சுகோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுகோய்
Sukhoi
வகைகூட்டு-பங்கு நிறுவனம்
நிலைஒருங்கிணைந்த வானூர்தி நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது
நிறுவுகை1939; 85 ஆண்டுகளுக்கு முன்னர் (1939)
நிறுவனர்(கள்)பாவெல் சுகோய்
தலைமையகம் பெகோவோய் மாவட்டம், மாஸ்கோ, உருசியா
முதன்மை நபர்கள்பாவெல் சுகோய் (நிறுவனர்)
தொழில்துறை
  • வானறிவியல்
  • வான்வெளி
  • பாதுகாப்பு
  • மேம்பட்ட தொழில்நுட்பம்
உற்பத்திகள்
பணியாளர்26,177 (2011)[1]
தாய் நிறுவனம்யுனைடெட் ஏர்க்ராப்ட் கார்ப்பரேஷன் (ஒருங்கிணைந்த வானூர்தி நிறுவனம்)
இணையத்தளம்sukhoi.org

சுகோய் (Sukhoi) என்பது வானூர்தி தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு துறையில் ஈடுபட்டுள்ள ஒரு உருசிய (முன்னர் சோவியத்) தொழில்நுட்ப நிறுவனமாகும்.[2]  மாஸ்கோவின் பெகோவோய் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனமானது மக்கள் போக்குவரத்து மற்றும் இராணுவ பயன்பாட்டிற்காக வானூர்திகளை வடிவமைக்கிறது.

இந்த நிறுவனம் சோவியத் ஒன்றியத்தில் பாவெல் சுகோயால் 1939 ஆம் ஆண்டில் சுகோய் வடிவமைப்பு பணியகம் என்ற பெயரில் நிறுவப்பட்டது. பிப்ரவரி 2006 இல், உருசிய அரசாங்கம் மிகோயன், இல்யூசின், இர்குட், துபோலேவ் மற்றும் யாகோவ்லேவ் ஆகிய நிறுவனங்களுடன் சுகோயை இணைத்து யுனைடெட் ஏர்க்ராப்ட் கார்ப்பரேஷன் (ஒருங்கிணைந்த வானூர்தி நிறுவனம்) என்ற பெயரில் ஒரு புதிய நிறுவனத்தை அமைத்தது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sukhoi annual financial 2011 report (in Russian)" (PDF). Archived from the original (PDF) on 24 செப்டெம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 12 சனவரி 2015.
  2. "Contacts : Sukhoi Company (JSC) பரணிடப்பட்டது 2011-08-31 at the வந்தவழி இயந்திரம்." Sukhoi.
  3. "Russian Aircraft Industry Seeks Revival Through Merger பரணிடப்பட்டது 2015-11-07 at the வந்தவழி இயந்திரம்." The New York Times.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகோய்&oldid=3929921" இலிருந்து மீள்விக்கப்பட்டது