உள்ளடக்கத்துக்குச் செல்

மிகோயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிகோயன்
Mikoyan
வகைபிரிவு
நிலைஒருங்கிணைந்த வானூர்தி நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது
நிறுவுகைதிசம்பர் 8, 1939; 84 ஆண்டுகள் முன்னர் (1939-12-08)
நிறுவனர்(கள்)ஆர்டம் மிகோயன்
மிக்கயில் குருவிச்
தலைமையகம் பெகோவோய் மாவட்டம், மாஸ்கோ, உருசியா
தொழில்துறை
  • வானறிவியல்
  • வான்வெளி
  • பாதுகாப்பு
  • மேம்பட்ட தொழில்நுட்பம்
உற்பத்திகள்சண்டை வானூர்தி
தாய் நிறுவனம்யுனைடெட் ஏர்க்ராப்ட் கார்ப்பரேஷன் (ஒருங்கிணைந்த வானூர்தி நிறுவனம்)
இணையத்தளம்migavia.ru

மிகோயன் (Mikoyan) என்பது வானூர்தி தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு துறையில் ஈடுபட்டுள்ள ஒரு உருசிய (முன்னர் சோவியத்) தொழில்நுட்ப நிறுவனமாகும்.[1] மாஸ்கோவின் பெகோவோய் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனமானது இராணுவ பயன்பாட்டிற்காக வானூர்திகளை வடிவமைக்கிறது.[2]

இந்த நிறுவனம் சோவியத் ஒன்றியத்தில் ஆர்டம் மிகோயன் மற்றும் மிக்கயில் குருவிச் ஆகியோரால் 1939 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இவ்விருவரின் பெயர்களைக் கொண்டு மிகோயன் குருவிச் வடிவமைப்பு பணியகம் (Mikoyan Gurevich Design Bureau) என்றும் புனைப்பெயராக மிக் (MiG) என்றும் பெயரிடப்பட்டது. பிப்ரவரி 2006 இல், உருசிய அரசாங்கம் சுகோய், இல்யூசின், இர்குட், துபோலேவ் மற்றும் யாகோவ்லேவ் ஆகிய நிறுவனங்களுடன் மிகோயன் நிறுவனத்தையும் இணைத்து யுனைடெட் ஏர்க்ராப்ட் கார்ப்பரேஷன் (ஒருங்கிணைந்த வானூர்தி நிறுவனம்) என்ற பெயரில் ஒரு புதிய நிறுவனத்தை அமைத்தது.[3]

மிக் ரக விமானங்களை சீனா, வட கொரியா மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகள் ஐக்கிய அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகளுக்கெதிராகப் பயன்படுத்தியுள்ளன. மேலும் சோவியத் ஒன்றியம் இந்தியா உட்பட பல்வெறு நாடுகளுக்கு மிக் ரக விமானங்களை ஏற்றுமதி செய்துள்ளது.[4]

வானூர்திகளின் பட்டியல்

[தொகு]

மிக் வானூர்திகள்

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகோயன்&oldid=3930005" இலிருந்து மீள்விக்கப்பட்டது