உள்ளடக்கத்துக்குச் செல்

மிக்-29

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிக்-29
MiG-29
வகை வான் மேன்மை
பன்முகச் சண்டை
உருவாக்கிய நாடு சோவியத் ஒன்றியம்
வடிவமைப்பாளர் மிகோயன்
முதல் பயணம் 6 அக்டோபர் 1977[1]
அறிமுகம் ஆகத்து 1983
தற்போதைய நிலை பயன்பாட்டில் உள்ளது
முக்கிய பயன்பாட்டாளர்கள் உருசிய வான்படை
இந்திய வான்படை
உசுபெக் வான்படை
உக்ரைனிய வான்படை
உற்பத்தி 1981–
தயாரிப்பு எண்ணிக்கை >1,600[2]
மாறுபாடுகள் மிக்-35

மிகோயன் மிக்-29 என்பது ஒரு மீயொலிவேக பன்முகச் சண்டை வானூர்தியாகும். இது சோவியத் ஒன்றியத்தில் மிகோயன் நிறுவனத்தால் 1970 களின் பிற்பாதியில் வடிவமைக்கப்பட்ட வான் மேன்மை வானூர்தியாகும்.[3]

முதலில் எதிரி விமானங்களுக்கு எதிராகப் போரிடுவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், மிக்-29 வானூர்திகள் பலவிதமான செயல்பாடுகளைச் செய்யும் திறன் கொண்டவை. இவை பல ஏவுகணைகள் மற்றும் துள்ளியமாக தாக்கும் ஆயுதங்கள் ஆகியவற்றை தாங்கிச் செல்ல வல்லவை. வான்படை தவிர கடற்படையால் பயன்படுத்த எதுவாக வானூர்தி தாங்கிக் கப்பல்களிலிருந்து ஏவ ஏதுவாக இது மாற்றியமைக்கப்பட வடிவங்களிலும் தயாரிக்கப்பட்டது.

வடிவமைப்பு

[தொகு]

மிக்-29 சுகோய் எஸ்.யு-27 உடன் பரந்த காற்றியக்கவியல் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. ஆனால் சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. இந்த வானூர்தி தலா இரண்டு நடு இறக்கைகள், வால் இறக்கைகள் மற்றும் செங்குத்து துடுப்புகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. தானியங்கி பட்டிகைகள் இறக்கைகளின் முன் விளிம்புகளில் பொருத்தப்பட்டிருக்கின்றது; அவை ஆரம்பத்தில் நான்கு பிரிவுகளாகவும், பிந்தைய வகைகளில் ஐந்து பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. பின் இறக்கைகளின் விளிம்புகளில் கட்டுப்பாடு இதழ்கள் மற்றும் இறக்கைத் துடுப்புகள் உள்ளன.[4]

இது பரந்த இடைவெளி கொண்ட இரண்டு தாரைப் பொறிகளைக் கொண்டுள்ளது. பொறிகளுக்கு இடையே உள்ள இடைவெளி அதிக ஏற்றத்தை உருவாக்குகிறது, இது வானூர்தியின் பறக்கும் திறனை மேம்படுத்துகிறது. பொறிகள் முன் இறக்கைகளுக்கிடையே பொருத்தப்பட்டிருக்கும் உள்ளீட்டு துளைகள் மூலம் காற்றை உள்ளே இழுக்கின்றன. இவை அதிக மாக் எண் வேகத்தில் பறக்க உள்ளிழுக்கும் காற்றின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய சரிவுகளைக் கொண்டுள்ளன.[5] இது வெளிப்புற எரிபொருள் தொட்டிகள் இல்லாமல் 1500 கி.மீ. தூரமும், வெளிப்புற தொட்டிகளையும் கொண்டு 2100 கி.மீ. தூரமும் பறக்க வல்லது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lambert, Mark. Jane's All The World's Aircraft 1993–94. Coulsdon, UK: Jane's Data Division, 1993. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7106-1066-1
  2. "The MiG-29 fighters family". பரணிடப்பட்டது 19 சூன் 2015 at the வந்தவழி இயந்திரம். Russian Aircraft Corporation MiG, 8 December 2014. Retrieved: 19 September 2018.
  3. Gordon, Yefim; Davison, Peter (2005). Mikoyan Gurevich MiG-29 Fulcrum. North Branch, Minnesota: Specialty Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58007-085-0.
  4. Usa, Ibp (7 February 2007). Russia Air Force Handbook. International Business Publications, USA. p. 180. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4330-4115-0. Archived from the original on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 10 January 2016.
  5. Lake, Jon. "Mikoyan MiG-29 'Fulcrum'". World Air power Journal. Volume 4, Winter 1990/91. London: Aerospace Publishing. pp. 44–91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-874023-06-9. பன்னாட்டுத் தர தொடர் எண் 0959-7050
  6. "MiG-29 Fulcrum Fighter Bomber". Airforce Technology. Archived from the original on 16 பெப்பிரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 14 நவம்பர் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிக்-29&oldid=3923843" இலிருந்து மீள்விக்கப்பட்டது