சுகோய் எஸ்யு-57
Appearance
(சுகோய் பிஏயூ எப்ஏ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எஸ்யு-57 Su-57 | |
---|---|
வகை | கரவு பன்முகச் சண்டை வானூர்தி |
உருவாக்கிய நாடு | உருசியா |
உற்பத்தியாளர் | ஒருங்கிணைந்த வானூர்தி நிறுவனம் (யுனைடெட் ஏர்க்ராப்ட் கார்ப்பரேஷன்) |
வடிவமைப்பாளர் | சுகோய் |
முதல் பயணம் | 29 சனவரி 2010 |
அறிமுகம் | 25 திசம்பர் 2020 |
தற்போதைய நிலை | பயன்பாட்டில் உள்ளது[1] |
முக்கிய பயன்பாட்டாளர் | உருசிய வான் படை |
உற்பத்தி | 2019–தற்போது |
தயாரிப்பு எண்ணிக்கை | 32[2] |
மாறுபாடுகள் | சுகோய்/எச்ஏஎல் எஃப்ஜிஎஃப்ஏ |
சுகோய் எஸ்யு-57 என்பது ஒரு மீயொலிவேக பன்முகச் சண்டை வானூர்தியாகும்.[3] இது உருசிய நாட்டின் சுகோய் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்ற இரட்டைப் பொறி கொண்ட ஐந்தாம் தலைமுறை சண்டை வானூர்தியாகும்.[4] பன்முகச் சண்டை வானூர்தியான இது வான் மேலாதிக்கம், தரைத்தாக்குதல் ஆகிய நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த முடியும்.[5]
இது உருசிய இராணுவ சேவைக்காக கரவு தொழில்நுட்பம் கொண்டு வடிவமைக்கப்பட்ட முதல் வானூர்தியாகும். இந்த வானூர்தியானது உருசிய வான்படையில் மிக்-29 மற்றும் சுகோய் எஸ்யு-27 ஆகிய வானூர்திகள் ஓய்வு பெறும் போது அதிகளவில் சேர்க்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் முன்மாதிரி 2010 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.[6]
விவரக்குறிப்புகள்
[தொகு]தரவு எடுக்கப்பட்டது: [7]
பொது இயல்புகள்
- குழு: 1
- நீளம்: 20.1 m (65 அடி 11 அங்)
- இறக்கை விரிப்பு: 14.1 m (46 அடி 3 அங்)
- உயரம்: 4.6 m (15 அடி 1 அங்)
- இறக்கைப் பரப்பு: 78.8 m2 (848 sq ft)
- வெற்றுப் பாரம்: 18,000 kg (39,683 lb)
- மொத்தப் பாரம்: 25,000 kg (55,116 lb)
- தரையிலிருந்து தூக்கக் கூடிய பாரம்: 35,000 kg (77,162 lb)
- எரிபொருள் கொள்ளவு: 10,300 kg (22,700 lb)
- சக்தித்தொகுதி: 2 × சாட்டர்ன் ஏஎல்41எப்1 தாரை பொறி (பின்னெரியுடன்), 88.3 kN (19,900 lbf) உந்துதல் தலா
செயற்பாடுகள்
- அதிகபட்ச வேகம்: மாக் 2
- வரம்பு: 3,500 km (2,175 mi; 1,890 nmi)
- உச்சவரம்பு 20,000 m (65,617 அடி)
- ஈர்ப்பு விசை வரம்பு: +9.0
- சிறகு சுமையளவு: 371 kg/m2 (76 lb/sq ft)
- தள்ளுதல்/பாரம்: 1.16
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The first production Su-57 fighter entered the air regiment of the Southern Military District". TACC. பார்க்கப்பட்ட நாள் 22 May 2023.
- ↑ "Su 57production". Military Watch Magazine.
- ↑ "Rafale". WordReference. Archived from the original on 26 November 2015. பார்க்கப்பட்ட நாள் 26 November 2015.
"Gust of wind". WordReference. Archived from the original on 26 November 2015. பார்க்கப்பட்ட நாள் 26 November 2015. - ↑ O'Keeffe, Niall (17 June 2009). "Sukhoi secretive on PAK-FA programmes". Flightglobal. பார்க்கப்பட்ட நாள் 15 June 2014.
- ↑ Sukhoi(21 February 2014). "Т-50-2 fighter aircraft made the flight to Akhtubinsk". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 5 March 2014.
- ↑ Sukhoi(29 January 2010). "Sukhoi Company launches flight tests of PAK FA advanced tactical frontline fighter". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 26 January 2011. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-05-01. பார்க்கப்பட்ட நாள் 2015-01-13.
- ↑ "Sukhoi T-50 Shows Flight-Control Innovations". Aviation Week & Space Technology. Archived from the original on 27 March 2014. பார்க்கப்பட்ட நாள் 14 November 2014.