாக இன்னமும் சேவையில் உள்ளது. 1959 முதல் 1985 வரை உலகிலேயே அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட சண்டை விமானம் ஆகும்.

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mikoyan-Gurevich MiG-21
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
பொதுவான தகவல்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிக்-21&oldid=3614836" இருந்து மீள்விக்கப்பட்டது