ஆளில்லாத வானூர்தி
தானியங்கி வானூர்தி (unmanned aerial vehicle - UAV) என்பது ஆளில்லாமல் தானே இயங்கும் வானூர்தியாகும். இவை ராணுவப் பணிகளுக்காக அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
தானியங்கி வானூர்தி என்பது மறுபயன்படத்தக்க, கட்டுப்படுத்தக்கூடிய, தளராது பறக்கக்கூடிய ஓர் ஊட்டாட்ட எந்திரம் அல்லது ஜெட். இத்தன்மையே இவற்றை ஏவுகணைகளில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. அதனால், ஏவுகணைகளை தானியங்கி வானூர்திகளாகக் கருதமுடியாது. ஏனெனில் அவை, மற்ற வழிநடத்தப்படும் வானூர்திகள் போலல்லாது, தானே ஆயுதமாக மாறி அழிக்கவல்லது. தானாகவோ அல்லது தொலைவிலிருந்தோ இயக்கப்பட்டாலும், இவற்றை திரும்ப பயன்படுத்த இயலாது. தானியங்கி வானூர்திகள் வடிவங்கள், அளவுகள், சிறப்பம்சம்களால் மாறுபடும். அடிப்படையாக தானியங்கி வானூர்திகள்,இரு வகையாக பிரிக்கப்படும். தொலைவிலிருந்து தொலைத்தொடர்பு மூலம் இயக்கப்படும் வானூர்திகள் மற்றும் தானாகவே மென்பொருள் நிரல்களால் கட்டுப்படுத்தப்படும் வானூர்திகள் ஆகும். தானியங்கி வானூர்திகள் ராணுவத்தால் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. உளவு பார்ப்பதற்கும் எதிரிகளை தாக்குவதற்கும் தானியங்கி வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன. அபாயகரமான செயல் திட்டங்களுக்கு தானியங்கி வானூர்திகளை பயன்படுத்தலாம். தீயணைப்பிற்கும் தானியங்கி வானூர்திகளை பயன்படுத்தலாம்.
வகைப்பாடுகள்
[தொகு]தானியங்கி வானூர்திகள் ஆறு வகைப்படும்:
- குறிப்பார்த்து இலக்கைத் தாக்கும் தானியங்கி வானூர்தி
- போர்க்களத்தில் வியூகம் வகுக்க உளவு விமானமாக பயன்படுத்தப்படுகின்றன.
- அபாயகரமான போர்த்தாக்குதலுக்கு போர்விமானமாக பயன்படுத்தப்படுகின்றன.
- போக்குவரத்து
- ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி.
- வர்த்தகம் மற்றும் படைத்துறை சாராத பயன்பாடுகள்.
பயன்பாடுகள்
[தொகு]தொலையுணர்தல்
[தொகு]தானியங்கி வானூர்திகள் மின்காந்த அலைவரிசை உணரிகள் மற்றும் ரசாயன உணரிகளைக் கொண்டு தொலை உணர்வு அறியும். தானியங்கி வானூர்தியின் மின்காந்த அலைவரிசை உணரிகளுல் அகச்சிவப்பு மற்றும் புறஊதாக் கதிர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
போக்குவரத்து
[தொகு]தானியங்கி வானூர்திகள் ராணுவ போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும். சிறிய ரக தானியங்கி வானூர்திகள் போர்க்களத்தில் அதிவேகமாக ஆயுதங்களை முன்னனி படையணியரிடம் அளிக்க பயன்படுத்தப்படுகின்றன.
அறிவியல் ஆராய்ச்சிகள்
[தொகு]- விமானிகளால் இயக்கப்படும் வானூர்திகள் செல்வதற்கு அபாயகரமான செயல்களுக்கு தானியங்கி வானூர்திகள் பயன்படுத்தப்படும். பல்வேறு வானியல் மற்றும் தட்பவெப்ப நிலை ஆராய்ச்சிகளுக்கு தானியங்கி வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன. சூறாவளி ஏற்படும் பொழுது தானியங்கி வானூர்திகள் பறந்து வானியல் தகவல்களை சேகரித்து, ஆராய்ச்சிக்காக் வானியல் ஆராய்ச்சி மையங்களுக்கு அனுப்பும். அண்டார்டிகா பகுதிகளுக்கு மோசமான வானிலையிலும் பறந்து பருவநிலை ஆராய்ச்சி தகவல்களை அறிய தானியங்கி வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன.
- ஆளில்லா உலங்கூர்திகளைப் பயன்படுத்தி திமிங்கிலங்களின் மூச்சு மாதிரிகளை எடுக்கப் பயன்பட்டுள்ளன; இதன் மூலம், திமிங்கிலங்களின் அனடி ஆய்வு செய்யப்படுகிறது[1].
மீட்பு பணிகள்
[தொகு]தானியங்கி வானூர்திகள் மீட்பு பணிகளுக்கு வெற்றிகமாக பயன்படுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. சூறாவளி ஏற்படும் பொழுது பாதிக்கப்பட்ட இடங்களை வேகமாக அறியவும் மீட்பு படையினருக்கு தகவல்களை வேகமாக அளிக்கவும் பயன்படுகின்றன.
வான் தாக்குதல்
[தொகு]ஆப்கனிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் மலைப்பகுதிகளில் தாக்குதல் நடத்த தானியங்கி வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன. தானியங்கி வானூர்திகள் ஏவுகணைகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும். ஆளில்லாத விமானங்கள் என்பதால் மனித உயிர்களுக்கு ஆபத்தில்லாமல் தாக்குதல் நடத்த் பயன்படுத்தப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- ↑ "Drone flies through whales' spouts to sample their breath". பார்க்கப்பட்ட நாள் 26 சனவரி 2022.