உள்ளடக்கத்துக்குச் செல்

இறங்கமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இறங்கமைப்பு என்பது வானூர்தி மற்றும் விண்கலங்களின் கீழ் உள்ள ஒரு அமைப்பாகும். பொதுவாக பல சக்கரங்களைக் கொண்ட அமைப்பான இது, வானூர்திகளால் புறப்பாடு மற்றும் தரையிறங்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த வாகனங்கள் தரையில் நகர்வதற்கு இந்த அமைப்பு பயன்படுகின்றது.[1][2]

பயன்பாடு

[தொகு]
இறங்கமைப்பை காட்டும் வானூர்தியின் அடிப்பகுதி

ஒரு வானூர்தியைப் பொறுத்தவரை, இந்த அமைப்பு பறக்காதபோது தரையில் அதன் மொத்த எடையையும் தாங்கி நிற்கிறது. இதனால் இந்த அமைப்பானது வானூர்தி புறப்படவும், தரையிரங்கவும், உடற் அமைப்பிறகு சேதமின்றி இயக்க அனுமதிக்கிறது. பனி, நீர் அல்லது செங்குத்தான நிலப்பகுதிகளில் செயல்பாட்டிற்கு, சறுக்காமலிருக்க சிறப்பு உபகரணங்கள் அல்லது மிதவைகள் தேவைப்படுகின்றன.

வேகமான பறக்கக்க கூடிய தாரை வானூர்திகளில், பறக்கும் போது காற்றுடன் உராய்வைக் குறைக்க, இந்த இரண்டமைப்பானது வானூர்திகள் உடலமைப்பிற்குள் உள்வாங்குகின்றன. பின்னர் தரையிறங்கும் போது இவை பழைய நிலைக்கு திரும்புகின்றன.[3] சில ஏவூர்தி மற்றும் விண்கலங்களில் இவை பொதுவாக தரையிறங்கும்போது மற்றும் மேற்பரப்பு இயக்கத்தின் போது மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது, புறப்பாடும் பயன்படுத்தப்படுவதில்லை.

அமைப்பு

[தொகு]
ஒரு போயிங் வானூர்தியின் இறங்கமைப்பின் ஒரு பகுதி

இது பெரும்பாலும் மூன்று துணை அமைப்புகளைக் கொண்டுள்ளது, முன்பக்கத்தில் வானூர்தியின் மூக்கு பகுதியின் கீழ் ஒரு துணை அமைப்பையும், நடு அல்லது பின் பகுதியில் உடரமைப்பிற்குக் கீழ் அல்லது பக்கவாட்டு இறக்கைகளின் கீழ் இரண்டு துணை அமைப்புகளையும் கொண்டுள்ளது.[4] ஒவ்வொரு துணை அமைப்பும் ஒன்றுக்கும் மேற்பட்ட சக்கரங்களைக் கொண்டிருக்கலாம். சில சமயங்களில் நான்கு அல்லது ஐந்து துணை அமைப்புகள் கொண்டிருக்கலாம்.[5]

இந்த அமைப்பு அதிக எடைகளைத் தாங்குவதால் வலுவாக இருக்க வேண்டும் மற்றும் அதன் வடிவமைப்பு வானூர்தியின் எடை, சமநிலை மற்றும் செயல்திறனை பாதிக்கிறது.[6] உலங்கு வானூர்திகள் அவற்றின் அளவு மற்றும் பங்கைப் பொறுத்து சறுக்கல்கள் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட சக்கர அமைப்புகளைப் பயன்படுத்துகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Design Of The Aeroplane, Darrol Stinton 1983, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-632-01877-1, p. 63
  2. Wragg, David W. (1973). A Dictionary of Aviation (first ed.). Osprey. p. 269. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780850451634.
  3. "Landing gear". Aviation Dictionary. பார்க்கப்பட்ட நாள் 2023-11-30.
  4. Hoerner, Dr.-Ing. Sighard F. (1965). "Fluid-Dynamic Drag: Practical Information on Aerodynamic Drag and Hydrodynamic Resistance" (PDF).
  5. Article title பரணிடப்பட்டது 2021-03-10 at the வந்தவழி இயந்திரம் TABLE 1
  6. "Aviation Week 1950-09-11". September 11, 1950 – via Internet Archive.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறங்கமைப்பு&oldid=3937401" இலிருந்து மீள்விக்கப்பட்டது