போயிங் சி-17 குளோப்மாஸ்டர் III

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி-17 குளோப்மாஸ்டர் III
ஐக்கிய அமெரிக்க வான்படையின் சி-17 குளோப்மாஸ்டர் III-கள் நீலமுகட்டு மலைத்தொடரின் மேலாக தாழ்நிலை பயிற்சியின் போது.
வகை ராணுவப் போக்குவரத்து வானூர்தி
National origin அமெரிக்கா
உற்பத்தியாளர் மக்டொனல் டக்ளசு / பொயிங்
முதல் பயணம் 15 செப்டம்பர் 1991
அறிமுகம் 14 ஜூலை 1993
தற்போதைய நிலை In production, and in service
பயன்பாட்டாளர்கள் United States Air Force
Royal Air Force
Royal Australian Air Force
Canadian Forces
தயாரிப்பு எண்ணிக்கை 232 as of June 2011
அலகு செலவு $191 million (2010)[1]
முன்னோடி McDonnell Douglas YC-15

போயிங் (முன்னதாக மக்டொனல் டக்ளசு) சி-17 குளோப்மாஸ்டர் III (Boeing C-17 Globemaster III) ஆனது மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து வானூர்தியாகும். மக்டொனால் டக்ளசு நிறுவனத்தால் 1980-1990 காலகட்டத்தில் அமெரிக்க வான்படைக்காக வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது. சி-17 மூலம் சரக்கு மற்றும் ராணுவ வீரர்களை உலகின் எந்த போர்த்தளத்திற்கும் துரிதமாக கொண்டு செல்ல முடியும். மேலும் வழமையான போக்குவரத்து முறைகள் மூலம் செல்ல இயலாத இடங்களிலிருந்து பிணியாளர்களை மருத்துவ முகமைக்கு கொண்டு செல்லவும் அத்தியாவசியப் பொருட்களை பேரிடர்ப் பகுதிவாழ் மக்களுக்களிக்கவும் இவ்விமானம் பயன்படுத்தப்படுகிறது. இந்த விமானத்தின் பெயரானது, முற்றிலும் தொடர்பற்ற இருவேறு ஐக்கிய அமெரிக்க ராணுவ சரக்கு விமானங்களின் பெயர்களை மூலமாகக் கொண்டுள்ளது. அவ்விமானங்கள் முறையே டக்ளசு சி-74 குளோப்மாஸ்டர் மற்றும் டக்ளசு சி-124 குளோப்மாஸ்டர் II ஆகியனவாகும்.

சி-17 விமானம் ஐக்கிய அமெரிக்க, ஐக்கிய இராச்சிய, ஆத்திரேலிய, கனடா, நேடோ, கத்தார் வான்படைகளால் இயக்கப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்டுகளும் இந்தியாவும் இவ்வகை விமானங்கள் வாங்க முடிவெடுத்துள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Fa8614-06-d-2006 (22 June 2010). "Department of Defense Web Site". DOD.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
C-17 Globemaster III
என்பதில் ஊடகங்கள் உள்ளன.