கண்காணிப்பு வானூர்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரித்தானியாவின் கண்காணிப்பு வானூர்தியில் கண்காணிப்பு சாதணங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

கண்காணிப்பு வானூர்தி (surveillance aircraft) என்பது கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படும் வானூர்தி ஆகும். உளவுத்தகவல் சேகரிப்பு, போர்க்கள கண்காணிப்பு, வான்வெளி கண்காணிப்பு, வேவு நடவடிக்கை, கவனக்கண்காணிப்பு, அவதானிப்பு (எ.கா. பீரங்கி கண்டறிதல்), எல்லைக் காவல் கண்கானிப்பு, மீன்பிடி பாதுகாப்பு போன்ற[1] நடவடிக்கைகளில் படைத்துறைகள் மற்றும் பிற அரசு நிறுவனங்களால் அவை இயக்கப்படுகின்றன. இந்தக் கட்டுரை போக்குவரத்துத் கண்காணிப்பு, சட்ட அமுலாக்கம் போன்ற செயல்பாடுகளுக்குப் பதிலாக, படைத்துறை நோக்கங்களுக்காககப் பயன்படுத்தப்படும் வானூர்திகள் பற்றிக் கவனம் செலுத்துகிறது.

கண்காணிப்பு வானூர்தி பொதுவாக எந்த ஆயுதங்களையும் எடுத்துச் செல்வதில்லை அல்லது வரையறுக்கப்பட்ட தற்காப்பு ஆயுதங்களை மட்டுமே எடுத்துச் செல்வதுண்டு.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Multi-mission surveillance". Retrieved 5 August 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்காணிப்பு_வானூர்தி&oldid=3487977" இலிருந்து மீள்விக்கப்பட்டது