உள்ளடக்கத்துக்குச் செல்

கடற்கண்காணிப்பு வானூர்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் ஒரு கடற்கண்காணிப்பு வானூர்தி

கடற்கண்காணிப்பு வானூர்தி அல்லது கடல்சார் வேவு வானூர்தி என்பது ஒரு நிலைத்த இறக்கை வானூர்தி ஆகும். இது கடல் கண்காணிப்பிற்காக தண்ணீருக்கு மேல் நீண்ட நேரம், குறிப்பாக நீர்மூழ்கி எதிர்ப்புப் போர், கப்பல் எதிர்ப்பு போர், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக இயக்கக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள்கள், கப்பல்கள், ஆளில்லாத வானூர்திகள், உலங்கு வானூர்திகள் போன்ற கடல்சார் கண்காணிப்பு ஆதாரங்களில் கடற்கண்காணிப்பு வானூர்தி முக்கிய இடம்பெறுகிறது.[1] நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர் நடவடிக்கைகளுக்காக கடல் கண்காணிப்பு வானூர்திகள் பொதுவாக வானில் பயன்படுத்தக்கூடிய ஊடொலி அலை மிதவைகளையும் நீர்மூழ்கிக் குண்டுகளையும் குறை உயர நீண்ட நேரப்பறப்பிற்கு கொண்டு செல்கின்றன.[2]

உசாத்துணை

[தொகு]
  1. Defence Committee, James Arbuthnot, Great Britain: Parliament: House of Commons (2012). Future Maritime Surveillance. Authority of the House of Commons London: The Stationery Office Limited. p. 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-215-04847-9. "Fifth Report of Session 2012–13, Vol. 1", கூகுள் புத்தகங்கள்.
  2. Panayirci, E.; Isik, C.; Ince, A.N.; Topuz, E. (2012). "5: Sensor Platforms". Principles of Integrated Maritime Surveillance Systems. United States: Springer US. p. 188. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4615-5271-0. [1], கூகுள் புத்தகங்கள்.