உள்ளடக்கத்துக்குச் செல்

இராணுவப் போக்குவரத்து வானூர்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போயிங் சி-17 குளோப்மாஸ்டர் III போக்குவரத்து வானூர்தி

ராணுவப் போக்குவரத்து வானூர்திகள் (Military transport aircraft) வழமையான வணிகரீதியிலான போக்குவரத்து வானூர்திகள் செல்ல இயலாத இடங்களுக்கும் போர்த்தளங்களுக்கும் ராணுவ வீரர்கள், ஆயுதங்கள் மற்றும் ஏனைய ராணுவ தளவாடங்களைக் கொண்டு செல்லப் பயன்படும் சரக்கு வானூர்திகளாகும். குண்டுவீசும் வானூர்திகளை மூலமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இவை, இரண்டாம் உலகப் போரின்போது வான்வழியே வீரர்களைக் கொண்டுசென்று இறக்கவும் ராணுவ மிதவை வானூர்திகளை இழுத்துச் செல்லவும் பயன்படுத்தப்பட்டன. மேலும், சில ராணுவ போக்குவரத்து வானூர்திகள் வழமைக்கு மாறான சில பணிகள் செய்யவும், அதாவது வானிலேயே மற்ற விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பவும் சரக்குகளை தயார்செய்யப்படாத ஓடுதளங்கள் (அ) தற்காலிக ஓடுதளங்களில் இறக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Study into the impact of the global economic crisis on airframe utilisation" (PDF). Eurocontrol. January 2011. p. 21.
  2. "Antonov An-22". Aerocorner. பார்க்கப்பட்ட நாள் 3 November 2021.
  3. "Comparison of military transport aircraft". theaviationzone.com. பார்க்கப்பட்ட நாள் 15 August 2021.